Published:Updated:

சொர்க்கம் என்பது... சுத்தம் உள்ள வீடுதான்!,

டாக்டர் குருநாதன், குழந்தை நல மருத்துவர்படங்கள்: பா.அருண்

சொர்க்கம் என்பது... சுத்தம் உள்ள வீடுதான்!,

டாக்டர் குருநாதன், குழந்தை நல மருத்துவர்படங்கள்: பா.அருண்

Published:Updated:

வீட்டின் சுகாதாரம், குடும்ப ஆரோக்கியத்தின் கண்ணாடி. தினமும் குளிப்பது, இரண்டு வேளை பல் தேய்ப்பது இதுவே சுகாதாரம் என நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இவை தவிர, வீட்டில், அலுவலகத்தில் நம் கவனத்துக்கு வராமல் ஏராளமான கிருமிகள் நம்மைப் பின்தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள, கொஞ்சம் மெனக்கெட்டாக வேண்டும். இந்தியாவில் மோசமான சுகாதாரப் பழக்கங்களின் விளைவாக, செலவழியும் தொகை மட்டுமே ஆண்டுக்கு ரூ.17,000 கோடி என்பதை உணர்ந்தாலே, மெனக்கெட வேண்டியதன் அவசியம் புரியும்.

சொர்க்கம் என்பது... சுத்தம் உள்ள வீடுதான்!,

அன்றாடப் பொருட்களில் அபாயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'டிவி, ஃப்ரிட்ஜில் படர்ந்திருக்கும் தூசியை நீக்கத் தெரிந்த நமக்கு, அதன் ரிமோட்களில் உள்ள தூசி, கண்ணுக்குத் தெரிவது இல்லை. சாப்பிட்ட கையோடும் தலையில் எண்ணெய் தடவின கையோடும் பயன்படுத்துபவர்கள் பலர். வீட்டில், தவழும் குழந்தை இருந்து, அது ரிமோட்டைத் தன் வாயில் வைத்தால் வயிற்றுப்போக்கு உடனே ஏற்படுவது நிச்சயம்.

சுவரில் ஒட்டடை அடிக்கும்போது ஃபேன், அலமாரிகள், புத்தக ஷெல்ஃப்களை நாம் கவனிக்காமல் விட்டுவிடுவோம். இதில்  பரவியிருக்கும் தூசியால் தும்மல், இருமல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். தூசியின் அடர்த்தியைப் பொறுத்து ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பையும் அழைத்து வந்துவிடும்.

சொர்க்கம் என்பது... சுத்தம் உள்ள வீடுதான்!,

லிப்ஸ்டிக், மஸ்காரா, காஜல், ஐப்ரோ பென்சில் என ஒரே மேக்கப் சாதனங்களை வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தினால், ஒருவருக்கு இருக்கும் சருமப் பிரச்னைகளை மற்றவர்கள் இலவசமாகப் பெற வழிவகுத்துவிடும்.

கிருமிகளின் சொந்த வீடு டாய்லெட்!

கழிப்பறையை வைத்தே ஒரு  வீட்டின் சுகாதாரத்தைத் தெரிந்துகொள்ளலாம். இன்று பெரும்பாலான வீடுகளில் வெஸ்டர்ன் கழிப்பறைகளே பயன்படுத்தப்படுகின்றன. மூட்டு வலிக்காரர்களுக்கு இது வசதியாக இருந்தாலும், இந்தியன் டைப் டாய்லெட்களைவிட இதில் கிருமித் தொற்று அதிகம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காற்றில் பரவக்கூடிய சி.டிஃபிஷில், ஈ-கோலை, ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஸ்டாஃபிலோகாக்கஸ், ஷிஜெல்லா (C.difficile, E-coli, Streptococcus, Staphylococcus, Shigella) போன்ற கிருமிகள், ஒருவர் டாய்லெட்டை பயன்படுத்திச் சென்ற அடுத்த ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகும் அங்கே பரவியிருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தக் கிருமிகள், ஃப்ளஷ் செய்தவுடன் 10 அடி வரை உயரத்தில் பரப்பப்பட்டு காற்றில் கலக்கும். கழிப்பறையில் பயன்படுத்தப்படும் சோப், ஷாம்பூ, பிரஷ், பக்கெட், மக், கைப்பிடி, குழாய் என அனைத்திலும் இந்தக் கிருமிகள் பரவியிருக்கும். வயிற்றுப்போக்கு, வாந்திக்கான காரணத்தை வீட்டின் டாய்லெட்டில் தேடினால் போதுமானது. கிருமி நாசினியால் டாய்லெட்டின் தரை, சுவர், வாஷ்பேசின்களை அடிக்கடி சுத்தம் செய்வது  ஒன்றே கிருமிகளை வெளியேற்ற ஒரே வழி.
 

டூத் பிரஷுக்கு தனி இடம்

குளியலறையில் வைக்கப்பட்டுள்ள டூத் பிரஷில் மட்டும் சராசரியாக 10 மில்லியன் கிருமிகள் குடும்பம் நடத்துவதாகச் சொல்கிறது மான்செஸ்டர் பல்கலைக்கழகம். நமது வாயில் உள்ள பாக்டீரியாக்களின் இனங்கள் மட்டுமே 200 வரை இருக்கும். அதை சுத்தம் செய்த பிறகு, பிரஷை ஸ்டாண்டில் வைத்துவிடுகிறோம். வாஷ்பேசின், கழிவறையின் கிருமிகளை பிரஷ் காந்தம் போல இழுத்துத் தன்வசம் வைத்துக்கொள்கிறது.  சிலர் பிரஷை ஈரத்துடன் பிளாஸ்டிக் மூடியைக் கொண்டு மூடிவைப்பதால், பூஞ்சை படர்வதற்கும் வாய்ப்பு உண்டு. ஒரு பிரஷ் ஸ்டாண்டில் குடும்பத்தினர் அனைவரின் பிரஷ்களும் வைக்கப்படுவதால் ஒரு பிரஷ்ஷிலிருந்து மற்றவற்றுக்கும் கிருமிகள் பரவும். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அடுத்தவருக்கு, அந்த நோய் பரவுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

 கிச்சன் 'காலன்’

சொர்க்கம் என்பது... சுத்தம் உள்ள வீடுதான்!,

கழிப்பறைக்கு அடுத்தபடியாக கிருமிகள் அதிகம் வசிப்பது கிச்சனில்தான். சமைக்காத இறைச்சியிலிருந்து வரும் ஈ.கோலை  மற்றும் சால்மோனெல்லா (Salmonella) கிருமிகள், கழுவும்போது ஸிங்க்கிலோ, பாத்திரங்களிலோ, ஸ்கிரப்பிலோ ஒட்டிக்கொண்டிருக்கும். எப்போதும் ஈரமாகவே இருப்பதால் இந்தக் கிருமிகள் வாழ்வதற்கு ஏற்ற இடம் ஸிங்க்். இங்கிருந்து பாத்திரங்களுக்கு இவை எளிதாக இடம்பெயர்ந்துவிடுகின்றன.

இறைச்சி வெட்டும் கத்தியை வைத்து காய்கறி வெட்டுவது, பழங்களை வெட்டுவது, கத்தியைக் கழுவாமலே தொடர்ந்து உபயோகிப்பது எல்லாமே அபாயம்தான்.  

குப்பைத் தொட்டி  கிருமிகளின் பெட்டி!

மக்கும் குப்பை, மக்காத குப்பை என அரசு பிரித்து வைக்கச் சொன்னாலும், நம் வீட்டில் அனைத்தும் ஒன்றாகவே சேகரிக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன்களைச் சுத்தம் செய்து குப்பைத் தொட்டியில் போடுகிறோம். அடுத்த நாள்வரை அவை வீட்டிலே இருப்பதால் கரப்பான் பூச்சி, ஈக்களில் ஆரம்பித்து பூரான், எலி வரைக்கும் கிச்சனுக்குள் எளிதாக "என்டர்’ ஆகிவிடுகிறது. நாப்கின்கள், டயப்பர்கள், அழுகிய பொருட்கள் என எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் மணிக்கணக்காக சேமித்துவைத்து, கிருமிகளை வீட்டுக்குள் அழைத்துக்கொண்டே இருக்கிறோம். எலிக் காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகள் எல்லாமே இங்கிருந்துதான் ஆரம்பம்.

பையிலும் கவனம்!

வெளியே கொண்டுசெல்லும் பைகள் வழியாக கிருமிகளை எளிதாக வீட்டுக்குள் எடுத்து வந்துவிடுகிறோம். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு பெஞ்சுகளில் வைக்கப்படும் பை, கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் நம் படுக்கையிலும், டைனிங் டேபிளிலும் பிரதான இடத்தைப் பிடித்துவிடும். வெளியில் இருந்து திரும்பியதும் உடனே குளித்துவிட்டு வீட்டுக்குள் வருபவர்கள்கூட, இந்தப் பை அபாயத்தைப் புரிந்துகொள்வது இல்லை. கைப்பைகளைத் தினமும் கழுவ முடியாதுதான். ஆனால் கிருமிநாசினி கொண்டு துடைத்துப் பயன்படுத்தலாம்.

சொர்க்கம் என்பது... சுத்தம் உள்ள வீடுதான்!,

துவைத்தாலும் போகாது!

உள்ளாடையில் மட்டுமே 100 மில்லியன் கிருமிகள் உள்ளன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் நோய்களை பரப்ப கூடிய ஹெபடைடிஸ் ஏ (Hepatitis A), நோரோவைரஸ் (Norovirus), ரோட்டா வைரஸ் (Rotavirus), சால்மோனெல்லா (Salmonella), மற்றும் ஈ-கோலை (E. coli) போன்றவை மிகவும்ஆபத்தானவை. வாஷிங் மெஷினில் உடைகள், உள்ளாடைகள், தரையில் போடும் துணி மேட், கிச்சன் டவல், பாத் ரூம் டவல் என அனைத்தும் கலந்து துவைப்பதால், நுண்கிருமிகள் அனைத்திலும் பரவ வாய்ப்பு இருக்கிறது.

உதாரணத்துக்கு, கிச்சன் கறைகள் உடைகளுக்கு பரவும், பாத் ரூம் டவல் கிருமிகள் உள்ளாடைகளுக்குப் பரவும். இவை ஒரு மணி நேரம் வாஷிங் மெஷினால் துவைக்கப்பட்டாலும் கிருமிகள் போகாது. 150 டிகிரிக்கு மேலுள்ள வெந்நீரின் சூட்டினால் மட்டுமே இந்தக் கிருமிகளை நீக்க முடியும்.

சொர்க்கம் என்பது... சுத்தம் உள்ள வீடுதான்!,

சுத்தம் சோறு போடும்!

 டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தினமும் சுத்தம் செய்வது அவசியம்.  ரிமோட், கைப்பிடிகளில் கையுறை போட்டுவைத்தால், சுத்தம் செய்வது எளிது.

 வாரம் ஒருமுறை ஃபேன், புத்தக அலமாரி போன்ற தூசி பரவும் பொருட்களைத் துடைத்து சுத்தப்படுத்துங்கள்.

 நீங்கள் பயன்படுத்தும் சீப்பு, அழகு சாதனப் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

 தினமும் இரண்டு வேளை கிருமிநாசினியைக் கொண்டு, கழிப்பறையை சுத்தப்படுத்த வேண்டும். வெஸ்டர்ன் கழிப்பறையாக இருந்தால், பேசினை மூடிய பிறகே ஃப்ளஷ் செய்வது அவசியம். பயன்படுத்திய பின்னரும் மூடி வைப்பது நல்லது.

 கழிப்பறையிலோ அல்லது வாஷ்பேசின் மேலோ பல் தேய்க்கும் பிரஷ்களை வைக்காதீர்கள். தனித்தனியாக வைக்கவும்.

 குளியலறையில் இருக்கும் வாளி, மக், ஸ்டாண்டு என அனைத்திலும் சுத்தம் தேவை.

 ஒவ்வொரு வேலைக்கு இடையிலும் கைகளைக் கழுவ நேரம் இருக்காது. வேலைகளைப் பிரித்துச் செய்யலாம். அன்றைய தேவைக்கான காய்கறிகளை மொத்தமாக நறுக்கிவைத்துக்கொள்வது, பாத்திரங்களை ஒரே நேரத்தில் தேய்த்துக் கவிழ்த்துவைப்பது, சமையல் முடித்ததும் மேடையை சுத்தமாகத் துடைத்துவிடுவது என சமையலறையை சுகாதாரமானதாக மாற்றிக்கொண்டால், கிச்சனுக்குள் கிருமிகள் நுழையாது.  

 தினமும் குப்பை கொட்டுவது எவ்வளவு  முக்கியமோ, குப்பைத் தொட்டியை ஆன்டிசெப்டிக் வைத்து சுத்தம் செய்வதும் அதே அளவுக்கு முக்கியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism