Published:Updated:

பளிச்சென மாற்றும் 'பார்லர்’ பியூட்டி

பளிச்சென மாற்றும் 'பார்லர்’ பியூட்டி

பளிச்சென மாற்றும் 'பார்லர்’ பியூட்டி

பளிச்சென மாற்றும் 'பார்லர்’ பியூட்டி

Published:Updated:
பளிச்சென மாற்றும் 'பார்லர்’ பியூட்டி
பளிச்சென மாற்றும் 'பார்லர்’ பியூட்டி

'பார்லருக்குப் போகாத பெண்ணைப் பார்க்கமுடியல’ என்று கிராமத்துப் பெரியவர்களும் பாடும் அளவுக்கு, இன்று கிராமப்புறத் தெருக்களிலும் பார்லர்கள் பெருகிவிட்டன. பார்லருக்குப் போனாலே, முகம் பளிச்சென மின்னும் என்பது பலரின் நம்பிக்கை. பார்லரில் செய்யும் சில அழகியல் அம்சங்களைச் சொல்கிறார், சென்னை நியூஸ்டைல் டிரெண்ட் அழகுக்கலை நிபுணர் ராதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சருமம் (பிளீச்சிங்)

முன்பெல்லாம் வறண்ட சருமத்தினருக்கு, பிளீச்சிங் கிடையாது. ஆனால், வறண்ட சருமத்துக்கும் தற்போது ஜெல் பிளீச்சிங் வந்துவிட்டது. அதாவது தோலின் மேல் தோலில் இருக்கும் அழுக்கை எடுத்துச் சுத்தப்படுத்திவிடும். பருக்கள் பழுத்து இருந்தாலும், ஜெல் பிளீச்சிங் செய்யும்போது காய்ந்துவிடும். முகம் பளிச்சென மாறும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிளீச் செய்துகொள்வது நல்லது. மாதம் ஒரு முறை செய்தால், முகம் கருத்துவிட வாய்ப்புகள் அதிகம்.

கை (வேக்ஸிங்)

கை பட்டுப்போன்று மிருதுவாக இருக்க வேண்டும். ஆனால், சிலருக்கு,  கை - கால்களில் தேவையற்ற முடிகள் இருக்கும். இந்த முடிகளை நீக்குவதற்காகச் செய்யப்படுவதே வேக்ஸிங். மாதம் ஒரு முறை கட்டாயம் வேக்ஸிங் செய்ய வேண்டும்.  தொடர்ந்து வேக்ஸிங் செய்யும்போது, முடி வலுவிழந்து, வளர்ச்சியும் குறையும். வேக்ஸிங் செய்துகொண்ட பிறகு, காம்பர் (Camphor) லோஷனை தடவுவதன் மூலம், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கும்.  எந்த அலர்ஜியும் ஏற்படாமல் இருக்கும்.  

புருவம்  உதட்டு (த்ரெடிங்)

##~##

த்ரெடிங் முறையில் புருவம், உதட்டின் மேல் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் பிளேடைப் பயன்படுத்திப் புருவங்களை ஷேப் செய்வது, பிளக்கரை வைத்துப் பிடுங்குவது என தாங்களே அழகுபடுத்திக்கொள்வார்கள். இது ஆபத்தானது.  புருவத்தில் அடர்ந்த முடியை மட்டும் எடுத்தால் போதும். மற்ற முடிகளைத் தொடக் கூடாது. ஏனெனில், மெல்லிய வளராத முடியை எடுக்கும்போது, அது முடியின் அடர்த்தியை அதிகமாக்கிவிடும். ஒழுங்கற்றும் வளரத் தொடங்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை த்ரெடிங் செய்துகொள்ளலாம். உதட்டின் மீதுள்ள முடிகளை 20 நாட்களுக்கு ஒருமுறை எடுத்தால் போதும். த்ரெடிங் செய்த பிறகு, சென்சிட்டிவ் ஆயில் தடவுவோம். சிலருக்கு, புருவத்தில் முடி இருக்காது. அவர்களுக்கும், இருக்கும் முடியைவைத்து வில் போன்ற அமைப்பைக் கொண்டுவரலாம். இவர்கள், புருவத்தில் முடி வளர தினமும் விளக்கெண்ணெயைத் தடவிக்கொள்ளலாம். தினமும் ஒரு நெல்லிக்காயை ஜூஸாக்கிக் குடிக்கச் சொல்வோம்.

மூக்கு (பிளாக்ஹெட்ஸ்)

ஒருவரின் மூக்குதான் முகத்தை எடுப்பாகக் காட்டும். மூக்கில் ஏற்படும் முக்கியப் பிரச்னை, பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் இருக்கும்.  சிலருக்கு மூக்கில் மட்டுமல்லாமல், மூக்கைச் சுற்றியுள்ள உதடு, காது ஓரம்கூட வரலாம்.  

கடைகளில் விற்கும், பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் வாங்கிப் பயன்படுத்துவதால், நாள்பட்ட பிளாக் ஹெட்ஸை முழுவதுமாக நீக்க முடியாது. பார்லரில் இதற்கெனப் பிரத்யேக முறையில் நீக்கப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக செய்துகொள்ளவேண்டும். வறண்ட சருமத்தினர் டர்மரிக் க்ளென்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு பவுல் தண்ணீரில், ஒரு துளி சந்தன எண்ணெயை விட்டு, முகத்தை நன்றாகத் துடைக்க வேண்டும். இது அரோமா தெரபி முறை. பிறகு ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவிவிட்டு, மாய்ஸ்சரைஸ்ட் க்ரீம்போடலாம்.

நார்மல் சருமத்தினர், லாவண்டர் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி நன்றாக முகத்தை கழுவவேண்டும்.  ஒரு துளி வெள்ளரி சன்ஸ்க்ரீன் லோஷனுடன், அரோமா சென்சிட்டிவ் ஆயிலை கலந்து முகத்தில் போடலாம். சிலருக்கு முகத்தில் ஆங்காங்கே அடை மாதிரி கருப்புத் திட்டுக்கள் இருக்கும். இதற்கு, மினரல் க்ளோ ஸ்க்ரப் போட்டு மசாஜ் செய்து நன்றாகத் துடைத்தபிறகு, ஆவி பிடிக்கலாம். கரும்புள்ளிகள் மறையும். பாதாமை ஊறவைத்து, அரைத்து, பாலுடன் சேர்த்து, தினமும் காலையில் முகத்தில் பூசிக் கழுவலாம்.  

- ரேவதி, படங்கள்: ஜெ.தான்யராஜூ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism