காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் இரைப்பை கல்லீரல் சிகிச்சை சிறப்பு மையம் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள ரமடா பிளாச ஓட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கூடுதல் பதிவாளர் முனைவர் மைதிலி,எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் டாக்டர் வி.பி.சந்திரசேகர், இரைப்பை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் இரைப்பை கல்லீரல் சிகிச்சை சிறப்பு மையத்தினை அதன் தலைமை மருத்துவரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ் தொடங்கிவைத்தார்

பின்னர், இதுகுறித்து பேசிய டாக்டர் ஜாய் வர்கீஸ், "உணவு பழக்க வழக்கம் மாற்றத்தின் காரணமாக இரைப்பை கல்லீரலில் கொழுப்பு சத்து அதிகமாகி கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.அது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் பரவி இதயத்தை பாதிக்கும் உலக அளவில் இப்படிப்பட்ட பாதிப்பு இளஞ்சர்களை பாதித்து வருவதாகவும் எனவே உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் என்றும், எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் இதற்கான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை 200 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் இயங்கி வருகிறது. நவீன மருத்துவ சாதனங்கள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. உலகில் கொரானா நோய் தாக்குதலுக்குப் பின் உணவு பழக்க வழக்கம் மாற்றம் காரணமாகவும், அதிக கொழுப்பு சத்துள்ள உணவு காரணமாக இரைப்பை உள்ளிட்ட வயிற்று பகுதியில், கல்லீரலில் கொழுப்பு சத்து அதிகமாகி கல்லீரலை பாதிக்கும். அதோடு கொழுப்பு சத்து இதயத்திற்கு செல்லும் குழாய் மூலம் இதயத்தை தாக்கும். தற்போது இது உலக அளவில் இளைஞர்களை அதிக அளவில் பாதித்து வருவதாக அறியப்பட்டுள்ளது. கல்லீரல் பாதிப்பை தொடக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் கல்லீரல் இயக்கம் தடைபடுவதை தவிர்க்க முடியும். இல்லையென்றால் கல்லீரல்உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டிவரும். எனவே, இரைப்பை கல்லீரல் பாதிப்பை தடுக்க உணவுமுறையில் கட்டுப்பாடு அவசியம்" என்று கூறினார்.