Published:Updated:

வந்தாச்சு தேர்வு!

வெற்றிப் படிகள் 6

வந்தாச்சு தேர்வு!

வெற்றிப் படிகள் 6

Published:Updated:
வந்தாச்சு தேர்வு!

குப்பில் முதல் மாணவனாக வரும் ரமேஷ§க்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல். ''என்னடா, நாளைக்கு எக்ஸாமை வெச்சிட்டு, இப்படிக் காய்ச்சல்னு படுத்திட்டியே...?  குரூப் ஸ்டடினு ஃப்ரெண்ட்ஸ்களோட கும்மாளம் போட்டதுனால வந்த வினைதான்’ என்று திட்டியபடியே, அப்பா, அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகளைக் கொடுத்த டாக்டர், கூடவே, 'உங்க பையனுக்கு பிரஷரும் அதிகமா இருக்கு... நல்லாத் தூங்கணும்...’ என்று அதற்கும் மருந்துகளைத் தந்திருக்கிறார்.

'பள்ளி மாணவனுக்கு ஹை பிரஷரா?’ என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த வயதிலேயே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வந்தாச்சு தேர்வு!

பிரஷர் வரக் காரணம், பள்ளி, வீடு என எல்லா இடங்களிலும் அவனுக்குத் தரப்படும் பிரஷர்தான். பள்ளியில், 'நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்து பள்ளிக்கே பெருமை சேர்க்கணும்’ என்று வகுப்பாசிரியர் முதல் தலைமையாசிரியர் வரை வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்...! 'நாம ஃபார்வேர்டு கம்யூனிட்டி. 95% வாங்கினாக்கூட, விரும்பிய சீட் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்டா...’ என்ற அப்பாவின் பயமுறுத்தல்...!

இதையே யோசித்து யோசித்து, பாடங்களை வாசித்து, மூளையைக் கசக்கியதன் விளைவுதான், ரமேஷ§க்கு மன அழுத்தத்தையும் பயத்தையும் தந்திருக்கிறது. ரத்த அழுத்தமும் எகிறிவிட்டது!

நன்கு படிக்கும் மாணவனுக்கே இந்தக் கதி என்றால், சுமாராகப் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன?

வந்தாச்சு தேர்வு!

பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கிவிட்டன. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும், இதர வகுப்புகளுக்கான தேர்வுகளும் இதோ தொடங்கப் போகின்றன. என்னதான் 8-ம் வகுப்பு வரை பாஸ், ஃபெயில் இல்லை என்றாலும் முழு ஆண்டுத் தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு ஒருவித மன அழுத்தம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ''மாணவப் பருவத்தில் எதிர்கொள்ளும் பொதுத் தேர்வு அல்லது முழு ஆண்டுத் தேர்வு சற்று கடினமானதுதான். இந்த நேரத்தில் விளையாட்டு, டிவி, பொழுதுபோக்கு என அனைத்தையும் துறந்து 'படி படி’ என்று பெற்றோரும், ஆசிரியர்களும் நெருக்கடி கொடுப்பது அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எளிய திட்டமிடல் மூலமாக இந்தப் பிரச்னையை எளிதில் சமாளிக்கலாம்' என்கிறார், ஈரோடு மாருதி மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் முரளிதரன். தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதற்கும், பெற்றோர்கள் அவர்களைத் தயார்படுத்துவதற்கும் செய்ய வேண்டியவை பற்றி டாக்டர் முரளிதரன் விவரிக்கிறார்.

வந்தாச்சு தேர்வு!
வந்தாச்சு தேர்வு!

அச்சம் தவிர்ப்போம்!

பாரதி சொன்னதுபோல் முதலில் 'அச்சம் தவிர்!’. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் சேர்த்துதான். இன்றைக்கு பெரும்பான்மையான பெற்றோர்கள், தேர்வை நினைத்துப் பயந்து, தங்கள் பிள்ளைகளையும் பயத்தில் தள்ளிவிடுகின்றனர். தேர்வு மட்டுமே நம் குழந்தைகளின் வாழ்க்கை இல்லை. அது ஓர்அங்கம்தான். வெற்றியை அளக்க ஓர் அளவுகோலே தவிர, வெற்றியைத் தீர்மானிக்கும் கருவி இல்லை. பயத்தைத் தவிர்த்து, குழந்தைகளிடம் முழுமையான அன்பைக் காட்டவேண்டும். 'தேர்வின் முடிவுகள் எப்படி இருந்தாலும் முழமையாக ஏற்றுக்கொள்வேன்’ என்ற நம்பிக்கையைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

வந்தாச்சு தேர்வு!

 ஆரோக்கியமான பழக்கங்கள்

தினசரி வாழ்க்கையை முறைப்படுத்தாமல் செயல்படும் பெற்றோர்கள்தான், தேர்வின் கவலைக்கு அதிகம் ஆளாகின்றனர்.  எந்த ஒரு காரியத்தையும் கடைசி நிமிடம் வரை எடுத்துச் சென்று, அதைச் செயல்படுத்தி நிறைவேற்றும் பழக்கம் உடையவர்கள் இவர்கள். இந்தப் பழக்கத்தைப் பார்த்து வளரும் குழந்தைகளும் தங்கள் படிப்பை முதலில் தவிர்த்துவிட்டு, பின்பு கடைசி நேரத்தில் போராடும் பழக்கத்துக்குப் பழகிக்கொள்வார்கள். தினசரி வேலைகளையும் நேரத்தையும் அடிப்படையாகக் கொண்ட அட்டவணையைத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.  அதற்கேற்ப ஒவ்வொரு வேலை¬யயும் செய்து முடிக்குமாறு குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்தால் கடைசி நேர டென்ஷன் இருக்காது.  

வந்தாச்சு தேர்வு!

 பொறுமை அவசியம்

பொறுமை என்பது மிக அவசியம். தங்கள் கவலைகளையும் முந்தைய கசப்பான அனுபவங்களையும் குழந்தைகளிடம் சொல்லி, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடாது. நாம் படித்த முறைகளைப் பின்பற்றுமாறு அவர்களை வற்புறுத்தக் கூடாது.  ஒவ்வொரு குழந்தைக்கும் படிக்கும் முறை வேறுபடும். அந்த முறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் குழந்தைகளிடமே விட்டுவிட வேண்டும்.

வந்தாச்சு தேர்வு!

 நிலையான தூக்கம்

தூக்கம் என்பது மிகமிக அவசியம். பயத்தின் காரணமாக, சில குழந்தைகள் ஒழுங்காகத் தூங்காமல், இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பார்கள். இது, முற்றிலும் தவறான முறை. குழந்தைகள், தேர்வு நேரங்களில் குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். இல்லையெனில் தேர்வில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியாமல், விரைவில் சோர்ந்துவிடுவர்.

வந்தாச்சு தேர்வு!

 இடைவேளை விடுங்கள்

படிக்கும் நேரத்தில் அவ்வப்போது இடைவேளை, கட்டாயம் தேவை. இடைவேளை சிந்தனை ஓட்டத்தைத் தெளிவுபடுத்தும். எனவே, குழந்தையை வாக்கிங் அழைத்துச் செல்வது,  குடும்பத்துடன் உணவு உட்கொள்வது, படிக்கும் போது நடுவில் சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் படிக்கச் சொல்வது என அவர்களைப் பழக்கலாம்.  தேர்வு நேரங்களில் தினமும் தியானம் அல்லது யோகாசன முறைகளைச் செய்துவந்தால், உடலும் அறிவும் தெளிவடைவதுடன், நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.

வந்தாச்சு தேர்வு!

 உணவு முறைகள்

தேர்வு சமயத்தில் குழந்தைகளுக்கு அதிகமாகப் பசி எடுக்கும். ஆரோக்கிய உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். சுண்டல், புட்டு, கிழங்கு வகைகளை ஸ்நாக்ஸாகக் கொடுக்கலாம். நொறுக்குத் தீனிகளை முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள். ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகள், குளிர்பானங்களைத் தேர்வு முடியும்வரை சாப்பிடக் கூடாது. காலை உணவைக் கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

- செ.கிஸோர் பிரசாத் கிரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism