Published:Updated:

லபோ அதா குந்தா வெளியான கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்

தமிழச்சி தங்கபாண்டியன் காலை மந்திரம்!

லபோ அதா குந்தா வெளியான கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்

தமிழச்சி தங்கபாண்டியன் காலை மந்திரம்!

Published:Updated:

'வயது ஏறாமல் இருக்க, வரம் வாங்கி வந்தாரோ?’ என்று எல்லோரும் வியக்க... எழுத்து, கல்வி, இலக்கியம், அரசியல் எனப் பல்கலை வித்தகியாகப் பிரகாசிப்பவர் தமிழச்சி தங்கபாண்டியன்.  

''உங்கள் அழகுக்கு எது காரணம்?'' என்றால்,  ''ஆரோக்கியமான உணவு, நல்ல சிந்தனைகள், மகிழ்ச்சியான வாழ்க்கை முறை, இந்த மூன்றும் சரியாக இருந்தால்... அழகு நம்மிடம் நிரந்தரமாகத் தங்கிவிடும்'' என்கிறார் அழகாக.

''மறக்க முடியாத பள்ளி வாழ்க்கை பற்றி..?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லபோ அதா குந்தா வெளியான கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்

''மல்லாங்கிணறு என்ற கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்தேன். சாணியால் மெழுகிட்ட மண் தரை. பள்ளிக்கூடத்தைச் சுத்தப்படுத்துவது, ஆசிரியர் வருவதற்கு முன்பு வகுப்பறையை ஒழுங்குபடுத்துவது,  வாரம் ஒரு முறை ஊமத்தம் இலைச் சாற்றை கரும்பலகையில் பூசுவது எனப் படிப்போடு சேர்ந்து, பல நல்லப் பழக்கங்களும் ஒரு பகுதியாக இருந்தது.  இதுவே, தினம் எங்களை சுறுசுறுப்பாக இருக்கவைக்கும். எங்கள் ஊரில் மேலத்தெரு, கீழத்தெரு என இருந்தாலும்  எந்த ஜாதி பேதமும் இல்லாமல் பாசமாகப் பழகுவோம். ஒரு வீட்டில் அரிசி, இன்னொரு வீட்டில் பருப்பு என ஆளாளுக்கு எடுத்துக்கொண்டு வந்து, கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிடுவோம். அந்த ருசியை இப்போது நினைத்தாலும் நாக்கில் நீர் ஊறும்.''  

''உங்க உடலையும், மனசையும் ஃபிட்டா வெச்சிருக்கிற மந்திரம் என்ன?''

''தினமும் காலையில் 15 நிமிஷம் வாக்கிங். 10 நிமிஷம் சைக்கிளிங். அப்புறம் ஓஷோவின் ஜிப்பர்ஸ் தியானம்... அதாவது, 'லபோ அதா குந்தா வெளியா கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்’னு 10 நிமிஷம் வாய்விட்டுச் சத்தமா சொல்வேன். ஜிப்பர்னா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகள்னு அர்த்தம். சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை 10 நிமிஷங்கள் சொன்னா, அதுதான் ஓஷோவோட ஜிப்பர்ஸ் தியானம். ரொம்பத் தெளிவா சொல்லணும்னா, 10 நிமிஷம் பைத்தியம் பிடிச்ச மாதிரி உளறணும். மைண்டை 'டிராப்’ பண்ற பயிற்சி அது.''

''நீங்கள் கடைப்பிடிக்கும் உணவுமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்...''

''தினசரி காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சிறிய உருண்டையாக உருட்டிச் சாப்பிடுவேன். உணவில் கம்பு, கேழ்வரகு, திணை, வரகரிசி என நம் ஊர் சிறுதானிய உணவை அதிகம் சேர்த்துக்கொள்வேன். பழங்கள் விரும்பிச் சாப்பிடுவேன். குறிப்பாக, இலந்தைப்பழம், நாவல் பழம் ரொம்பப் பிடிக்கும்.''  

''அழகிய கூந்தலின் ரகசியம்..?''

''இரண்டு விஷயங்கள். ஒன்று... நான் சாப்பிடும் உணவு. இன்னொன்று... கூந்தல் பராமரிப்பு. கறிவேப்பிலையைத் தொடர்ந்து சாப்பிட்டால், முடி உதிர்வு இருக்காது. கூந்தல் நீளமாக வளரும்.  தவிர, பப்பாளி, கேரட் அதிகம் சாப்பிடுவேன். வாரத்துக்கு ஒருநாள் கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பேன். எண்ணெய்க் குளியல் முடிந்ததும், உளுந்தங்கஞ்சி சாப்பிடுவேன். இதனால், உடல் சூடும் சமநிலையில் இருக்கும். கூந்தலை பின்னித்தான் போடுவேன்.  இதனால், முடி உதிராமல் வலுவாக இருக்கும். கெமிக்கல் கண்டிஷனர் இல்லாமல்,  பக்க விளைவு இல்லாத தேங்காய்ப் பால் பயன்படுத்துவேன். இவைதான் என் கூந்தல் அடர்த்தியாக, ஆரோக்கியமா இருக்க... நான் கடைப்பிடிக்கிற விஷயங்கள்.

- புகழ் திலீபன்

அழகு டிப்ஸ்!

லபோ அதா குந்தா வெளியான கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்

பன்னீரை முகத்தில் தேய்த்தால், முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி சுத்தமாகும்.

லபோ அதா குந்தா வெளியான கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்

 முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் தடவுங்கள்.

லபோ அதா குந்தா வெளியான கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்

 பாலாடையை முகத்தில் பூசிக் கழுவினால், முகம் பொலிவாகும்.  

லபோ அதா குந்தா வெளியான கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்

 நம்ம ஊர் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பழங்களை வாங்கிச் சாப்பிடுவது, சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.  

'வலு’வைக்கூட்டும் வரகரிசிக்கஞ்சி 

வரகரிசியை நன்றாக வேகவைத்து, அதனுடன் 5 பூண்டு பல், சிறிதளவு பொடித்த மிளகு சேர்த்து, கஞ்சியாகக் காய்ச்சி இறக்கவும். இதற்கு, பிரண்டைத் துவையல் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம் உறுதி.