Published:Updated:

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்ரேவதி, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்ரேவதி, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:

'தறிகெட்டு ஓடும் மனசையும் சாப்பாட்டையும் கண்ட் ரோல் பண்ணி, கொஞ்சம் எக்ஸர்சைஸும்  செய்தா, ஜம்முனு இருக்கலாம்' என்கிறார் 'சொல்வதெல்லாம் உண்மை’க்காரர் லட்சுமி ராமகிருஷ்ணன். நடிகை, இயக்குநர், மனநல ஆலோசகர் என பல துறைகளில் கலக்கிக் கொண்டிருக்கும் லட்சுமியைப் பார்க்கும் யாருக்கும், 'எப்படி இவ்ளோ எனெர்ஜெட்டிக்கா இருக்க முடியுது?' எனக் கேட்கத்  தோன்றும்.

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

'நான் வளர்ந்தது, படிச்சது பாலக்காட்டில். 10வது முடிச்சதுமே கல்யாணம். அப்புறம்தான் டிகிரி முடிச்சு, ஃபேஷன் டிசைனிங்ல மாஸ்டர்ஸ் பண்ணேன். அன்பான கணவர், மூணு பொண்ணுங்க. மூத்தவளுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. கல்யாணம் ஆன பொண்ணுக்கு அம்மான்னா,  இந்த ஊரு நம்ப மாட்டேங்குதுப்பா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கையான சூழல், சத்தான உணவு, நிறைய ஃப்ரெண்ட்ஸ், உறவுகள்னு எனக்குக் கிடைச்ச அந்த இனிமையான இளமைப் பருவம்தான் என்னை இன்னைக்கும் ஹெல்த்தியா வெச்சிருக்கு. இப்பல்லாம், எல்லார் வீட்டுலயும் முதலுதவிப் பெட்டி அவசியம் இருக்கணும்னு சொல்றாங்க. என் வீட்டுல அஞ்சறைப் பெட்டிதான் முதலுதவிப் பெட்டி. 20 வருஷத்துக்கு முன்னால, கடைசி மகள் சிசேரியன்ல பிறந்தப்ப, மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதுதான். இடையில் ஹாஸ்பிட்டல் போனதாவே ஞாபகம் இல்ல. டி.வியில குடும்ப கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், கொஞ்சம் பி.பி ஜாஸ்தியாயிடுச்சு. தவிர்க்க முடியாம, கொஞ்ச நாள் மாத்திரை எடுத்துக்கிட்டேன். அப்புறமா மனசுக்கு அதிக பிரஷர் கொடுக்காம, தெளிவா வைச்சுக்கிட்டேன். இப்ப நார்மலாயிடுச்சு. பலரோட பிரச்னைகளைக் காது கொடுத்து கேக்கிறதோட, அதற்கான நல்ல தீர்வையும் தர யோசிக்கிறோம் இல்லையா... அதான், எனக்கே பி.பி வந்திடுச்சு!'  சிரிக்கிறார்.

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

  சின்ன பிரச்னையை அப்படியே விடுங்க!

'நான் சின்னச்சின்னப் பிரச்னைக்கெல்லாம் நம்புறது கைவைத்தியம்தான். தொட்டதுக்கெல்லாம் மெடிசன் சாப்பிட்டுப் பழகிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைஞ்சுடும். நான் சாப்பாட்டுல அதிகம் கவனம் எடுத்துப்பேன், வீட்டுல யாருக்காவது காய்ச்சல் வந்தா, உடனே சாப்பாட்டைச் சரிபண்ணுவேன். நிறையக் கஞ்சி பண்ணித் தருவேன். சளி, இருமல் வந்தாக்கூட,  சீரகத் தண்ணீர், கஷாயம்தான் மருந்தா இருக்கும். நிறையத் தண்ணீர் குடிப்பேன்.

சின்னச் சின்ன பிரச்னைகள் நமக்கு வந்ததுன்னா, நம்ம உடம்புல நிறைய நோய் எதிர்ப்புச் சக்தி இருக்குன்னுதான் அர்த்தம். இரண்டு மூணு நாள் விட்டா, அதுவே சரியாகிடும். அப்பவும் சரியாகலைன்னா, டாக்டரைப் போய்ப் பார்க்கலாம். திடீர்னு வயித்து வலி வந்தா, எதனால் வந்தது, நாம என்ன சாப்பிட்டோம், நமக்கு எது ஒத்துக்காமப்போச்சுனு யோசிச்சு அந்த சாப்பாட்டை  அவாய்ட் பண்ணுவேன். உடனே மாத்திரை எடுத்துக்க மாட்டேன்.'

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

  நோ ஹோட்டல்!

'இப்பல்லாம் வீட்டுல ஒருத்தருக்கு கேன்சர் வருது... எப்பவும் ஹோட்டல்லே சாப்பிடறதும் முக்கியமான காரணம்னு சொல்றாங்க. நான் ஹோட்டல்ல பெரும்பாலும் சாப்பிடறதே இல்லை. அதேமாதிரி பிரேக்ஃபாஸ்ட் அவாய்ட் பண்ணவே மாட்டேன். நேரத்துக்கு சாப்பிடுறது, நிதானமா சாப்பிடுறது, வயிற்றைக் காலியா  வெச்சுக்காம இருக்கறது இந்த மூணும் சின்ன வயசில இருந்தே நான் ஃபாலோ பண்ற விஷயங்கள்!'

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

 ஆர்கானிக் வெஜிடபிள்ஸ்

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

'கேரட், பீன்ஸ், குடமிளகாய், அவரைக்காய்னு நிறைய வெஜிடபிள்ஸ் வேகவெச்சு சாப்பிடுவேன். அதேமாதிரி அரிசி சாப்பிடாதீங்கன்னு சொல்றதை நான் கேக்கிறதே இல்லை. அரிசி சாதம்தான் நமக்கான எனர்ஜி. ஈவ்னிங் நாலு மணிக்கு சுண்டல், பழங்கள் சாப்பிடுவேன். கொஞ்சமா குறிப்பிட்ட நேர இடைவெளியில் சாப்பிடறதால, வயிறும் ஹெவியா இருக்காது. வெயிட்டும் போடாது. அதேமாதிரி கறந்த பசும்பால்தான் குடும்பத்துல எல்லாருக்கும்.'

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

 லேட் நைட் சாப்பாட்டுக்கு 'நோ’

'ராத்திரி 8 மணிக்கெல்லாம் சாப்பாட்டுக் கடையை மூடிடுவேன். ஷூட்டிங் முடிஞ்சு லேட்டா வந்தா, ராத்திரி ஒரு மணிக்கு பசிக்கும். டேபிள் மேல இருக்கிறதை எடுத்துச் சாப்பிட மனசு சொல்லும். உடம்பை நினைச்சு கன்ட்ரோல் பண்ணிப்பேன்.   ராத்திரி சாப்பாட்டுல தேங்காய், எண்ணெய்னு அதிக கலோரி, கொழுப்பு உணவை சேர்த்துக்கவே மாட்டேன்.'

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

 அழகு

''கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைசிங் இந்த மூன்றையும் ரெகுலரா ஃபாலோ பண்றேன். வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, தயிர் இதெல்லாம் அப்ளை பண்ணாலே, முகம் பளிச்்னு இருக்கும். குளிக்கிறதுக்கு  முன்னாடி ஒரு சொட்டு நல்லெண்ணெயில் தண்ணீர் விட்டு முகத்துல பூசி்ப்பேன். இது ஒரு நல்ல மாய்ஸ்சரைசர். பயத்தமாவு, கஸ்தூரி மஞ்சளைவிட பெஸ்ட் ஸ்கிரப் வேற எதுவுமே இல்லை. இளநீரோடு வழுகல் தேங்காயை அரைச்சு முகத்துல பூசிட்டு வந்தா, ஸ்கின்ல எந்தப் பிரச்னையும் வராது.

வெளியில் போயிட்டு வந்தததுமே, ஒரு கப் வெந்நீர், ஒரு கப் குளிர்ந்த நீரை வெச்சிட்டு, மாத்தி மாத்தி முகத்துல அடிப்பேன். சூடான தண்ணீர் சருமத்துல படும்போது, சரும துளைகள் திறந்துக்கும். ஜில் தண்ணி பட்டு மூடிடும். இதனால, தூசு, அழுக்கு, கருமை, தேமல்னு எந்தப் பிரச்னையும் சருமத்தைப் பாதிக்காம இருக்கும்.

வாரம் ஒருநாள் எண்ணைய்க் குளியல். முடிக்கு சீயக்காய் தான் தேய்ச்சுப்பேன். கறி வேப்பிலை, பொன்னாங்கண்ணி, கரிசிலாங்கண்ணி, புதினா, கொத்தமல்லினு எல்லாக் கீரையையும் சாப்பிடறதால, அதுவே தலைமுடியை ஹெல்த்தியா வெச்சிருக்கு.'

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

 வாக்கிங் மஸ்ட்

''ஹெல்த்தியா இருக்க வாக்கிங் மட்டும் போதும். பொதுவாவே எதையுமே ரொம்ப யோசிச்சு கஷ்டப்பட மாட்டேன். கோபமோ, சந்தோஷமோ எல்லாத்தையும் உடனே வெளிக்காட்டிடுவேன். பிடிக்கலையா... பிடிக்கலைன்னு நேரடியா சொல்லிடுவேன். அதனால மனசளவிலேயும் ஃபுல் ஹெல்த்தியா இருக்கிறேன்னு நினைக்கிறேன்''  ஆரோக்கியம்  ததும்பி வழிகிறது லட்சுமியின் ஒவ்வொரு  வார்த்தையிலும்!          

டிப்ஸ்:

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

  வயிறு தொடர்பான பிரச்னை வந்தால், வெறும் கடாயில் இரண்டு ஸ்பூன் சீரகத்தை வறுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைச்சு பாதியாகக் குறைஞ்சதும் இறக்கி, குடிக்கலாம். உடனடியா வயிற்றுப் பிரச்னை தீரும்.

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

  வயிற்றுச் சூட்டினால் ஏற்படற வயிற்றுவலிக்கு, மோரை நல்லாக் கரைச்சு, வெந்தயத்தைப் போட்டு ஊறினதும் அப்படியே குடிக்கலாம்.

"மனசு, சாப்பாடு கன்ரோல் பண்ணுங்க சந்தோஷமா இருங்க”

  சளி, இருமல் வந்தால், பாலில் மஞ்சள்தூள் போட்டு மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து மிதமான சூட்டில் அருந்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism