Published:Updated:

இன்று புதிதாய்ப் பிறக்கலாம்!

இன்று புதிதாய்ப் பிறக்கலாம்!

இன்று புதிதாய்ப் பிறக்கலாம்!

இன்று புதிதாய்ப் பிறக்கலாம்!

Published:Updated:

' 'தவமாய்த் தவம் இருந்து இரட்டைக் குழந்தைங்களைப் பெத்தோம்... ரெண்டும் பேசவே மாட்டேங்கறாங்களேனு இ.என்.டி. டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். காதுல எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, இவங்க ஆட்டிசக் குழந்தைகள்னு சொல்லிட்டார் டாக்டர். ஆறு மாசமா ஸ்பீச்தெரப்பி எல்லாம் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. எப்படியாவது மத்த குழந்தைகளைப்போல எங்க குழந்தைகளையும் ஆக்கிடுங்க...’னு என்னிடம் வந்த பெற்றோரைப் பார்க்கவே கஷ்டமா இருந்தது'' - மேதா மைண்ட் நிறுவனத்தின் ப்ரெய்ன் ஃபங்ஷன் நிபுணர் என்.எஸ்.ஸ்ரீனிவாசன், அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார்...

அந்தக் குழந்தைகளுக்குப் பிரத்யேக குவான்டிடேட்டிவ் இ.இ.ஜி. (quantitative ElcroEncephalo Graphy(qEEG)) கருவி பொருத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு குழந்தைக்கு மூளையில் செவித் திறன் பகுதியில் செயல்பாடு இல்லை. குழந்தையின் காதில் விழும் சொற்கள், அதன் மூளைக்கு எட்டவில்லை. மற்றொரு குழந்தைக்கு உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்றே தெரியவில்லை. 'இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் குழந்தைகளுக்கு எத்தனை ஆண்டுகள் ஸ்பீச் தெரப்பி கொடுத்தும், ஒன்றும் ஆகப்போவது இல்லை. ஆட்டிசம், செரிபரல்பால்சி பாதிப்புள்ள குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பிரச்னை, மூளையில் எந்த இடத்தில் பாதிப்பு என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே, பொத்தம்பொதுவாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது'' - என்ற ஸ்ரீனிவாசன், தொடர்ந்தார்.

'நம் மூளையில் பல பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியைச் செய்கிறது. இந்தப் பகுதிகளின் மின் அலை செயல்திறனை அளவிடுவதன் மூலம் பாதிப்பைக் கண்டறிய முடியும். மூளையானது ஒரு வோல்ட்டில் 10 லட்சத்தில் ஒன்று என்ற அளவில் மின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதை இ.இ.ஜி. கருவி மூலம் பதிவு செய்யலாம். இப்படிப் பதிவு செய்வதை 'ப்ரெய்ன் மேப்பிங்’ என்பார்கள். நாங்கள் இந்த மின் அலையை க்யூ.இ.இ.ஜி முலம் பதிவு செய்து கம்ப்யூட்டர் மென்பொருள் உதவியுடன் ஆய்வுசெய்து, அதே வயதுடைய மற்றவர்களின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்க்கி றோம். இந்த மென்பொருளுக்கு அமெரிக்காவின் ஃஎப்.டி.ஏ. அனுமதியும் உள்ளது.

கியூ.இ.இ.ஜி பரிசோதனையின் போது மூளை வெளியிடும் மின் ஆற்றல் அடிப்படையில் வரை படம் தயாரிக்கப்படும். இதை அட்வான்ஸ்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தி எந்த இடத்தில் பிரச்னை என்று கண்டறிவோம். பிறகு அந்தப் பகுதியில் ரேடியோ அலைகளைச் செலுத்துவதன் மூலம் மூளையின் கற்கும் திறனை ஏற்படுத்த முடியும். இந்த நவீன கருவியைக் கொண்டு மூளை பகுதிகளில் உள்ள சிக்னல் அளவு, ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளும் வேகத்தின் அளவு உள்ளிட்டவையைக் கண்டறிய முடியும்.

இன்று புதிதாய்ப் பிறக்கலாம்!

உதாரணத்துக்கு, ஆட்டிசம் பாதித்த குழந்தைக்குச் செவித் திறன் பகுதியில் செயற்கை முறையில் ரேடியோ அலை செலுத்தப்படும். அந்த நேரத்தில் மூளையானது கேட்கும் திறனைப் பெருக்குகிறது. இது மூளைக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது மூளை கற்றுக் கொள்ளும். ஒரு கட்டத்தில் தானாகவே அந்தப் பகுதிக்கான மின் ஓட்டத்தை செய்யத் தொடங்கும். அந்த நேரத்தில் குழந்தையின் செவித்திறன் மேம்படும். ஆட்டிசம், வலிப்பு நோய் தவிர, இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பக்கவாதம், பேச்சுத்திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் மனப் பதற்றம், பய நோய் உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும்.

இன்று பெரிய பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் கூடத் தங்கள் மூளையின் செயல்திறனை ஆய்வு செய்து, குறிப்பிட்ட விஷயத்தில் அதிகக் கவனம் பெற வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கெள்கின்றனர். இதில் அறுவைசிகிச்சை ஏதும் செய்யப்படுவது இல்லை. அதனால் வலியும் கிடையாது. டி.வி.யைப் பார்த்தபடியே சிகிச்சை பெறலாம்' என்கிறார்.

- பா.பிரவீன் குமார்