விளம்பரங்களில் வரும் மாடல்களைப் போல், வெள்ளை நிறமும் பளிச் சருமமும் வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்குமே இருக்கும். அதற்காக, நிறத்தைக் கூட்டும் க்ரீம்களைப் பயன்படுத்தி, எப்படியாவது வெள்ளையாகிவிட முயற்சிப்பது வழக்கமாகிவிட்டது. ஆண்களும் இப்போ பிளீச்சிங், ஃபேஷியல், கலரிங் என பார்லர்களுக்குப் படையெடுக்கிறார்கள்.

பிளீச்சிங் சரியா... தப்பா? அது சருமத்துக்கு எந்த அளவு பலனைத் தரும்?

சென்னை அடையாறு ட்விங்கிள் ஃபேமிலி சலூனின் அழகுக்கலை நிபுணர் ஸ்ரீதேவியிடம் பேசுவோம்...

''பிளீச்சிங், தோலின் மேல் பகுதியில் செயல்பட்டு, மெலனின் உற்பத்தியைத் தாமதப்படுத்தும். இதனால் சருமத்தில் கருமை குறைந்து, சருமம் பளிச்சிடும். கடையில் கிடைக்கும் ரசாயன பிளீச்சிங் சாதனங்கள், தோலில் பாதிப்பையும் ஏற்படுத்திவிடக்கூடும் என்பதால், ஹெர்பல் வகை பிளீச்சிங் பயன்படுத்துவது நல்லது'' என்கிறார் ஸ்ரீதேவி.

'பிளீச்சிங் செய்வதன் முக்கிய நோக்கமே, முகத்தில் சுருக்கங்களை நீக்கி, பளபளப்பைக் கூட்டுவதுதான்.

16 வயதுக்குக் கீழ் இருப்பவர்களின் சருமம், மிகவும் மென்மையாக இருக்கும். எனவே, இவர்கள் எந்த வகையான பிளீச்சிங்கையும் செய்யக் கூடாது. வறண்ட சருமத்தினரும் பிளீச்சிங் செய்துகொள்வது நல்லது அல்ல.

சாதாரணமான சருமம் உள்ளவர்கள் பிளீச் செய்தால், முகம் இன்னும் பளபளப்பாக இருக்கும். ஆனால், அவர்கள் குளிர் காலத்தில் பிளீச் செய்யக் கூடாது. ஏனெனில், இந்தக் காலக்கட்டத்தில் சருமம் மிகவும் வறட்சியாக இருக்கும். பிளீச் செய்யும்போது சருமம் பாதிக்கப்படலாம்.

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்குத்தான் பிளீச்சிங் மிகவும் நல்லது. பிளீச் செய்வதற்கு முன்பு, கை அல்லது காதின் பின்புறத்தில் 'பேட்ச்’ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சருமத்தில் ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்திய பிறகே பிளீச்சிங் தொடங்க வேண்டும். அரிப்பு, எரிச்சல் மாதிரியான அறிகுறிகள் ஏற்பட்டால், கண்டிப்பாகச் செய்யக் கூடாது.

நிறையப் பேர், பிளீச்சிங் செய்த சில நாட்களில், முகம் கருப்பாகிவிட்டது என்று குறை சொல்வார்கள். பிரச்னை பிளீச்சிங்கில் இல்லை. பிளீச்சிங் செய்தபிறகு, சருமத்தைச் சரியாகப் பராமரிக்காததே காரணம்.

பொதுவாக பியூட்டி பார்லர்களில் பிளீச்சிங் செய்தவுடன், ஃபேஷியல் செய்யப்படும். ஆனால், வீட்டில் செய்துகொள்பவர்கள், அவசர அவசரமாக பிளீச்சிங் செய்த பிறகு, ஃபேஷியல் செய்ய மாட்டார்கள். சன் ஸ்கிரீனும் போடமாட்டார்கள். இதனால் முகம் சில நாட்களில் கருமையாகிவிடும். மேலும் சுருக்கங்களும் ஏற்படும். எனவே, பிளீச்சிங் செய்ததும், ஃபேஷியல் செய்ய வேண்டும். அதன் பிறகு அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் வெளியில் செல்ல வேண்டும்.

ஆண்கள் பிளீச்சிங் செய்வதற்கு முன்பு ஷேவ் செய்யக் கூடாது. கடினமான தோல் என்பதால், எரிச்சல் ஏற்படும்.

சிலரின் முகம் எப்போதும் பொலிவாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், 15 நாட்களுக்கு ஒரு முறை பிளீச்சிங் செய்துகொள்வார்கள். இதுவும் தவறு. மாதத்துக்கு ஒரு முறை பிளீச்சிங் செய்வதுதான் நல்லது. இப்படிச் செய்தால் மட்டுமே சருமம் பொலிவாக இருக்கும்' என்கிறார்.

பார்த்துப் பண்ணுங்க!

- ஹெச்.ராசிக் ராஜா

படம்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்

வீட்டிலேயே செய்துகொள்ள ஹெர்பல் பிளீச்சிங்

வீட்டில் செய்துகொள்ள ஹெர்பல் பிளீச்சிங் நல்லது. எலுமிச்சை, தேன், தயிர், இந்த மூன்றையும் அரை ஸ்பூன் எடுத்து, நன்றாகக் கலக்க வேண்டும். இதைக் கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதில் எந்த ரசாயனமும் இல்லை என்பதால், 20 நாட்களுக்கு ஒரு முறைகூட இப்படிச் செய்துகொள்ளலாம். இந்தக் கலவை, வாய், கண்ணில் பட்டால் பதற்றப்படாமல், ஐஸ் நீரைவைத்துக் கழுவ வேண்டும். துணியைவைத்து லேசாகத் துடைத்து ஒத்தடம் கொடுக்கலாம்!