ஸ்பெஷல்
Published:Updated:

“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”

-நடிகர் நரேன்

லையாளத் திரை உலகில் இருந்து தமிழ் சினிமாவில் தடம் பதித்து, 'அஞ்சாதே’, 'முகமுடி’, 'பள்ளிக்கூடம்’ போன்ற பல படங்களில் முத்திரை பதித்தவர் நடிகர் நரேன். நடிப்பைப் போலவே, உடலையும் உறுதியாக வைத்திருக்கும் நரேனிடம் நலம் விசாரித்தோம். 

'உடலை ஃபிட்டா வெச்சிருக்க என்ன செய்றீங்க?'

“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”

'நான் உடற்பயிற்சிக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவேன். தினமும் குறைஞ்சது ஒரு மணி நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணுவேன். அதிகம் செய்வது, தசைகளை இறுக்கும் மஸில்ஸ் வொர்க் அவுட்தான். மார்புப் பகுதியும், வயிற்றுப் பகுதியும் ஃபிட்-ஆக இருந்தாலே பார்க்க ரொம்ப அழகா இருக்கும். 'அஞ்சாதே’ படத்தில் ரவுடியாக இருந்து, போலீஸ் ஆவேன். அதுக்காகவே உடலை ரொம்ப டைட் பண்ணினேன். 'முகமூடி’ படத்திலும் உடம்பை ஃபிட்டா வெச்சுக்க வேண்டியிருந்தது. நடிப்புக்கு மூலக் காரணம், உடல் ஃபிட்னெஸ்தானே பாஸ்!'  

'என்ன மாதிரியான வொர்க் அவுட்ஸ் பண்ணுவீங்க..?'

'மொத்த உடலுக்கும் தேவையான உடற்பயிற்சியைச் செய்வேன். அதிகமாக ஓடுவேன். புஷ் அப்ஸ், சிட்அப்ஸ் செய்வேன். இப்ப ஒரு தமிழ் படத்துக்காக, உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சிக்குத் தயாராயிட்டு இருக்கேன். அதுக்குப் பேரு, 'நோ கார்போஹைட்ரேட் டயட்’. அதாவது தினசரி வெள்ளரிக்காய், கேரட், இளநீர் மட்டும்தான் சாப்பிடனும். ஏழு நாள்களுக்கு மேல் என்னால அப்படி இருக்க முடியலை. ஆனால், ஏழே நாள்ல உடல் வெயிட் குறைஞ்சிடுச்சு. கெட்ட கொழுப்பு எல்லாம் கரைஞ்சிடுச்சு.'

'பள்ளிக்கூட நாட்கள்ல விளையாட்டுக்கு முக்கியத்தும் கொடுத்தது உண்டா?'

'என்னுடைய ஸ்கூல் படிப்பு எல்லாம் துபாயில். அங்கு பள்ளி நாட்களில் விளையாட்டுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஆறாம் வகுப்புப் படிக்கும் வரை நேரம் காலம் இல்லாம, கிரிக்கெட் விளையாடிட்டே இருப்பேன். அதுக்கு அப்பறம் ஃபுட் பாலில் கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். நிறைய ஸ்கூல் மேட்சஸ் விளையாடி இருக்கேன். இப்பவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம், என் சாய்ஸ் ஃபுட் பால்தான்.'

'உங்களோட டயட் மெனு?'

'தினசரி காலையில் முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் எடுத்துப்பேன். அல்லது இரண்டு இட்லி, புட்டு சாப்பிடுவேன். ஆவியில் வேக வெச்ச உணவை விரும்பிச் சாப்பிடுவேன். மதியம் சப்பாத்தி, சின்னக் கிண்ணத்துக்கும் குறைவான சாதம். நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடுவேன். இரவில் சப்பாத்திதான். எப்போதாவது தந்தூரி சிக்கன் சாப்பிடுவேன். எண்ணெயில் செஞ்ச உணவைச் சுத்தமா தவிர்த்திடுவேன். பழச்சாறைவிட பழங்களைத்தான் எடுத்துக்குவேன்.'

'உடலை ஃபிட் ஆக வெச்சுக்க நினைக்கிறவங்களுக்கு உங்களோட அட்வைஸ்?'

'புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுங்க. எல்லா சத்துக்களும் சமவிகிதத்தில் இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க. தினசரி, நடை பயிற்சி அவசியம்.   ஆரோக்கியமான இயற்கை உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக்குங்க. வாய்க்குப் பிடிக்குதேனு ஆசைப்படுற எல்லா உணவையும் சாப்பிடாதீங்க. உணவுக் கட்டுப்பாடுதான், உடலைக் கட்டுக்கோப்பா வைக்கும்.'  

'நலம்’ தரும் நரேன் டிப்ஸ்

“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”

தனிமையை நேசியுங்கள். அதில் கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் இல்லை.  

“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”
“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”

 தனிமையின்போது, மொபைல், லேப் டாப் பார்ப்பதைக்கூட தவிர்த்திடுங்கள்.  

“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”

 மனம் அமைதியாக இருந்தால், மன அழுத்தம் என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது.  

“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”

 நேரத்துக்கு உணவு எடுத்துக்குங்க. நேரம் தவறி உண்பதுகூட உடலுக்கு ஆபத்துதான்.

“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”

 வருடத்தில் இரண்டு முறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். அது உங்க ஸ்ட்ரெஸ் லெவலைக் குறைக்கும்.

“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”

 நிறையப் புத்தகம் படியுங்கள்.

“உணவுக் கட்டுப்பாடு, உடலைக் கட்டுக்கோப்பாக்கும்!”

 உடல் ஏற்றுக்கொள்ளாத உணவைத் தவிர்த்திடுங்கள்.

- புகழ் திலீபன்