Published:Updated:

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

ஓவியர் டிராட்ஸ்கி மருது

புதுமையையும் புரட்சியையும் தனது கோடுகளில் புகுத்தியவர் ஓவியர் டிராட்ஸ்கி மருது. சென்னை நந்தனத்தில் உள்ள மருதுவின் ஓவியத் தோட்டத்தில் சந்தித்தோம். இதமான தேநீர் தொண்டையில் இறங்க, மருதுவின் மதுரைத் தமிழ் அருவியாகக் கொட்டியது.

'என் அப்பா, தினசரி தவறாமல் யோகா, நடைப்பயிற்சி செய்வார். காலையில் நீராகாரம், வேகவைச்ச பச்சைப்பயறு சாப்பிடுவார். காய்கறி, பழங்கள், தானியங்கள் என இயற்கையான உணவு, செழிப்பான சூழல்னு என் அப்பா வழிநடத்திய வாழ்க்கை முறைதான் இன்னைக்கும் நான் ஆரோக்கியமா இருக்கக் காரணம்!

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓர் ஒழுங்குடன் வாழ்க்கையை நடத்தியவர் என் அப்பா. பத்மாசனம், சிரசாசனம், உடற்பயிற்சினு அனைத்தும் சொல்லித்தருவார். தலைகீழாக நின்று செய்யும் சிரசாசன பயிற்சி ரொம்பவே கஷ்டம். அப்படிச் செய்யும்போது உடலில் ரத்த ஓட்டத்தின் செயல்பாடு மாறிப்போகும். சிரசாசனம் செய்தால், மூளைக்கு ரொம்ப நல்லது. பள்ளி வாழ்க்கை முடிந்து, கல்லூரிக்கு அடி எடுத்துவைக்கும் சமயத்தில், என்னையும் என் தம்பியையும் அப்பா உடற்பயிற்சி நிலையத்துக்கு அனுப்பிவைத்தார். மதுரையில் சுப்ரமணியன்னு ஒருத்தர் அப்போதுதான் ஜிம் ஆரம்பித்தார். தொடர்ந்து மூன்று வருஷம், அடிப்படை ஆரோக்கியத்துக்குத் தேவையான உடற்பயிற்சி செய்தேன்.''

'பள்ளி வாழ்க்கை பற்றிச் சொல்லுங்களேன்...'

'பள்ளி நாட்களில் விளையாட்டு குறைவுதான். என்னைக்காவது நண்பர்களோடு விளையாடப் போவேன். அன்னைக்குனு பார்த்து எங்காவது அடிபட்டு ரத்தம் வந்திடும். அதனாலேயே என்னை எந்த ஆட்டத்திலும் சேர்த்துக்காம, உடைகளைப் பார்த்துக்கிற பொறுப்பை ஒப்படைச்சிடுவாங்க. விடலைப்பருவத்தில் வாலிபால் விளையாட ஆரம்பிச்சேன். ஞாயிற்றுக்கிழமை வந்தா,  மதுரை தமுக்கம் மைதானத்தின் புழுதி மண்ணில் விளையாடப் போயிடுவோம். காந்தி மியூசியத்தில் புத்தக வாசிப்பு, உலக சினிமா பார்ப்பது என்று பெரும்பாலான நாட்கள் போனது.''

''உங்களோட உணவு முறை பற்றி...''

'நிறைய உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தில்தான் வளர்ந்தேன். வீட்டில் எந்த விசேஷம்னாலும்  நிச்சயம் அசைவ உணவு இருக்கும். அதில் எனக்கு மட்டும் தனியா கொஞ்சமா சாம்பார் வைத்துத் தருவாங்க அம்மா. என் 18 வயசு வரை சைவ உணவுதான். அதுக்குப் பிறகு சென்னை வந்துதான் அசைவ உணவுக்குப் பழகிட்டேன். தினமும் காலையில் ஓட்ஸ் இல்லேன்னா நீராகாரம் குடிப்பேன்.'

'எப்பவும் ஒரே மாதிரி ஃபிட்டா இருக்கீங்களே எப்படி?'

''ரகசியம் எதுவும் இல்லை. சரியான நேரத்துக்கு சாப்பிடுவேன். அதுவும் அரை வயிறுதான். ராத்திரியில் எவ்வளவு நேரம் கழிச்சுத் தூங்கினாலும், அதிகாலையில் எழுந்துடுவேன். மதிய உணவுக்குப் பிறகு அரை மணி நேரம் தூங்குவேன். அந்த குட்டித் தூக்கம் என்னை சுறுசுறுப்பா வைச்சுக்க உதவுது. தூக்கம் வரலைன்னாலும், ஓய்வாப் படுத்துட்டு இருப்பேன். நடக்கிறது ரொம்பப் பிடிக்கும். இப்பக்கூட நானும் என் மனைவி ரத்தினமும் தினமும் தவறாம நடைப் பயிற்சி போவோம்.'

'உங்கள் ஆரோக்கிய வாழ்வின் முன்னுதாரணம் யார்?'

'என் அப்பா. அப்புறம், 90 வயசு வரை உற்சாகத்தோடு வாழ்ந்த தந்தை பெரியாரும், ஓவியர் பிக்காசோவும். தன்னோட இறுதிக் காலம் வரைக்கும், வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தமுள்ளதா மாற்றிக்கொண்ட மேதைகள். என் ஓவியத் தூரிகைக்கான மையே, பெரியாரின் சிந்தனையும் பிக்காசோவின் ஓவியமும்தான்!''  

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

'உங்க ரிலாக்சேஷன் பற்றி ...?'

'என்னோட ஓய்வே ஓவியம் வரைவதுதான். ரெண்டு நிமிஷம் வரை பலகை ஓரத்தில், என்னை அறியாமலே எதோ ஒண்ணைக் கிறுக்கிட்டு இருப்பேன். இது எனக்கு மட்டும் இல்லை, எல்லாத் துறை சார்ந்தவர்களிடமும் இருக்கும். இதுவும் ஒரு வகையில் தியானம்தான்.''

டிராட்ஸ்கி மருதுவின் டிப்ஸ்

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

இயற்கை உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள்.

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

 வெயில் காலமோ, பனிக் காலமோ தண்ணீர் அதிகம் குடியுங்கள்.

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

 பழங்களைக் கண்ணுக்குத் தெரியும்படி டேபிள் மேலே வைங்க. அப்பத்தான் போக, வர எடுத்து சாப்பிடத் தோன்றும்.

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

 மனசை எப்பவும் குழப்பம் இல்லாமல் அமைதியா வைத்துக் கொள்ளுங்கள். அதுவே ஆரோக்கியத்துக்கான ரகசியம்.

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

 வருடத்துக்கு ஒருமுறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். நீண்ட, ஜன்னல் ஓரப் பயணம் நிச்சயம் உங்களைப் புத்துணர்ச்சியாக்கும்.

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

 ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்த்து, நம்ம ஊரின் சிறுதானிய உணவுகளை விரும்பி உண்ணுங்கள்.  

“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை!”

 சமூக வலைதளங்கள் கத்தி மாதிரி... அதை நல்லதுக்கும் பயன்படுத்தலாம். கெட்டதுக்கும் பயன்படுத்தலாம். தகவல் சார்ந்து, நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

புகழ்.திலீபன்

படங்கள்: ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ்