Published:Updated:

இயன்முறை மருத்துவம்

இயன்முறை மருத்துவம்

இயன்முறை மருத்துவம்

இயன்முறை மருத்துவம்

Published:Updated:

குறிப்பிட்ட சில நோய்களாலோ விபத்தினாலோ பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர உதவுவது பிசியோதெரப்பி. சித்த, ஆயுர்வேத மருத்துவமுறைகளில் எப்படி யோகக் கலையும், வர்மக் கலையும் துணை சிகிச்சைகளாகக் கருதப்படுகின்றனவோ... அதேபோல, அலோபதி மருத்துவ முறையின் துணை சிகிச்சையாக அமைந்துள்ளது இயன்முறை மருத்துவம். வலியின் வீரியம், அதன் கால அளவு, ஏற்பட்ட இடம், பாதிக்கப்பட்ட பகுதி என்ற அனைத்தையும் வேறு எந்தக் கருவிகளின் உதவியும் இன்றி, மருத்துவரின் கைகளைக்கொண்டு கண்டறிவது பிசியோதெரப்பியின் தனித்துவம். இதனை உடலியக்க மருத்துவம் என்றும் கூறலாம் என்கிறார் நூலின் ஆசிரியரும் இயன் முறை மருத்துவருமான தி.செந்தில்குமார்.

இயன்முறை மருத்துவம்

கால் வீக்கம், சுளுக்கு, மூட்டு வலி, முதுகு வலி, அதிக உடல் எடை, குதிகால் வலி, பக்கவாதம், தசைச்சிதைவு நோய் போன்ற நோய்களின் பாதிப்புகளையும் அவற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கான வழிகளையும் விரிவாகத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூட்டு வலி நோயாளிகளுக்கு மூட்டில் போடப்படும் ஸ்டீராய்டு ஊசியின் மோசமான பக்கவிளைவுகளைப் பற்றி மருத்துவரீதியாக விளக்கி, பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவமுறைகளையும் பரிந்துரைக்கிறார். ஆங்கில மருத்துவத்தின் சில பக்கவிளைவுகள் குறித்து விமர்சித்து இருப்பது கவனிக்கத்தக்கது.

வெப்பத்தை உபயோகித்து வலிகளை மற்றும் வீக்கங்களைப் போக்க மெழுகு ஒத்தடம், உடலில் மிக மிருதுவான திசுக்களில் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்த பனிக்கட்டி ஒத்தடம் மற்றும் உடலுக்கு அசைவைத் தந்து ஆரோக்கியத்துக்கு அழைத்துச் செல்லும் உடற்பயிற்சிகள் என ஏராளமான சிகிச்சை முறைகளைப் படங்களுடன் விரிவாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

இயன்முறை மருத்துவம் குறித்து அறிவதற்கான எளிய புத்தகம் இது.

ஆசிரியர்: தி.செந்தில்குமார்

பதிப்பகம்: ஓவியா பதிப்பகம், வத்தலகுண்டு,

தொலைபேசி: 04543-262686 விலை:

இயன்முறை மருத்துவம்

90/-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism