Published:Updated:

நாயகன் ‘நாயகி’யின் ஹெல்த் சீக்ரெட்ஸ்...

அம்மா சரண்யா அட்வைஸ்

நாயகன் ‘நாயகி’யின் ஹெல்த் சீக்ரெட்ஸ்...

அம்மா சரண்யா அட்வைஸ்

Published:Updated:

'நாயகன்’ பட நாயகி, தமிழ் சினிமாவின் 'அம்மா’ சரண்யா பொன்வண்ணன்.  பரபர ஷூட்டிங் இடைவெளியில் பளிச் புன்னகையுடன் பேசினார்.  

'அளவான சாப்பாடு, நிம்மதியான உறக்கம், நடைப்பயிற்சி இது மூணும்தான் நான் கடைப்பிடிக்கும் மிக முக்கியமான விஷயங்கள். கடந்த 10 வருஷமாவே, விடிகாலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்திடுவேன். தினமும் விடிகாலை இளஞ்சிவப்பு நிறத்தில் உதிக்கிற சூரியனை ரசிச்சிட்டே ஒரு மணி நேரம் நடப்பேன். டிரெட்மில்லில் நடப்பதைக் காட்டிலும், இப்படி, வெளியில் காலாற நடந்தால் வைட்டமின் டி சத்து கிடைக்கிறதோட, புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அப்புறம், ஒரு கப் காபி குடிப்பேன்.  சமையல் வேலைகளை முடிச்சிட்டு, எட்டரை மணிக்குள் காலை உணவு கட்டாயம் சாப்பிட்டுடுவேன்.  மதியம் ஒரு மணிக்கு லஞ்ச், மாலை ஒரு கப் டீ. இரவு 8 மணிக்கு டின்னர் முடிச்சு, ஒன்பதரை மணிக்கெல்லாம் தூங்கப் போயிடுவேன். சீரியல், நைட் ஷோ எதையும் பார்க்க மாட்டேன். நான் பியூட்டி பார்லருக்குப் போய் கிட்டத்தட்ட 15 வருஷம் ஆயிடுச்சு. எந்த க்ரீமும் பூச மாட்டேன். அதனாலதானோ என்னமோ, என் சருமமும் நல்லாவே இருக்கு. சுத்தமாக இருந்தாலே போதும். நாம் அழகாத் தெரிவோம்.   மனசு சந்தோஷமா இருந்தா, முகமும் மலர்ச்சியா இருக்கும்.'

நாயகன் ‘நாயகி’யின் ஹெல்த் சீக்ரெட்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உங்க டயட் மெனு?'

'டயட்டா..? (சிரிக்கிறார்) டயட்னு  எந்த உணவையும் ஒதுக்கிவைக்கக் கூடாது. அப்பறம் ஒரு கட்டத்துல அந்த உணவே செட்டாகாமப் போயிடும்.  எல்லா உணவுகளையும் தேவையான அளவு எடுத்துப்பேன். வீட்டில் மட்டும்

தான் நான்வெஜ் சாப்பிடுவேன். ஷூட்டிங் டைமில் வெஜ் உணவு மட்டும்தான். பெரும்பாலும் ஐஸ்க்ரீம், கேக், சாக்லேட், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுவேன். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் நம்ம உடம்புக்குத் தேவையே இல்லை.  அதை சாப்பிட்டுட்டு டயட்னு அரிசி சாதத்தைக் குறைச்சு சாப்பிடறது ரொம்பவே தப்பு. என் குழந்தைகளும் பதப்படுத்தப்பட்ட, கொழுப்புச் சத்து நிறைஞ்ச உணவுகளை  அவங்களாவே தவிர்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்கா

வது விருந்து நிகழ்ச்சிக்குப் போனேன்னா, அதுக்கு முந்தைய வேளை குறைவாக சாப்பிடுவேன். விருந்துக்கு போயிட்டு வந்து பசிச்சாலும், ஒரே ஒரு ஆப்பிள் மட்டும்தான் எடுத்துப்பேன்!'

'தொடர்ந்து படப்பிடிப்பு... எப்படி குடும்பத்தைக் கவனிக்கிறீங்க?'

'வீட்டில் எந்த வேலையுமே இல்லாமல் சும்மா இருந்தால், சோம்பேறித்தனமும், தேவையில்லாத சிந்தனைகளும்தான் உதிக்கும். கடையில் காய்கறி வாங்குவதில் ஆரம்பிச்சு, மூணு வேளைக்கும் குடும்பத்துக்கு சமைக்கிறது வரை எல்லாத்தையும் நான்தான் செய்வேன்.  எந்தக் காரணத்தைக்கொண்டும் நம் குடும்பப் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது. நம்ம வீட்டை நாம் தான் சுத்தமா அழகா வெச்சுக்கணும். டெய்லரிங் ரொம்பப் பிடிக்கும். அதிகமா ரெடிமேட் கடைக்குப் போய் நான்  துணி எடுத்ததே இல்லை. எனக்கு, என் குழந்தைகளுக்கு இப்போதைய டிரெண்டுக்கு ஏத்தமாதிரி டிரஸ் வடிவமைச்சு, தைச்சுப்பேன். டெய்லரிங்கூட கைக்கு நல்ல எக்சர்சைஸ்தான். நம்மோட கான்சன்ட்ரேஷன் கூட அதிகரிக்கும். அதே போல, வீட்டில் குழந்தைகளிடம் நாம காட்டுற அன்பு அவங்களோட எதிர்கால வாழ்க்கையைப் பிரகாசமா வெச்சிருக்கும்' என்றார்.

அழகான அம்மா... ஆரோக்கியமான அம்மா!

நாயகன் ‘நாயகி’யின் ஹெல்த் சீக்ரெட்ஸ்...

இல்லத்தரசிகள் நலத்துக்கு டிப்ஸ்

நாயகன் ‘நாயகி’யின் ஹெல்த் சீக்ரெட்ஸ்...

தினமும் நடக்கப் பழகுங்கள்.

நாயகன் ‘நாயகி’யின் ஹெல்த் சீக்ரெட்ஸ்...

 ஏதாவதொரு பொழுதுபோக்கையே தொழிலாகச் செய்யலாம்.

நாயகன் ‘நாயகி’யின் ஹெல்த் சீக்ரெட்ஸ்...

 பிள்ளைகள் முன் நீங்கள் ஒழுக்கமாக வாழ்ந்துகாட்டுங்கள். அவர்கள் சிறுவயதில் இருந்தே உங்களைக் கவனிக்கிறார்கள். உங்களின் ஒவ்வொரு செயல்பாடும் அவர்கள் மனதில் பதியும்.

நாயகன் ‘நாயகி’யின் ஹெல்த் சீக்ரெட்ஸ்...

 குழந்தைகளுக்கு கண்டிப்பு தேவை இல்லை. பாசம்தான் தேவை, ஒவ்வொரு ஜீவனுமே பாசத்துக்காகத்தான் ஏங்குகி்றது. தவறு செய்தால், பொறுமையாக, அன்பாக சுட்டிக்காட்டுங்கள்.

நாயகன் ‘நாயகி’யின் ஹெல்த் சீக்ரெட்ஸ்...

 அழகு என்பது உடையில், க்ரீம்களில் இல்லை. நல்ல உணவு, மகிழ்ச்சியான மனநிலை, உடற்பயிற்சியில்தான் இருக்கிறது என உணருங்கள்.

-பு.விவேக் ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism