Published:Updated:

தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

Published:Updated:
தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

விரிந்து பரந்துகிடக்கும் சி.பி.ராமசாமி ஃபவுண்டேஷன் வளாகத்துக்கு வெளியே இருந்து பார்த்தால், உள்ளே அப்படி ஒரு மருத்துவமனை இருப்பது தெரியாது. சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள அந்தப் பிரமாண்டமான கட்டடத்தின் உள்ளே நுழைந்தால் அழகிய குடிலுக்குள் அமைந்திருக்கிறது திபெத்தியன் மெடிக்கல் சென்டர். உள்ளே நுழைந்தால் வழக்கமாய் மருத்துவமனைகளில் நாம் உணரும் மருந்து வாசனையோ, நோயின் தடமோ இல்லை. திபெத் கொடிகள் இரண்டு, சுவரில் தொங்க, நடுநாயகமாய்ச் சிரிக்கிறது தலாய்லாமா புகைப்படம். இங்குதான் பல அலோபதி மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களைக்

தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

நாடி பிடித்துப் பார்த்து நோயின் மூலத்தைக் கண்டறிபவர்கள் மாத்திரைகளாகவும் மருந்துகளாகவும் தருவது எல்லாமே மூலிகைகளால் செய்யப்பட்டவை.

'ஹவ் ஆர் யூ? ஹவ் இ்ஸ் யுவர் ஹெல்த்?’ என்று நோயாளிகளை வாஞ்சையுடன் வரவேற்று நோயின் பாதிப்பைப் பொறுமையாகக் கேட்டு, மாத்திரைகளை எழுதித் தருகிறார் இந்த மெடிக்கல் சென்டரின் முதன்மை மருத்துவர் குங்கா ஜிக்மே. அங்கேயே உள்ள கவுன்டரில் சீட்டை நீட்டி மாத்திரைகளைப் பெற்றுச்் செல்கின்றனர் நோயாளிகள்.

திபெத்தியன் மருத்துவம் என்ன மாதிரியானது, எதற்கெல்லாம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து டாக்டர் குங்கா நம்மிடம் விரிவாகப் பேசத் தொடங்கினார்.

''திபெத்தியன் மருத்துவம் என்பது ஆயுர்வேத பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைதான். 2,000 வருடங்களுக்கும் மேலாக இது தொடர்கிறது. 1959ல் திபெத்தியன் மருத்துவப் படிப்பைத் தொடங்கிவைத்தார் தலாய்லாமா. இந்த மருத்துவப் படிப்பை முடித்

தவர்கள் இந்தியாவில் உள்ள 55 கிளைகளில் பணிபுரிகின்றனர். சென்னையில் இந்த கிளினிக்கைத் தொடங்குவதற்கு முன்பு, மாதம் ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மக்களிடையே நல்ல வரவேற்பு  க்ிடைத்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 2010ல் சென்னையிலும் கிளை ஆரம்பிக்கப்பட்டது.

சளி, இருமல், காய்ச்சல் எனச் சின்னப் பாதிப்பிலிருந்து தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, மன அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், மாதவிடாய்ப் பிரச்னை என எல்லாவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் முழங்கால், மூட்டு வலி பாதிப்புக்கு உள்ளானவர்கள்தான். ஆர்த்தோ பிரச்னை உள்ளவர்களுக்கு மூலிகைத் தைலங்கள் வழங்கப்படுகின்றன. அதனை எப்படிப் பயன்படுத்தவேண்டும்... என்ற முறைகளையும் விளக்குகிறோம்.'

தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

'இந்த மருத்துவ முறையில் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியுமா?'

'எந்த ஒரு நோய்க்குப் பின்னாலும், வேறு ஒரு பாதிப்பு கட்டாயம் இருக்கும். உணர்வு மற்றும் இடைவெளி, ஆழம், வலிமை, துடிப்பின் வேகம் மற்றும் துடிப்புத் தரம் இவற்றை நாடி பிடித்்தே பல நோய்களின் ஆணிவேரை அறிந்துவிடலாம். இதுவும் பாரம்பரிய இந்திய மருத்துவமுறைகளுடன் பொருந்திப் போகக்கூடியவைதான். இப்படி நோயின் மூலகாரணத்தை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுவதால் மீண்டும் அந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறையும்.

ஆனால் இது கிளினிக் மட்டும்தான். மருந்தும் ஆலோசனையும் மட்டுமே வழங்கப்படுகிறது. நோயாளி வந்ததும், அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பைப் பரிசோதிப்போம். மேலும், வேறு எங்காவது சிகிச்சை பெற்றிருந்தால் அதன் விவரங்களை வாங்கி அதற்கேற்ப சிகிச்சை அளி்ப்போம். ஆனால், தலைமை இடமான திபெத்தியன் தர்மசாலாவில் எல்லாவிதமான பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆர்த்தோ பிரச்னை உள்ளவர்களுக்கு, ஸ்டீம் பாத் தெரப்பி, வாட்டர் தெரப்பி மற்றும் உணவு முறைகள் என அங்கு அதிக வசதிகள் உண்டு.'

'அரிய வகை நோய்களுக்கும் இங்கு மூலிகை மருந்துவம் உண்டா?'

தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

'மாதம் இருமுறை திபெத்தியன் மருத்துவ மத்தியக் குழுவின் தலைவர் டார்ஜீ ராப்டென் நேஷார், சென்னைக்கு வருவார். முன்கூட்டியே முன்பதிவு செய்துகொண்டு, அவரைச் சந்திக்கலாம். புற்றுநோயில் தொடங்கி மைட்டோகாண்ட்ரியா, மரபணுக் கோளாறு போன்ற பல்வேறு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து, அதற்கேற்ப சிகிச்சை உணவு முறைகளைச் சொல்வார். வரும்போது, முன்னால் எடுத்த மருத்துவ சிகிச்சைக் கோப்புடன் வரவேண்டும்.'

உடல்ரீதியான பிரச்னை இருப்பவர்கள் ஒருதடவை போய்த்தான் பாருங்களேன்!

வலி இல்லை...விலையும் அதிகம் இல்லை!

இங்கு கன்சல்ட்டிங் ஃபீஸாக, 60 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சம்  15 நாட்கள் வரை மாத்திரை, மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றின் விலை 500 முதல் 600 ரூபாய்.

அரியவகை நோய்க்கும் அசத்தல் தீர்வு, டாக்டர் டார்ஜீ ராப்டென் நேஷார்

நோயாளியின் மணிக்கட்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் மெதுவாகத் தொட்டு, தட்டுவதன் மூலம் அவர்களின் துடிப்பு ஆற்றலின் வடிவத்தைப் புரிந்து அதன் மூலம் நோயாளியின் பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள முடியும். 'பல்ஸ் பகுப்பாய்வு’ என்ற இந்த முறை திபெத்தியன் மருத்துவத்தில் மிக அடிப்படையானது.

சென்னையைப் பொறுத்தவரை சர்க்கரை நோய், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கைதான் மிக அதிகம். உதாரணத்துக்கு, கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொண்ட புற்றுநோயாளி்க்கு பக்கவிளைவு அதிகம் இருக்கும். என்ன மருந்தெல்லாம் கொடுக்கப்பட்டது என்பதைக் கேட்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை தரப்படும். அந்த நேரத்தில் அவர்கள் என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்படும்.

இமயமலைப் பகுதியிலிருந்து பல்வேறு அரிய வகை மூலிகைகளைக் கொண்டுவந்து ஆராய்ச்சி செய்து, அவற்றை மாத்திரை வடிவிலும், மூலிகைத் தைலங்களாகவும் தயாரிக்

கி்றோம்். புற்றுநோய்க்கு, 60க்கும் மேற்பட்ட மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் தரப்படுகின்றன. அவை நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்துவதுடன், எடுத்துக்கொள்ளும் அலோபதி மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைத்துவிடும். சக மனிதர்களைப் போல் ஆரோக்கியமாக நடமாடுவதற்கும் மூலிகை மாத்திரைகளுடன் உணவு கட்டுப்பாடு, தியானம் மற்றும் ஆலோசனைகள் தருகிறோம்.

மருத்துவ சாதனை!

மாற்று மருத்துவத்தில் புகழ்பெற்று வரும்்் திபெத்திய மருத்துவத்தில், அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர்.

தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள். இருவரும் அல்பீனிசக் குழந்தைகள். பார்த்தால் கணிக்க முடியாது. 10 வயது கடந்த பிறகுதான் திடீரென்று ஒரு குழந்தைக்குக் காய்ச்சலுடன் உடல் சோர்வும் தொடர்ந்து இ்ருக்க, ரத்தப் பரிசோதனை செய்திருக்கின்றனர். அல்பீனிசக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே வரும் நோயான செடியாக்  ஹிகாசி சிண்ட்ரோம் நோய் அந்தக் குழந்தைக்கு இருந்தது தெரிந்தது. உடலின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை படுவீழ்ச்சிக்குப் போய்விடுவதே இந்த நோயின் அறிகுறி. இதற்கெனத் தனியான மருந்துகள் இன்னும் நவீன மருத்துவத்தில் கண்டு பிடிக்கப்படவில்லை.

டாக்டரின் ஆலோசனையின் பேரில், கேன்சருக்கு அளிக்கும் கீமோதெரப்பி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டனர்.  அப்படியும் நிலைமை மோசமாக, சென்னையிலுள்ள திபெத்திய மருத்துவ நிலையத்துக்கு, அனைத்துச் சோதனை அறிக்கைகளோடும் அந்தக் குழந்தையை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அவர்கள் பரிசோதித்து அளித்த மருந்துகளை, ஏற்கனவே சாப்பிட்டு வந்த அலோபதி மருந்துகளோடு சேர்த்து உண்ணத் தொடங்கியதில், ஆச்சர்யமான வகையில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை சில மாதங்களில் மளமளவென உயர்ந்து, தற்போது முழுமையாகக் குணமடைந்து

விட்டது அந்தக் குழந்தை. நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே மருந்துகளின் தேவையும், கண்டுபிடிப்புகளும் இருக்கும் இந்தக் காலத்தில் இதுபோன்ற குறிப்பிட்ட மருந்தில்லா நோய்களில் இருந்து மீளவாவது மாற்று மருத்துவத்தின் பக்கம் பார்வையைத் திருப்பலாம்.

ரேவதி

படங்கள்: கார்முகில் வண்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism