Published:Updated:

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

பிரேமா நாராயணன் படங்கள்: எம்.உசேன்

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

பிரேமா நாராயணன் படங்கள்: எம்.உசேன்

Published:Updated:

ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பலசரக்கு வகைகள் என, ஓரளவுக்கு நாம் பயன்படுத்தும் எல்லாமே ரசாயனக் கலப்பு இன்றிக் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. அந்தப் பட்டியலில் நம் அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும், இன்னும் இரு முக்கியமான பொருட்களைத் தயாரித்து, பல பெண்களின் வருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன்  ப்ரீத்தி தம்பதி.

கைகளுக்கும் துணிகளுக்கும் பாதுகாப்பான வாஷிங் பவுடர் மற்றும் பாத்திரம் துலக்கும் பவுடரை, ஆர்கானிக் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரித்து,

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ரியா’ என்ற பெயரில் விற்பனைக்கு அனுப்பி, நலவாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கின்றனர். இருவருமே ஐ.ஐ.எம்ல் மேலாண்மைப் பட்டம் பெற்று, பெரிய நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். ஆர்கானிக் பொருட்களின் மேல் இருந்த அதீதக் காதலினால், ஐந்திலக்க வருமானம் வரும் வேலையைத் துறந்தவர்கள்.

சென்னை திருவான்மியூரில் க்ரியா அலுவலகத்தில் ப்ரீத்தி மற்றும் சீனிவாசனைச் சந்தித்தோம். ரசாயனங்கள் அற்ற, துவைக்கும் தூள் மற்றும் பாத்திரம் தேய்க்கும் பொடியைக் கண்டுபிடித்த விதத்தை, சுவாரஸ்யம் ததும்பப் பகிர்ந்துகொண்டார்.

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!
ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

நான் ஐ.ஐ.எம்.ல பி.ஜி டிப்ளோமா முடிச்சிட்டு, பிரபலமான தனியார் நிறுவனங்கள்ல வேலை பார்த்தேன். என் கணவர் சீனிவாசனும் ஜான்சன் அண்டு ஜான்சன்ல வேலை பார்த்தார். நாங்க ரெண்டு பேருமே வேலை செய்துட்டிருக்கப்போ, கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் பத்திப் பேசுவோம்.

ஆர்கானிக் ஃபுட் பத்தின தாக்கம் வர்றதுக்கு முன்பே, 2005லயே ஆர்கானிக் காய்கறிகள், பழங்களைத் தேடித் தேடிப் போய் வாங்கி உபயோகிப்போம். முடிந்தவரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாம இருக்கணும்கிற கொள்கை ரெண்டுபேருக்குமே இருந்தது. அதனாலதான் நாங்க காரே வாங்கல... இப்போது வரை பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டைத்தான் உபயோகிக்கிறோம்.

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

வெறும் பேச்சளவில் இருந்த தாக்கத்தைச் செயல் அளவில் கொண்டு வரணும்கிற ஆர்வம் ரெண்டு பேருக்குமே இருந்ததால, வேலையை விட்டுட்டு, ஒரு வருஷம் வீட்டில் உக்காந்து யோசிச்சோம். அப்போதான்,

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

நம்ம வீட்டுக்குள்ளேயே ரசாயனங்கள் நிறைஞ்ச நச்சுப் பொருட்கள் ஏராளமா இருக்கே... அதை முதல்ல மாத்தணும்’னு முடிவு செஞ்சோம். அதுக்கெல்லாம் 'மாற்று என்ன?’னு யோசிச்சோம்.பேஸ்ட், சோப், வாஷிங் பவுடர் எல்லாம் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாலயே நம் முன்னோர்கள், பல் துலக்கி, பாத்திரம் தேய்ச்சு, துணி துவைச்சு, குளிச்சு சுத்தமாத்தானே இருந்திருக்காங்க? அப்போ அவங்க என்ன உபயோகிச்சிருப்பாங்கன்னு சிந்தனை ஓடுச்சு.

ஒவ்வொரு புத்தகமா தேடிப் படிச்சு, குறிப்புகள் எடுத்தோம். மேலும், செங்கல்பட்டுக்குப்் பக்கத்தி்ல இருக்கிற இருளர்கள் பயன்படுத்தும் நாட்டு மருந்துகள், சத்தீஸ்கரில் உபயோகப்படுத்தும் இயற்கைப் பொருட்கள்னு நிறைய ஸ்டடி பண்ணினோம்.  இதையெல்லாம் அடிப்படையாக வெச்சு, நாட்டு மருந்துக் கடைக்குப் போய் நுரைக்கும் தன்மையுள்ள பூந்திக்கொட்டையை மொத்தமா  5 கிலோ  வாங்கினேன். அதை அப்படியே பொடிச்சு, தண்ணியில் போட்டுக் கொதிக்க வெச்சு, வாஷிங் மெஷின்ல போட்டு, பல வழிகளில் முயற்சி பண்ண ஆரம்பிச்சேன்.

முதல் முயற்சிகள் தோல்வி. ஆனா, தண்ணீரைச் சேமிக்க முடிஞ்சது. அதுக்கு முன்னாடி, டிடர்ஜென்ட் போட்டுத் துவைக்கிறப்போ, அந்தத் தண்ணீரைத் தோட்டத்துக்கு விட முடியாது. ஆனா, பூந்திக்கொட்டைத் தண்ணீரை விட்டதால, செம்பருத்தியில் வர்ற சின்னச் சின்னப் பூச்சிகள் அழிந்ததோடு, செடிகளும் நல்லாப் பூத்துச்சு.

தொடர்ந்து  விடாமுயற்சியோடு, வெவ்வேறு வடிவத்தில், பல வகையான கலவைகளில் சோதனை முயற்சிகள் பண்ணிட்டே இருந்தோம். கடைசியில எங்க முயற்சிக்கு வெற்றி கிடைச்சது. நாங்க உபயோகிச்சது மட்டுமில்லாம, எங்களுக்குத் தெரிஞ்சவங்க, நண்பர்கள் எல்லார்கிட்டேயும் கொடுத்து பயன்படுத்திப் பார்க்கச் சொன்னோம். நல்ல

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

ஃபீட்பேக்’ கிடைச்சது. தூளை ஒரு சிறிய சுருக்குப்பையில் போட்டு, வாஷிங் மெஷினில் உபயோகிக்கலாம். துவைச்ச பிறகு அந்தப் பையில் இருக்கிற பூந்திக்கொட்டைச் சக்கை, செடிகளுக்கு நல்ல உரம். இப்போ ஒரு வருஷமா சோப்புத் தூள் வாங்கறதையே நாங்க நிறுத்தியாச்சு. காசும் மிச்சம்.  கைகளும் நல்லாயிருக்கு. துணிகள் நிறம் போகாம, அதன் தன்மை மாறாம மென்மையா பளிச்னு இருக்கு. தோட்டத்துக்கான தண்ணீரும் கிடைக்குது.

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

இதோட தொடர்ச்சியாபூந்திக்கொட்டை, வேப்பிலை, லெமன் கிராஸ் சாறு, கிச்சிலிக்கிழங்கு சேர்த்து அரைச்சு பாத்திரம் தேய்க்கும் தூள் தயாரிச்சோம். பொடியோட ரிசல்ட் நல்லா இருந்தது. முக்கியமா, கண்ணாடிப் பாத்திரங்கள், செம்பு மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் பளிச்னு இருக்கும்.  கொஞ்சமா பொடி எடுத்து, தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்கி, அதைத் தொட்டுப் பாத்திரம் தேய்க்கிறதால, நீண்ட நாளைக்கும் வருது.

பொதுவா, பாத்திரம் தேய்க்கிற பெண்கள் பாதிப் பேருக்கு வலதுகை கட்டைவிரல்,   ஆள்காட்டிவிரல் புண்ணாகி, நகமே இருக்காது. இல்லேன்னா, பூஞ்சைத் தொற்று வந்து கருப்பாகி இருக்கும். இந்தத் தூளைப் பயன்படுத்தி, பாத்திரம் தேய்ச்சா எந்தப் பாதிப்பும் இருக்காது. எங்க வேலைக்காரம்மா, அந்த வித்தியாசத்தை உணர்ந்து நிறைய வீடுகள்ல சொல்ல, எல்லோருமே கேட்க ஆரம்பிச்சாங்க. இதையே பெரிய அளவுல ஒரு பிராண்டாக மார்க்கெட் பண்ணலாமேன்னு,  நாங்க உருவாக்கினதுதான்

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

க்ரியா’. இப்போதைக்கு துணி துவைக்கும் தூள் மற்றும் பாத்திரம் தேய்க்கும் தூளுக்கு நல்ல வரவேற்பு இருக்கு' என்கிறார் ப்ரீத்தி.

'நாங்க உபயோகிக்கிற பூந்திக்கொட்டை முதல் எல்லா மூலப்பொருட்களுமே முழுக்க முழுக்க  இயற்கை விவசாயத்தில விளைஞ்சதையே வாங்குறோம். அதனால எங்களோட தயாரிப்புகள் 100 சதவிகிதம் ஆர்கானிக் புராடக்ட்ஸ்தான். எங்ககிட்ட ஒருமுறை  வாங்கினவங்க தொடர்ந்து பொருட்களை வாங்க ஆரம்பிச்சிருக்கிறது, எங்களுக்கான பெரிய வெற்றி!

இந்த வெற்றியைத் தொடர்ந்து, தலைமுடிக்குத் தடவும் எண்ணெய் முதல், ஃபேஸ்வாஷ், சோப், ஷாம்பூ எல்லாமே தயாரிக்கிறதுக்கான வேலைகள் நடந்துட்டிருக்கு. இதுவரை 500 சாம்பிள் தயாரிச்சு, சோதனைக்குக் கொடுத்ததில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு!' என்கிறார் சீனிவாசன்.

'கூடிய சீக்கிரம், தரை, டாய்லெட் சுத்தப்படுத்தும் திரவம்,  குழந்தைங்களுக்கான பாடி வாஷ், ஹேர் வாஷ் எல்லாம் தயாரிக்கும் திட்டம் இருக்கு. அதோடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத, முழுக்கப் பருத்தியினால் ஆன நாப்கின் தயாரிப்பும் தொடங்க இருக்கிறோம்!' என்கிறார் ப்ரீத்தி உற்சாகமாக.

சிவப்புத் தொழில்துறை

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், டிடர்ஜென்ட் தொழில்துறையை

ஆர்கானிக் அசத்தல் சோப் பவுடர், டிஷ் வாஷர்!

சிவப்புத் தொழில்துறை’ என அறிவித்துள்ளது.டிடர்ஜென்ட்டிலும் சோப்பிலும் நுரை வருவதற்காக, பாஸ்பேட் என்னும் ரசாயனம் கலக்கப்படுகிறது. பாஸ்பேட் என்பது செடியின் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் நுண்ணூட்டச் சத்து. சோப்பில் நுரை வருவதற்காக பாஸ்பேட் கலக்கும்போது, வீணாகும் கழிவு ஆறு, ஏரிகளில் கலந்து, தண்ணீரின் மேற்பரப்பில் பாசி வளர்ந்து படிந்து, தண்ணீர்ப் பரப்பை முழுவதுமாக மூடுவதற்குக் காரணமாகிவிடுகிறது.  பாசி படர்வதால், ஆக்ஸிஜன் வரத்து தடைபட்டு, அந்த ஏரியில் இருக்கும் மீன்கள் எல்லாம் மடிகின்றன.

டிடர்ஜென்ட் சோப், சோப்புத்தூள் உறைகள் மீது பாஸ்பேட் கலப்பது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனங்கள் வெளியிடுவதில்லை. வெளிநாடுகளில் பாஸ்பேட் கலப்பதற்கு வரைமுறை உள்ளது. நம் நாட்டில் அப்படி எதுவும் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism