Published:Updated:

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

சொல்கிறார் டாக்டர் செரியன்! நல்லா இருக்கீங்களா?

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

சொல்கிறார் டாக்டர் செரியன்! நல்லா இருக்கீங்களா?

Published:Updated:

'உடல் உறுப்புகளைச் சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லவேண்டாம். இந்தப் பூமியில் அதன் தேவைகள் மிக அதிகம். அதற்கு, அனைவரும் முயல வேண்டும்'' - இதயத்தை வருடும் வார்த்தைகளால் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, மனித சமுதாயத்துக்குப் பெரும் சேவையாற்றுபவர் மருத்துவ மேதை டாக்டர் கே.எம்.செரியன். ஒர் உடலில் இருந்து இதயத்தை, இன்னோர் உடலுக்கு இடம் பெயர்த்துச் சாதனைப் படைத்த அந்த உன்னத மனிதர், சிரித்தபடியே பேசினார்!

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

'நான் தேர்ந்தெடுத்த மருத்துவத் துறை எனக்கு முழுத் திருப்தியைத் தருது. நான் ஒரு மருத்துவராக இருந்தாலும், எனக்கும், சில மாதங்களாக சர்க்கரை நோய் இருக்கு. அதுக்குச் சிகிச்சை எடுத்துக்கிறேன். உணவு கட்டுப்பாட்டோடு, நேரம் தவறாமல் இன்சுலின் போட்டுகிறேன். கட்டாயம் தினமும் வாக்கிங் போவேன். வீட்டிலேயே தினமும் டிரெட்மில்லில் நடைப்பயிற்சி செய்யறேன்.'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உங்க பள்ளி காலம் பற்றி சொல்லுங்கள்?'

'கேரளாவில் உள்ள ஒரு சின்னக் கிராமத்தில், போர்டிங் ஸ்கூல் படிச்சேன். ஒழுக்கத்துக்கும், விளையாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தர்ற ஸ்கூல் அது. பேட்மிட்டன், டென்னிஸ் ரொம்ப விரும்பி விளையாடுவேன். ஒவ்வொரு ஆண்டும் என் ஸ்கூலில் நடக்கும் அத்தனை விளையாட்டுப் போட்டிகளிலும் நான்தான் முதல் பரிசை வாங்குவேன். மறக்க முடியாத நாட்கள் அவை.'

'உங்களின் உணவுப் பழக்கம் எப்படி?'

'ஆரம்பக் காலத்தில் இருந்தே அரிசி சாதம், குறைவாத்தான் சாப்பிடுவேன். தினசரி காலையில் ஓட்ஸ். மதியம் அதிக காய்கறிகள் உள்ள உணவுகள், இரவில் சப்பாத்தி. வாரத்தில் முன்று நாட்கள் முட்டை, அதுவும் வெள்ளை பகுதி மட்டும். வாரத்துக்கு ஒருமுறை மீன் சாப்பிடுவேன். சிக்கன், மட்டன் சுத்தமா தொடறது இல்லை. அப்பப்ப பழங்கள் விரும்பிச் சாப்பிடுவேன். இவைதான் எனக்குத் தேவையான எனர்ஜியைத் தருகின்றன.'

'இதய மாற்று அறுவைசிகிச்சையில் நீங்கள் சந்தித்த வித்தியாசமான அனுபவம், கடினமான அறுவைசிகிச்சை பற்றி..?'

'நான் செய்யும் ஒவ்வொரு அறுவைசிகிச்சையும் வித்தியாசமானது, கடினமானதுதான். அறுவைசிகிச்சையின்போது, ஒவ்வொரு நிமிடமும் மிகவும் கவனமாக இருக்கணும். ஒரு நொடி தவறினாலோ கவனம் இழந்தாலோ நோயாளிக்கு ஆபத்துதான். இதுவரை, 45,000 இதய அறுவைசிகிச்சை செஞ்சிருக்கேன். ஒவ்வொன்றுமே எனக்குப் புது அனுபவம்தான்.'

'மருத்துவத் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்... இதில் உள்ள சிரமம் என்ன..?'

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

ஆர்வம்தான் காரணம். பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. வருமானத்தை எதிர்பார்த்து, இந்தத் துறைக்கு நான் வரலை. நோயாளிகளுக்கு என்னால் முடிந்தவரை நல்லது செய்யணும் என்ற நினைப்போடுதான் இப்ப வரைக்கும் இருக்கேன். வசதி குறைவா இருக்கிறவங்க இதயம் சார்ந்த பிரச்னைக்கு அடிப்படை செலவுகூட செய்யமுடியாம தவிப்பாங்க. அது மாதிரியான நேரங்களில், மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். மருத்துவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. இதற்காக கும்மிடிப்பூண்டி பக்கத்துல மிகப்பெரிய ஆராய்ச்சிமையம் ஒன்றை உருவாக்கிட்டு இருக்கேன்.'

'நிறைய மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் ரோல் மாடல். அவர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி?'

'இந்தச் சமூகத்துக்கு நல்லது செய்யணும் என்ற எண்ணத்தோடும், சேவை மனத்தோடும் மருத்துவப் படிப்பைப் படிங்க. 'அப்பா மருத்துவர் நானும் மருத்துவரா ஆவேன்’ என்று நினைக்காதீங்க. பணம் மட்டுமே சம்பாதிக்கணும் என்ற நினைப்போடு படிக்கக்கூடாது. மருத்துவருக்குப் படிக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் ரொம்ப ஆர்வத்தோடு இருப்பாங்க. கல்லூரி அவங்களை இனங்கண்டு ஊக்கப்படுத்தணும். ஆரோக்கியமான சமூகம், மாணவச் செல்வங்களின் கையில்தான் இருக்கு''

இதயத்துக்குப் பதமான டிப்ஸ்

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

புகை, மது பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

 கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

 உடலுக்கு தேவையான அளவு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்..

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

 பெற்றோருக்கு இதய நோய் இருந்தால், அடுத்தத் தலைமுறைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அவர்கள் சிறுவயதில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

 அதிகப்படியான மன அழுத்தம், பல நோய்களுக்குக் காரணம். முடிந்த வரை அழகான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

 அதிகம் ஆபத்தைத் தரும் கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

 கொடம்புளியில் இயற்கை மருத்துவக் குணங்கள் அதிகம். இதை அன்றாட உணவில் பயன்படுத்தலாம். இதைச் சாப்பிட்டால் அலர்ஜி நீங்கும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

 அரிசி உணவை முற்றிலும் தவிர்க்காமல், மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொடம்புளி

 தேவையில்லாமல் உணவை வயிற்றினுள் திணிக்கக்கூடாது. உடலுக்குத் தேவையான சத்துள்ள ஆரோக்கிய உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுங்கள்.

- புகழ் திலீபன், படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism