Published:Updated:

மழலையை பழக்கலாம் வாங்க!

மழலையை பழக்கலாம் வாங்க!

மழலையை பழக்கலாம் வாங்க!

மழலையை பழக்கலாம் வாங்க!

Published:Updated:

குழந்தைகளின் ஐந்து வயது வரையிலான பருவம் மிக முக்கியமானது. இந்த காலகட்டத்தில், உணவு உட்கொள்வது மற்றும் டாய்லெட் போவது போன்ற நல்லப் பழக்கங்களை குழந்தைகளுக்குச் சொல்லித்தந்து, அவர்களை ஆரோக்கியமாக வளர்ப்பது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.

மழலையை பழக்கலாம் வாங்க!

''குழந்தை வளர்ப்பில் இந்தப் பழக்கம்தான் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்துக்கான அடிக்கல்.'' என்கிற சென்னையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் வி.ஆர்.பார்வதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'என்ன சாப்பிட்டாலும் என் குழந்தை ஒல்லியாகவே இருக்கான்'', 'குழந்தையை சாப்பிட வைப்பதே பெரும்பாடா இருக்கு' - இப்படிப் பல தாய்கள் புலம்புவது உண்டு. ஒன்பதாவது மாதம் முதல் குழந்தைகள் வீட்டில் சமைக்கும் உணவுகளைச் சாப்பிட்டு வளர்ந்தாலே போதும். அது ஒல்லியாக இருக்கிறது என்று கவலைப்படத் தேவை இல்லை.  

ஒரு வயது வரை கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும். எட்டு, ஒன்பதாவது மாதங்களில்

மழலையை பழக்கலாம் வாங்க!

புளிக்காத தயிர் இரண்டு ஸ்பூன் சுவை பார்க்கக் கொடுக்கலாம். குழந்தையின் நாக்கில் வைத்ததும் துப்பினால், நாக்கின் அடிப்பகுதியில் வையுங்கள். அதை சுவைத்துப் பார்த்து மெள்ள மெள்ளச் சாப்பிட ஆரம்பிக்கும். சாக்லேட், கூல்டிரிங்ஸ், நொறுக்குத்தீனிகளை சாப்பிடக் கொடுத்தால், மற்ற உணவுகளை உண்ண மாட்டார்கள். காய்கறிகள், பழம், முட்டை, பால் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைக்கு, காக்கா, குருவியைக் காட்டி உணவு ஊட்டுவது வழக்கம். இந்தக் காலகட்டத்தில்தான் குழந்தை தானாகவே, உணவைக் கையில் எடுத்துச் சாப்பிடும். தட்டில் இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அரிசிப் பொரியைத் தூவிவிட்டால், விரல்களைக் குவித்து குழந்தை வாயில் போட்டுக்கொள்ளும் அழகே தனிதான். பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டால், விரும்பிச் சாப்பிடுவார்கள். பிஞ்சு விரல்களால் எடுத்து சாப்பிடுவதைப் பார்த்து, கைதட்டி உற்சாகப்படுத்த வேண்டும். இதனால், 'அந்தக் குழந்தைக்கு நான் பெரியவனாகிறேன்’  என்ற எண்ணம் ஏற்படும். அந்த மகிழ்ச்சியில் குழந்தை நிறையச் சாப்பிட ஆரம்பிக்கும்' என்று உணவுப் பழக்கவழக்கம் பற்றி சொன்னவர், குழந்தையின் டாய்லெட்டிங் முறை பற்றி பேசினார்.

'10 வயதாகியும் படுக்கையில் சிறுநீர், மலம் கழிக்கும் பழக்கம் சில குழந்தைகளுக்கு உண்டு. 10-வது மாதத்தில் இருந்து ஒரு வயதுக்குள் குழந்தை இயல்பாக உட்கார்ந்து சிறுநீர் கழிக்கவும், மலம் கழிக்கவும் பழகிவிடும். குழந்தை டாய்லெட் போகும்போது, தாய் கண்காணிக்க வேண்டும். ஏதாவது சிக்கல் இருந்தால், குழந்தையின் முகபாவனைகளின் மூலமே அறிந்துகொள்ள முடியும்.

மழலையை பழக்கலாம் வாங்க!

கழிப்பறை சுத்தமாக இருப்பதுடன், அங்குள்ள சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தே குழந்தைகளின் நடவடிக்கைகளும் அமையும். பல்லி, கரப்பான்பூச்சி போன்றவை இருந்தால், பயத்தில்கூட மலத்தை அடக்கிக்கொள்வர். மனஅழுத்தம் காரணமாகவும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். இரவில் பெற்றோருடன் தூங்கிய குழந்தை இடம் மாறித் தூங்கினால்கூட, ஒருவித ஏக்கத்தில், குழந்தைக்கு மனதில் ஏற்படும் ஒருவிதப் பாதிப்பால் படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம்.

டயாபருக்கு பதில் பருத்தித் துணிகளைப் பயன்படுத்துவது நல்லது.  குழந்தைக்கு கால் இடுக்குகளில் எரிச்சல் இல்லாமல் சுதந்திரமாக ஓடித் திரிய வழிவகுக்கும்.  இப்படி சரியான அணுகுமுறையுடன் குழந்தைகளைப் பழக்கப்படுத்தினால், 10 வயது, 15 வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள். எங்கு சென்றாலும், குழந்தையின் ஆரோக்கியப் பழக்கவழக்கத்தை பார்த்து, பலரும் பிரமிப்பார்கள்!''

- எம்.மரிய பெல்சின்  படம்: ச.இரா.ஸ்ரீதர்