Published:Updated:

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

சிகிச்சைகள் + பயிற்சிகள்

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

சிகிச்சைகள் + பயிற்சிகள்

Published:Updated:
எலும்பைக் காக்க எளிய வழிகள்!

'அடடா அந்தப் பையன் எவ்வளவு அழகா இருக்கான்ல?’, 'வாவ்...உன்னை மாதிரி ஒரு அழகியை நான் பார்த்ததே இல்லை!’ என்றெல்லாம் சிலிர்க்கிறோம், ரசிக்கிறோம். ஆனால், நம் எல்லோரின்  தோலுக்கு அடியிலும் இருப்பதென்னவோ, எலும்புக்கூடுதான். பள்ளி ஆய்வுக்கூடத்தில் எலும்புக்கூட்டைப் பார்த்ததும் அச்சத்துடனும் அருவெறுப்புடனும்

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒதுங்கிப்போயிருப்போம். ஆனால் உண்மையில் உடலின் ஆதாரமே, அதைத் தாங்கியிருக்கும் எலும்புக் கூடுதான். சிறிய, பெரிய எலும்புகள் மற்றும் மூட்டுகள் எனப் பிரமாதமாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கட்டடத்தைப்போல எலும்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இயங்குவதுதான் மனித உடல். தலை, கை, கால், கழுத்து, இடுப்பு, முதுகுத் தண்டுவடம், விரல்கள், பாதம் என, உச்சி முதல் பாதம் வரை வியாபித்திருக்கும் எலும்புகள், ஏதாவது ஒரு வகையில் அடிபட்டாலோ, நொறுங்கினாலோ, முறிந்தாலோ... நம் உடலின் இயக்கம் முடங்கிவிடும். தவிர, மூட்டுத் தேய்மானம், ஊட்டச்சத்துக் குறைபாடு, எலும்பு நீட்சி, ஜவ்வு வளர்தல் என எத்தனையோ கோளாறுகள் வேறு. அதனால்தான், சிறு மூட்டு வலியில் தொடங்கி, ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோபொரோசிஸ் என வரிசைகட்டி வருகின்றன எலும்பு தொடர்பான நோய்கள். நம் எலும்புகளின் மீது அக்கறை எடுத்துக்கொண்டால், மூட்டு தேய்மானங்களையும் வலிகளையும் தள்ளிப்போடலாம்... ஏன் தடுத்தே நிறுத்தலாம்.

எலும்புகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான காரணங்கள் மற்றும் நிவாரணங்கள், எலும்பைப் பாதுகாக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்குகிறார், சென்னை விசா மருத்துவமனையைச் சேர்ந்த, எலும்பு மூட்டு நிபுணர் டாக்டர் டி.வி.ராஜா.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

''எலும்புகளில் ஏற்படும் முக்கியமான பிரச்னைகள் தேய்மானமும் அடர்த்திக் குறைவும்தான். எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்பட முக்கியமான காரணங்கள், நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றம், போதிய உடற்பயிற்சி இல்லாமை, கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட் வகைகள், சூரிய வெளிச்சம் அதிகம் படாத வாழ்க்கைமுறை போன்றவை. சூரிய ஒளியிலிருந்து நமக்குக் கிடைக்கும் வைட்டமின் டி சத்துக் குறைவுதான், பல எலும்பு தொடர்பான நோய்களுக்கு ஹாய் சொல்லி வரவேற்கிறது.

வைட்டமின் டி குறைபாடு

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

எலும்பு தொடர்பான பிரச்னை வருவதற்கான அடிப்படைக் காரணம் வைட்டமின் டி குறைபாடு. சூரிய ஒளி, நம் தோலில் படும்போது, அதன் மூலம் உற்பத்தியாகும் வைட்டமின்தான் டி. இதைச் சூரிய ஒளி வைட்டமின் (Sunshine vitamin) என்றும் குறிப்பிடுவர். வெப்பமண்டலப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது நம் நாடு. இருந்தாலும், மக்கள் தொகையில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், இந்த வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். பொதுவாக, காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலான நேரத்தில், சூரிய ஒளி நம் மேல் படுமாறு அரை மணி நேரம் இருந்தாலே போதும். ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும்.

காரணங்கள்:

வைட்டமின் டி குறைபாடு ஏற்படக் காரணங்கள்:

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

அதிகம் சூரிய ஒளி படாமல் இருப்பது.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில், எப்போதும் மூடிய கதவுகள், ஸ்கிரீன் போட்ட ஜன்னல்கள் என்று நான்கு சுவர்களுக்குள்ளேயே இருப்பது.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில், ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அலுவலகங்களில் வேலை செய்யும் சூழ்நிலை.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் வலிப்பு நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் வரலாம்.

ஒரு நாளைய வைட்டமின் டி தேவை: (இன்டர்நேஷனல் யூனிட்களில் - இ.யூ)

பிறந்த குழந்தைகளுக்கு 400 இ.யூ

வளரும் குழந்தைகளுக்கு 800 இ.யூ

இளம் வயதினருக்கு 1000 இ.யூ

முதியவர்கள், பருமனாக இருப்பவர்கள், மற்றும் அடர் தோல் நிறம் கொண்டவர்களுக்கு 2000 இ.யூ

குறைபாட்டால் வரும் நோய்கள்:

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

குழந்தைகளிடம் வைட்டமின் டி குறைந்தால், 'ரிக்கட்ஸ்’ என்னும் நோய் வரும். பெரியவர்களிடம் வைட்டமின் டி குறைந்தால், எலும்பு வலி, தண்டுவட வலி, குதிகால் வலி, சிறுமூட்டுகள் பாதிப்பு, உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

தவிர்க்கும் வழிகள்:

எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 வைட்டமின் டி குறைபாட்டைச் சரிசெய்ய, இப்போது மாத்திரைகள், ஊசிகள் ஏராளம் வந்துவிட்டன. வாரம் ஒரு முறை, அல்லது மாதம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். ரத்தப் பரிசோதனை செய்து, வைட்டமின் டி அளவைப் பரிசோதித்த பின்னரே, சிகிச்சை எடுக்க வேண்டும். ஆனால், அது தற்காலிகமான தீர்வுதான். நிரந்தரமான தீர்வு, இயற்கையான முறையில் வைட்டமின் டி-யைப் பெறுவதுதான்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 துப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடுவது, முக்காடு போடுவது, சன் ஸ்கிரீன் அடர்த்தியாகப் போட்டுக்கொள்வது, எல்லாநேரமும் கதவைச் சார்த்திக்கொண்டு ஏ.சி அறையில் இருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர், மருத்துவரை அணுகி, எத்தனை நாட்களுக்கு கால்சியம், வைட்டமின் டி சத்து மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று ஆலோசனை கேட்டு, எடுத்துக்கொள்ளலாம்.

எலும்புத் தேய்வு நோய் (Osteo Arthritis)

எலும்புகளையும் மூட்டுக்களையும் தாக்கும் நோய் இது. முன்பெல்லாம், 50, 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் இந்த நோய் வரும். இப்போது 30, 40 வயதிலேயே வந்துவிடுகிறது. காரணம், நம்முடைய நவீன வாழ்க்கைமுறை. ஜங்க் ஃபுட், உடற்பயிற்சியின்மை மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மாசு போன்றவை. சிலருக்கு மூதாதையர்களின் மரபணுக்கள் மூலமாகவும் இந்த நோய் வரலாம். இதனால் உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை என எல்லாம் அதிகரிக்கிறது. எடை அதிகரிப்பதால், மூட்டுக்களில் பாரம் இறங்கி, தேய்மானம் வருகிறது. அதனால், மூட்டுக்களில் வலி, வீக்கம் உண்டாகி, மூட்டுக்களின் இயக்கமே குறைகிறது.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

தவிர்க்கும் வழிகள்:

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 உயரத்துக்குத் தகுந்த எடையைப் பராமரிக்க வேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 இயற்கை உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 அதிக கால்சியம் சத்தை எடுத்துக்கொள்ளலாம்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 சூரிய ஒளி படுமாறு சில நிமிடங்கள் இருக்கலாம் அல்லது நடக்கலாம்.

இவற்றையெல்லாம் சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்திக் கொண்டுவந்தால், பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. அப்படி பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர் சொல்வது போல, எடைக் குறைப்பு, பிசியோதெரபி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாக, மூட்டுத் தேய்மானம் வருவதற்கு, நம் வழக்கப்படி கீழே உட்கார்ந்து எழுதல், இந்திய வகைக் கழிப்பறைகளில் உட்கார்ந்து எழுதல் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. தாராளமாகக் கீழே உட்கார்ந்து எழலாம். இந்திய வகைக் கழிப்பறைகளை உபயோகிக்கலாம். ஆனால், மூட்டுக்களில் வலி, வீக்கம், தேய்மானம் போன்ற ஏதேனும் ஒரு பிரச்னை வந்துவிட்டால், அதன் பிறகு கீழே உட்கார்ந்து எழுவதைத் தவிர்க்க வேண்டும்.

குதிகால் வலி

காரணங்கள்:

இது அதிகமாகப் பெண்களைத் தாக்கும் நோய். பெண்கள் நான்கு பேருக்கு என்றால், ஆண்களில் ஒருவருக்கு (4:1) என்ற விகிதாச்சாரத்தில் காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், பெண்களின் உடலில் அடிக்கடி நிகழும் ஹார்மோன் மாற்றங்கள்தான். பூப்படைதல், மாதவிடாய்க் காலம், கர்ப்பகாலம், மெனோபாஸ் காலகட்டம் என அடிக்கடி பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் திசுக்கள் அதிகம் பாதிப்படுகின்றன. இதனால்தான், பெண்களுக்கு வலி அதிகம் ஏற்படுகிறது.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 குதிகாலில் எலும்பு வளர்தலும் (spur), குதிகால் வலிக்குக் காரணமாகும். இந்த எலும்பை அறுவைசிகிச்சை மூலம் நீக்கினாலும் வலி போகாது.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 குதிகாலைச் சுற்றி இருக்கும் ஜவ்வு வளர்தல்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 குதிகாலில் இருக்கும் கொழுப்புப் பகுதி (fat pad thin) வற்றுதல்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

தவிர்க்கும் வழிகள்:

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 இதற்காக ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து தினமும் உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரப்பி செய்தாலே போதும். பிசியோதெரப்பிஸ்ட் அல்லது எலும்பு மூட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்யலாம்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 குதிகால் வலிக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் எம்.சி.ஆர். (MCR  - Micro cellular rubber) அல்லது எம்.சி.பி. (MCP -- Micro cellular polimer) செருப்புகளை வாங்கி அணியலாம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், எம்.சி.ஆர் செருப்பை விட, எம்.சி.பி செருப்பு பலன் தரும். ஆனால், இந்த வகைச் செருப்புகள் 4, 5 மாதங்கள் வரையில்தான் உழைக்கும். பிறகு, ரப்பர் 'சோல்’ தேய்ந்துவிடும். அது தேய்ந்த பிறகு உபயோகிக்கக் கூடாது. பலன் இருக்காது. வேறு செருப்பு மாற்றிக்கொள்ள வேண்டும்.

டயபெட்டிக் ஃபுட்

சர்க்கரை நோயாளிகளுக்குப் பொதுவாக பாதங்களில் வரும் பாதிப்பை, 'டயபெட்டிக் ஃபுட்’ என்று சொல்வோம். இந்த பாதிப்பு முற்றும்போது, காலை வெட்டி எடுக்கக்கூடிய நிலைகூட ஏற்படலாம். ஸோ, கவனம் தேவை.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

சர்க்கரை நோயாளிகள், தங்கள் பாதங்களை வெகு கவனத்தோடும் அக்கறையோடும் பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோய் அதிகமாகும்போது, பாதங்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, உணர்வு குறைந்து, எரிச்சல் தோன்றும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உணர்வு மரத்துப்போகும். காலில் செருப்புப் போட்டு நடக்கும்போது, அது கழன்று, காலை விட்டு விலகிப் போனாலும், அவர்களால் உணரக்கூட முடியாமல் போகலாம்.

நடக்கும்போது கல் குத்தி, காயம் ஏற்படலாம். அந்தக் காயத்தையோ, வலியையோ, அவர்களால் உணர முடியாது என்பதால், காயம் ஏற்பட்டாலும் அவர்களுக்குத் தெரியாது. புண் ஆறாமல், செப்டிக் ஆகி, மற்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும்போது, காலை நீக்க வேண்டிய நிலை வரலாம்.    

அதேபோல, சர்க்கரை நோய் இருப்பவர்கள், கோயிலில் கல் தரைகளில் பிரகாரம் வரும்போது, சிலருக்குத் தோல் பிய்த்துக்கொள்ளலாம். பாதம் மரத்துப் போயிருந்தால், அதையும் அவர்களால் உணர முடியாது. அது ஆறாமல் அப்படியே 'செப்டிக்’ ஆகிவிடும். காலில் வீக்கம் ஏற்படும். உணர்வுத்தன்மை போய்விடும்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, புகை பிடித்தல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்கள் இருந்தால், அதை நிறுத்தும் முயற்சியைத் தொடங்கவேண்டும். இல்லையெனில், ரத்தக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு, கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் செல்வது பாதிக்கப்பட்டு 'ஜாங்க்ரின்’ (Gangrene) என்னும் நிலை ஏற்படலாம்..

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

தவிர்க்கும் வழிகள்:

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 சர்க்கரை நோய் இருப்பவர்கள், தினமும் பாதங்களை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 கண்ணாடியை வைத்து காயம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 எங்கு சென்றாலும் காலணி அணிந்தே நடக்க வேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 பாதங்களில் சிறு காயம், புண் என்றாலும் உடனே மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 சர்க்கரை நோயாளிகளுக்காகவே இப்போது, 'அனடைன் தெரப்பி’ (Anodyne Therapy) என்னும் நவீன சிகிச்சை வந்துள்ளது. இதன் மூலம், இந்தப் பிரச்னைகள் எல்லாவற்றுக்குமே சிகிச்சை அளிக்கலாம்.

மூட்டு தேய்மானம்

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

இரண்டு எலும்புகள் சேரும் இடங்களில் எல்லாம் மூட்டுக்கள் உள்ளன. அசையும் மூட்டுக்களில் முக்கியமானவை கால், கை மூட்டுக்கள். இவைதான் கால், கை அசைய காரணமாக இருக்கின்றன. பாரம் சுமக்கும் மூட்டுக்கள்தான், வெகு சீக்கிரம் தேய்கின்றன. பொதுவாக, முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு மற்றும் கணுக்கால் மூட்டு போன்றவை அதிகம் தேய்மானம் அடைகின்றன. மூட்டு தேய்மானம் அடைந்தவர்களுக்கு அந்தப் பகுதியில் தீவிரமான வலி இருக்கும். பரிசோதனையில், தேய்மானம் என்று தெரிய வந்தால், அதற்கான சிகிச்சைகள் இருக்கின்றன. உடற்பயிற்சிகள், ஊசி மருந்து, அறுவைசிகிச்சை போன்றவற்றால் தேய்மானத்துக்கு சிகிச்சை அளிக்கலாம். தேய்மானம் அதிகமாகி, இயங்கவே முடியாத நிலை எனில், மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம்.

இப்போது, இன்னும் நவீன முறையில், இடுப்பில் இருக்கும் எலும்பு மஜ்ஜையை எடுத்து, அதிலிருக்கும் ஸ்டெம்செல்லை  ஊசி மூலம் மூட்டுக்குள் செலுத்தும்  சிகிச்சையும் (BMAC) நம் நாட்டில் அறிமுகமாகி உள்ளது.

முக்கியமாக, தேய்மானம் உள்ளவர்கள், கீழே விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மூட்டு மாற்று அறுவைசிகிச்சை:

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

மூட்டுக்களில் அதிகத் தேய்மானம் ஏற்பட்டவர்கள், கால் வளைந்து நடக்கச் சிரமப்படுபவர்கள், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்றும் தன் வேலையைத் தானே செய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இப்போது அதிலும் நிறைய நவீன முறைகள் வந்துள்ளன. முழு மூட்டையும் மாற்றவேண்டிய அவசியம் இல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதியில் சிறு நுண்துளை அறுவைசிகிச்சை செய்வதன் மூலம் பாதி மூட்டை மட்டும் மாற்றலாம்.  

எலும்பு அடர்த்திக் குறைவு

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

எலும்புகளுக்கென்று அடர்த்தித்தன்மை (Bone density) உண்டு. அந்த அடர்த்தி மிகவும் குறைவாக இருந்தால், எலும்பு சார்ந்த பிரச்னைகள் வரும். எலும்பின் அடர்த்தியைக் கண்டறிவதற்கென்று 'எலும்பு அடர்த்தித்தன்மை பரிசோதனை’ (BMD Test) உள்ளது. இதை 'டெக்ஸா ஸ்கேன்’ (Dexa Scan) என்று சொல்வோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோலின் படி,

எலும்பின் அடர்த்தி  0 - 1  இருந்தால் பயப்படத் தேவை இல்லை.

எலும்பின் அடர்த்தி   1 - -2.5 இருந்தால், எலும்பின் அடர்த்தி குறைந்துள்ளது என்று அர்த்தம். அந்தக் குறைபாட்டை 'ஆஸ்டியோபீனியா’ என்கிறோம்.

எலும்பின் அடர்த்தி -2.5க்கும் மேல் இருந்தால், மிகவும் அபாயகரமான நிலை. இதை 'ஆஸ்டியோபொரோசிஸ்’ என்று கூறுகிறோம்.

ஆஸ்டியோபீனியா

இது எலும்பின் அடர்த்தி குறையத் தொடங்கும் ஆரம்ப நிலை. ஒருவருக்கு அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டாலோ, அடிக்கடி எலும்பில் வலி ஏற்பட்டாலோ, உடனடியாக எலும்பு சிறப்பு மருத்துவரைப் பார்த்து, அவர் ஆலோசனைப்படி எலும்பின் அடர்த்தியைக் கண்டறிய 'டெக்ஸா ஸ்கேன்’ எடுத்துப் பார்க்க வேண்டும். அதில், ஆஸ்டியோபீனியா / ஆஸ்டியோபொரோசிஸ் என்று தெரிந்தால், உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

தினசரி ஊசி, வாரம்தோறும் மாத்திரை, மாதம் தோறும் மாத்திரை, ஆண்டுக்கு ஒரு முறை ஊசி என அவரவர் குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைமுறைகள் உள்ளன.

ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளது என்று தெரிந்துவிட்டால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நடக்கும்போது, படி ஏறி, இறங்கும்போது அதிகக் கவனம் தேவை. ஏனெனில், இவர்களின் எலும்பின் அடர்த்தி குறைவாக இருப்பதால், விழுந்து அடிபட்டால் எளிதில் முறிந்துவிடும் வாய்ப்பு உண்டு. கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆஸ்டியோபொரோசிஸ்

பொதுவாக, 30 வயது வரையில் மனிதனுக்கு எலும்பு வளரும். அதன் பின்னர், வளர்வது நின்று தேய்மானம் ஆரம்பிக்கும். எனவே 30 வயது வரை உள்ளவர்களுக்கு, ஏதேனும் வளர்சிதை மாற்றக்

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

குறைபாடுகள் இருந்தாலன்றி, ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கான வாய்ப்பு இல்லை. 30 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். காரணம், எலும்பில் படியும் கால்சியத்தின் அளவும், எலும்பின் அடர்த்தியும் ஹார்மோன்கள் சம்பந்தப்பட்டவை. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும் ஆண்களுக்கு டெஸ்டிஸ்ட்ரோன் ஹார்மோனும்தான் எலும்பில் கால்சியம் படியும் பணியை சீராக இயக்குகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், அவர்களின் உடலில் கால்சியம் உற்பத்தி குறைகிறது. இதனால், எலும்பில் படியும் கால்சியத்தின் அளவு குறைந்து, எலும்பின் அடர்த்தியும் குறைகிறது. மேல்நாடுகளில், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஆண்டுதோறும் டெக்ஸா ஸ்கேன் இலவசமாகவே எடுக்கப்படுகிறது. எனவே, மெனோபாஸ் ஆன பெண்கள், தங்களின் எலும்பு அடர்த்தி மற்றும் ரத்தத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி அளவுகளைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

தவிர்க்கும் வழிகள்:

பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களும், கால்சியம் குறைவதால் ஆஸ்டியோபொரோசிஸ் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் எலும்பும் தசைகளும் வலுவானதாக இருக்காது. இவர்கள் நடக்கும்போதோ, நிற்கும்போதோ, பலமின்றி அடிக்கடி கீழே விழுவார்கள். கீழே விழுந்தால், கண்டிப்பாக எலும்பு முறிந்துவிடும். எனவே, இவர்கள் கீழே விழாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்டிலைச் சுற்றி 'பார்’ போல கம்பிகள் போடுதல், வாக்கிங் ஸ்டிக் உபயோகித்தல், வழுக்காத டைல்ஸ் பதித்தல், தரையில் கனமான விரிப்பை (மேட்) விரித்துவைத்தல், பாத்ரூம், டாய்லெட்டில் பக்கவாட்டுச் சுவர்களில் கம்பிகள் வைத்தல் போன்ற செயல்களால் விழுவதைத் தடுக்கலாம்.

கீழே விழுந்தால், முதலில் பாதிக்கப்படுவது, தண்டுவட எலும்புகள், இடுப்பு எலும்பு மற்றும் கை, கால்களில் உள்ள நீளமான எலும்புகள் மற்றும் மணிக்கட்டு எலும்பு ஆகியவை.  

சிகிச்சை முறைகள்:  

ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் அனைத்துமே வருமுன் தடுக்கக் கூடியவை. ஆனால், வந்துவிட்டால், அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, இப்போது நவீன மருந்துகள் ஏராளமாக வந்துவிட்டன. மருந்தை ஆரம்பித்த 3 முதல் 6 வாரங்களுக்குள் நல்ல பலன் கிடைக்கும். கூடவே, ஊட்டச்சத்து மிக்க உணவும் அவசியம் தேவை. ஏற்கெனவே கூறியுள்ளது போல, பால் கண்டிப்பாக தினமும் அருந்தவேண்டும். தானியங்கள் மற்றும் கீரை, புரோகோலி போன்ற பச்சை நிறக் காய்கறிகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன் வகைகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளன. அடிக்கடி உணவில் மீன் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது, 'ஃபோர்ட்டிஃபைடு’ செய்யப்பட்ட பழச்சாறு மற்றும் சாக்லேட் வகைகள் கிடைக்கின்றன.

உணவுகள்:  

எலும்புகளை ஆரோக்கியமாகப் பராமரிப்பதில், உணவுக்கும் உடற்பயிற்சிக்கும்தான் முக்கியமான பங்கு உண்டு. கொழுப்புச் சத்துள்ள, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள், செயற்கை நிறமூட்டிகள், சுவைகள் கலந்த உணவுகள் போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும் நாட்டுக் காய்கறிகள் எல்லாமே, எலும்பு, மூட்டு ஆரோக்கியத்துக்கு நல்லது.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 நிலத்துக்குக் கீழே விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 மாவுச்சத்தையும் கொழுப்புச் சத்தையும் (முக்கியமாக, எண்ணெய்ப் பதார்த்தங்கள்) தவிர்த்து, புரதச்சத்தை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 முருங்கைக் கீரையும், முருங்கைக்காயும் மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 பால், பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற கொட்டைப் பருப்பு வகைகள், முட்டை போன்ற உணவுகள் எலும்புக்கு வலு சேர்க்கும்.

எலும்பு உறுதிக்கு, வெறும் உணவுப் பழக்கம் மட்டுமே போதாது. தினமும் உடற்பயிற்சி செய்தல் மிக அவசியம். கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரையாவது கண்டிப்பாகச் சில பயிற்சிகள் செய்ய வேண்டும்.

 எலும்பு ஆரோக்கியத்துக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, உடற்பயிற்சியும் அவ்வளவு முக்கியம். நமது உடலில் தினசரி நாம் அதிகமாக உபயோகப்படுத்தும், எலும்பு மற்றும் மூட்டுக்களுக்கான சில எளிய உடற்பயிற்சிகளை டாக்டர் ராஜா விளக்குகிறார். எல்லாப் பயிற்சிகளையுமே தினமும் காலை அல்லது மாலையில் 5 முதல் 10 முறை செய்யலாம். வெறும் வயிற்றில் செய்வது நல்லது. பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு, எளிய மூச்சுப் பயிற்சி செய்து 'ரிலாக்ஸ்’ செய்தபிறகு செய்யலாம்.

கழுத்தில் வரும் நோய்கள்

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 கழுத்து எலும்புத் தேய்மானம்

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 கழுத்துத் தசை இறுகுதல்

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 கழுத்தில் வலி

இவற்றிலிருந்து நிவாரணம் பெறக் கழுத்துப் பயிற்சிகள்...

எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!
எலும்பைக் காக்க எளிய வழிகள்!

கெண்டைக்கால் வளைக்கும் பயிற்சி:

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 மல்லாந்து படுத்து, ஒரு காலை லேசாக முட்டியை மடக்கி வைத்துக்கொள்ளவும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

 ஒரு துண்டைக்கொண்டு பாதத்தை மேலே இழுக்கவும். 10 விநாடிகள் அதே நிலையில் இருக்கவும்.

எலும்பைக் காக்க எளிய வழிகள்!

இந்தப் பயிற்சிகள் மட்டுமின்றி, சாதாரணமாகவே கைகளைச் சுழற்றுதல், கைகளைத் தூக்கி இறக்குதல், விரல்களைப் பிரித்து மூடுதல், தோள்பட்டையைச் சுழற்றுதல், கால்களைத் தூக்கி வைத்திருந்து கீழே வைத்தல், கால் விரல்களை மடக்கி நீட்டுதல், விரல்களால் ஒரு துணியைப் பற்றி எடுத்து, மீண்டும் விடுதல்... இப்படி சிறுசிறு பயிற்சிகளை,  அன்றாட வேலைகளுக்கு இடையில் செய்துகொள்வது, மூட்டு மற்றும் எலும்புகளுக்கான உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

- பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism