ஸ்பெஷல்
Published:Updated:

இதம்... பதம்.. பாதம்!

இதம்... பதம்.. பாதம்!

''முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் மற்ற உறுப்புகளுக்குக் கொடுப்பது இல்லை... முக்கியமாக, பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். ஒருவரின் பாதத்தைப் பார்த்தே, அவரது ஆரோக்கியத்தை அறியலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மாற்று (NATUROPATHY) மருத்துவர் நிவேதன அரவிந்த்

.

இதம்... பதம்.. பாதம்!

''பாதத்தைப் பற்றிய விஷயங்கள் REFLEXOLOGY என்ற படிப்பைச் சேர்ந்தது. இதை, அப்படிக் கூறுவதற்கான அர்த்தம், நம் உடல் பாகங்கள் அனைத்தையும் பாதத்தைச் சரியான இடத்தில் தூண்டுவதன் மூலம் சீராக இயங்க வைக்கமுடியும். இதே முறை நம் உள்ளங்கைக்கும் பொருந்தும். அனைத்து நரம்புகளும் சேரும் இடம் நம் பாதமும் உள்ளங்கையும்தான்.

இதனை நாம் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் நாம் முகத்தைக் கழுவுவதைப் போலவே பாதத்தையும் கழுவ வேண்டும். முகத்துக்கு 'பேக்’ போட்டு அழகு படுத்துவோமே, அதே போல் பாதத்தையும் சில அலங்காரத்துடன் வைத்திருக்க வேண்டும்'' என்கிறார் இவர்.

மேலும், இதை நம் கலாசாரத்துடன் இணைத்து தொடர்கிறார் டாக்டர் நிவேதன அரவிந்த்.

'வீட்டில் செருப்பு அணிந்து நடப்பது இப்போதைய ஃபேஷன் ஆகிவிட்டது. அது நல்லது அல்ல. காலையில் எழுந்ததும், பனித்துளிகள் விழுந்த புல் தரையில் செருப்பு இல்லாமல் நடப்பது பாதத்துக்கு இதமான ஒரு எக்சர்ஸைஸ். இதனால் நம், உள் உறுப்புகள் எந்த ஒரு கோளாறும் இல்லாமல் இயங்கும்.

இதம்... பதம்.. பாதம்!

  கையெடுத்துக் கும்பிடுவது, கரவொலி எழுப்புவது அனைத்தும் நம் உறுப்புகளை நன்கு இயக்க உதவும் செயல்கள். இதனைக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பின்பற்றலாம்.

இதம்... பதம்.. பாதம்!

 கூழாங்கல்லின் மேல் நடப்பது செரிமானத்துக்கு உதவுகிறது. செரிமான கோளாறுகளில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கும்.

இதம்... பதம்.. பாதம்!

 கோயிலுக்கு வெளியே காலணியைக் கழற்றிவிட்டுப் போவதன் மூலம், அங்குள்ள அதிர்வுகளை நம் பாதம் அனுபவிக்கும். இதன் மூலம் நம் உறுப்புகளின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.

இதம்... பதம்.. பாதம்!

 ஒரு பெண்ணின் ஈரமான பாதத்தின் அச்சை வைத்தே, அவள் ஆரோக்கியமாக இருக்கிறாளா என்றும் சொல்ல முடியும்.

இதம்... பதம்.. பாதம்!

ஐந்து நிமிடம் விடாமல் நாம் கைதட்டினால் நம் ரத்தம் ஒரு துளி அதிகரிக்கும். எனவே, தினமும் ஐந்து நிமிடம் இதைச் செய்தாலே நம் உடலுக்கு நல்லது. நெளிக் கோலம் போடுவது, பேனா பிடித்து எழுதுவது இவற்றை எல்லாம், அதிகம் செய்பவர் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில்

இதம்... பதம்.. பாதம்!

கையாளுவார். கைகளுடைய சின்னச் சின்ன பழக்கங்களில்கூட பெரிய நன்மைகள் இருக்கின்றன. 'மருத்துவரைப் போய்ப் பார்க்க வேண்டிய நேரம் இது’ என்ற எச்சரிக்கைக் குறிப்பைக்கூட, பாதங்கள், உள்ளங்கைகளின் அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.

   உங்கள் பாதப் பகுதி வித்தியாசமாக கரு நிறத்தில் இருக்கிறதா? அப்படியெனில், ரத்த ஓட்டம் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறி. பாதங்களில் குத்துவது போல் வலி ஏற்பட்டு நீடித்தால் இருதய மருத்துவரை அணுகுவது நல்லது. குதிகால் எரிச்சல் விடாமல் இருந்து வந்தால், தாது உப்புகள் உடலில் அதிகம் இருப்பதற்கான அறிகுறி.

உள்ளங்கை அதிகமாக வேர்க்கிறதா? நுரையீரல் கோளாறு இருக்க வாய்ப்பு இருக்கலாம். குறுகிய காலத்தில் அதிக பாத வெடிப்பு ஏற்பட்டால், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், ஒபிசிட்டி இப்படி ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகி இருக்கலாம். நகங்களில் ஏதேனும் சீழ் மாதிரி இருந்தால் தோல் வியாதிகள் இருப்பவராய் இருக்கலாம். இதைப் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்'' என்றார்.

பாதப் பராமரிப்பு:

1. சோர்வாக இருக்கிறதா? உங்கள் உள்ளங்கைகளையும் பாதங்களையும் உப்புத் தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.

2. வாரம் ஒரு முறை வீட்டில் இருக்கும் எண்ணெயை வைத்தே மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

3. காலுக்குப் பொருத்தமான காலணியை அணியுங்கள்.

4. சோற்றுக் கற்றாழை வைட்டமின்-ஈ நிறைந்தது. இதைப் பாதங்களுக்கும் தடவி வந்தால் எந்தப் பாதிப்பும் நெருங்காது.

- ந. அபிநய ரோஷிணி,

படங்கள்: தனசேகரன்