Published:Updated:

இளமை இதோ... இதோ...

இளமை இதோ... இதோ...

இளமை இதோ... இதோ...

இளமை இதோ... இதோ...

Published:Updated:

''இவ, என் அக்கா பொண்ணு டாக்டர்... நிறைய வரன் வந்தும் எல்லாமே தட்டிப் போகுது... காரணம் இவளோட முகம்தான்’ என்று 25 வயசுகூட நிரம்பாத ஒரு பெண்ணை என்னிடம் அழைச்சிட்டு வந்தார் ஒரு பெண்மணி. முரடு தட்டிய முகம்... '30 வயதை தாண்டியிருக்குமோ’ என நினைக்கத் தோன்றும் அளவுக்கு, கடுமையான வறட்சி அந்தப்   பெண்ணின் முகத்தில் தாண்டவமாடியது!'என்று  தொடங்கினார், சென்னை 'தி மெடிக்கல் பார்க்’ சரும நோய் சிகிச்சை நிபுணர் கிருத்திகா ரவீந்திரன்.

''இப்படி 30 வயதுக்குள், சருமம் வறண்டுபோக இன்றைய சுற்றுச்சூழலும், வாழ்க்கைமுறையும்தான் முக்கியக் காரணங்கள். அதிகப்படியான வேலை, தூக்கமின்மை, ஊட்டச்சத்து இல்லாத உணவு,

இளமை இதோ... இதோ...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுற்றுச்சூழல் மாசு, சூரியனின் கதிர்வீச்சு என  அனைத்தும் சேர்த்து நம் சருமத்தை வறட்சியடையச் செய்து, தோற்றத்திலும் தொய்வை ஏற்படுத்திவிடுகின்றன. ஆண்களாக இருந்தால், கூடவே மது, சிகரெட் புகைக்கும் பழக்கமும் சேரும்போது சருமம் மிக விரைவாகப் பாதிக்கிறது.

வயதாவதைத் தடுப்பது நம் கையில் இல்லை. மேற்கண்ட பிரச்னைகளில் இருந்தும் நம்மால் தப்பி ஓடிவிட முடியாது. ஆனால், முதுமையை விரைவுபடுத்தும் இதுபோன்ற விஷயங்களில் சற்று கவனத்துடன் இருந்து, பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றினால், சருமத்தைப் பாதுகாக்கலாம்'' என்று அதற்கான வழிமுறைகளை விவரிக்கத் தொடங்கினார்.

''இளமையிலேயே சருமத்தைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.  கழுத்து, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் வயது அதிகரித்தலின் முதல் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும்.

கண்ணில் கருப்பு வளையத்தைத் தடுக்க, தக்காளி அல்லது வெள்ளரிக்காயை மெல்லிய துண்டாக வட்ட வடிவில் வெட்டி கண்ணில் வைக்கலாம். தேயிலையை வைத்து அடிக்கடி ஒத்தடம் கொடுக்கலாம். இது கருப்பு புள்ளிகள், சுருக்கம், கருப்பாகப் படிவது போன்றவற்றைத் தடுக்கும்.

கை மற்றும் கழுத்துப் பகுதியில் சருமம் தளர்ச்சியடைவதைத் தடுக்க, பாதாம் உள்ள கிரீமைப் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்யலாம். இதனால் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் பேபி ஆயில் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம்.

இளமை இதோ... இதோ...

எப்போது வெளியே சென்றாலும் எஸ்.பி.எஃப் 30 உள்ள சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்தலாம். கோடையில் மட்டுமல்ல. மழை, குளிர் காலத்திலும் இதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒரு நல்ல சன்ஸ்கிரீன் சூரியனின் புறஊதா  கதிர்வீச்சில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது.

தினமும் முகத்தை மென்மையாகத் தேய்க்க வேண்டும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், தூசு, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை அப்புறப்படுத்த உதவுகிறது. இதற்குப் பிறகு, கிளென்சரை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். சில நிமிடங்கள் இப்படிச் செய்தால், சருமத்தில் ரத்த ஓட்டம் மேம்படும். பிறகு, பருத்திப் பஞ்சில் டோனரை நனைத்து முகத்தில் தடவி, பாதாம் அல்லது ரோஸ்மேரி போன்ற இயற்கையான எண்ணெய்கொண்ட மாய்ஸ்ச்சரைசரைத் தடவ வேண்டும். பருவத்துக்கு ஏற்றபடி மாய்ஸ்ச்சரைசரை மாற்றுவது மிகமிக அவசியம்.

கிளென்சர், டோனர், மாய்ஸ்ச்சரைசர் என அனைத்தும் ஒரே பிராண்டாகத் தேர்ந்தெடுங்கள்.  வெவ்வேறு பிராண்ட் பயன்படுத்தும்போது அது பல நேரங்களில் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது இல்லை.

மழைக்காலம் வந்துவிட்டாலே, குளிருக்குப் பயந்து வெந்நீர்க் குளியலுக்கு மாறிவிடுவோம். அதிக சூடான நீரில் நீண்ட நேரம் குளிக்கும்போது, சருமத்தில் உள்ள அத்தியாவசிய ஈரப்பதமும் போய்விடும். எனவே, வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.

கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக நேரம் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவைதான் முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றுக்கு முக்கியக் காரணம். இதற்குப் பதில் பழங்கள், பச்சைக் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். அனைத்துக்கும் மேலாக, ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துங்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தொடர்ந்து இவற்றைக் கடைப்பிடிக்கும்போது, சருமம் பொலிவாகும். இளமையையும் தக்கவைக்கலாம்!''

- பா.பிரவீன் குமார்

படம்: ஜெ.வேங்கடராஜ்