சர்க்கரை நோயாளிகளுக்கான புது நெல்லு

அரிசி சாதம் சாப்பிட்டால் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு உடனே உயர்ந்துவிடும் என்று பயந்து பல சர்க்கரை நோயாளிகள், அரிசியை முற்றிலும் தவிர்க்கின்றனர். சர்க்கரை நோய் 30 வயதுக்குக் கீழுள்ளவர்களைக் கூட தாக்கும் நிலையில், சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற நெல் வகைகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர், ஆந்திராவைச் சேர்ந்த ஆச்சார்யா என்.ஜி.ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். ஒவ்வொரு நெல் வகையின் 'க்ளைசெமிக் இன்டெக்ஸ்’ (Glycemic index) எவ்வளவு என்று ஆராய்ந்த ஆய்வாளர்கள், 14 நெல் வகைகளில் குறிப்பாக, சம்பா மசூரி என்றழைக்கப்படும் பி.பி.டி.5204-ல் 'க்ளைசெமிக் இன்டெக்ஸ்’ குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த நெல் வகைகளில் உள்ள ஆன்டிடயாபடிக் ஜீன்களைத் தனியாகப் பிரித்தெடுத்துப் புதிதாக நெல் வகைகளை உருவாக்கும் பணியில் ஆய்வாளர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த நெல் வகைகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்போது, சர்க்கரை நோயாளிகள் பெரிதும் பயன்பெறக்கூடிய இனிப்பான தகவலாக இருக்கும்.

புற்றுநோயைக் கண்டறிய புதிய கருவி

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவும் விலை குறைவான கருவியை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் பெண்கள், கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 74,000 பெண்கள், இதற்கு பலியாகின்றனர். கர்ப்பபை வாய் புற்றுநோயைக் கண்டறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை மாவட்ட பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இருக்கிறது. கிராமப்புற பெண்கள் அதிக அளவில் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ளவதில்லை. இதனால் கிராமப்புறங்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

தற்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் 'ஏவி மேக்னிவிஷ§வலைசர்’ எனப்படும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும். 10,000 ரூபாய்க்கு கிடைக்கும் இந்தக் கருவியை சமூக சுகாதார மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுவப்பட உள்ளது. கிராமப் பகுதியிலேயே மிகவும் பாதுகாப்பான கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம், கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் இறப்பு விகிதம் பெருமளவில் குறையும் என்று மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

போலியோ ஃப்ரீ இந்தியா

இந்த ஆண்டு போலியோவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்துவதற்கான கடைசி நாள் இந்த மாதம் 13-ம் தேதி. இந்த ஆண்டும் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றால், 'போலியோ இல்லாத நாடு’ என்று உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்படும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு போலியோவால் ஒரு நாடு பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே, ஒரு நாட்டுக்கு 'போலியோ இல்லாத நாடு’ என்ற அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் அளிக்கும். இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவர்கூட போலியோவால் பாதிக்கப்படவில்லை. இந்த ஆண்டும் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இந்திய அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் வாயிலாக, போலியோ இல்லாத இந்தியா மலர்ந்திருக்கிறது. விரைவில் இதற்கான அங்கீகாரமும் கிடைத்துவிடும்.

வந்துவிட்டது மலேரியா தடுப்பூசி

மலேரியாவால் ஆண்டுதோறும் ஆறரை லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியாவை ஏற்படுத்தும் 'ப்ளாஸ்மோடியம்’ கிருமிக்கு எதிராக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகள், நீண்ட காலமாக நடந்து வருகின்றன. சிங்கப்பூரைச் சேர்ந்த நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மலேரியாவுக்கு எதிரான சக்திவாய்ந்த தடுப்பூசியைத் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தடுப்பூசியின் மூலம் உடலில் தோன்றும் ஆன்டிபாடிகள், ரத்தச் சிவப்பணுக்களுக்குள் 'ப்ளாஸ்மோடியம்’ கிருமி புகாமல் தடுக்கின்றன. இந்தத் தடுப்பூசி மலேரியா ஒழிப்பில் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடுதேடி வரும் ரத்தம்...

மஹாராஷ்டிராவில் 'பிளட் ஆன் போன்’ என்ற பெயரில் 'வீடு தேடி வரும் ரத்தம் சேவை’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு ரத்த தானம் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும், ரத்தம் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. இதனால், அறுவைசிகிச்சைக்கு ரத்த தானம் செய்பவர்களைத் தேடிப்பிடிப்பது என்பதும் சிரமமாக உள்ளது. இந்தச் சிரமத்தைப் போக்கும் வகையில் மஹாராஷ்டிராவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 104 என்ற எண்ணுக்கு அழைத்து, தேவைப்படும் ரத்த வகையைச் சொன்னால் போதும், உடனடியாக ரத்த வங்கியில் இருந்து ரத்தம் அனுப்பப்படும். முதல்கட்டமாக இந்தத் திட்டம், புனே நகரில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக முக்கியமான 10 நகரங்களில் ஆரம்பிக்க உள்ளனர். போக்குவரத்துச் செலவுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும். இதுபோன்ற திட்டத்தை தமிழகத்திலும் ஆரம்பித்தால், பலரும் பயன் அடைவார்கள்.