Published:Updated:

இசபெல்ஸ் மருத்துவமனையில் அலட்சியத்தால் மரணமா? சுமந்த் சி.ராமனின் பதிவும் நிர்வாகத்தின் பதிலும்!

மரணம்
News
மரணம்

``இந்தச் சம்பவம் செயின்ட் இசபெல்ஸ் மருத்துவமனையில் நடந்தேறியது. இத்தகைய கொடுமையான கதைகள், பல மருத்துவமனைகளில் நடந்தேறுகின்றன. ஆனால், மக்களின் கவனத்துக்குக் கொண்டு சேர்க்கப்படுவதில்லை..."

Published:Updated:

இசபெல்ஸ் மருத்துவமனையில் அலட்சியத்தால் மரணமா? சுமந்த் சி.ராமனின் பதிவும் நிர்வாகத்தின் பதிலும்!

``இந்தச் சம்பவம் செயின்ட் இசபெல்ஸ் மருத்துவமனையில் நடந்தேறியது. இத்தகைய கொடுமையான கதைகள், பல மருத்துவமனைகளில் நடந்தேறுகின்றன. ஆனால், மக்களின் கவனத்துக்குக் கொண்டு சேர்க்கப்படுவதில்லை..."

மரணம்
News
மரணம்

சென்னையில் உள்ள செயின்ட் இசபெல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாமல் அலட்சியம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக, சுமந்த் சி ராமன் செய்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மழுப்பலான பதிலை அளித்துள்ளது.

அரசியல் விமர்சகராகவும் மருத்துவராகவும் அறியப்படுவர் சுமந்த் சி ராமன். இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``கடந்த வாரம் மருத்துவ அலட்சியம் காரணமாக என் ஊழியர் ஒருவரை இழந்தேன். மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு இஸ்கெமிக் இதய நோய் இருப்பது தெரிந்திருந்தபோதும், பத்து நாள்களுக்கு முன்பே அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்திருந்ததை அறிந்திருந்தாலும், அந்த வலி இதயம் சார்ந்தது என்றும் அதற்குக் காரணம் ஆஞ்சியோ பிளாஸ்டியாக இருக்கக்கூடும் என்று யூகிக்கப்பட்டது" என்று பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்தச் சம்பவம் செயின்ட் இசபெல்ஸ் மருத்துவமனையில் நடந்தேறியது. இத்தகைய கொடுமையான கதைகள், பல மருத்துவமனைகளில் நடந்தேறுகின்றன. ஆனால், மக்களின் கவனத்துக்குக் கொண்டு சேர்க்கப்படுவதில்லை" என்றும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சுமந்த் சி ராமனை தொடர்புகொண்டு, இதுகுறித்து பேசினோம்.

அவர், ``இந்தச் சம்பவம் கடந்த திங்கள்கிழமை (27.3.2023) நடந்தது. இது போன்ற மருத்துவ அலட்சியம் நடக்கும்பட்சத்தில் நாம் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் செல்லலாம், இல்லையேல் வழக்கமான விசாரணைகள் நடைபெறும் நீதிமன்றத்துக்குச் (regular court) செல்லலாம். இவை தவிர, வேறு எந்த வழியும் இல்லை. மருத்துவ அலட்சியம் குறித்து மாநில மருத்துவ கவுன்சிலுக்கு எழுதலாம். ஆனால், அது பெரிய அளவில் பலனளிக்காது.

முதலில் தனியார் மருத்துவமனைகளில் நடந்தேறும் அலட்சியங்கள் பற்றி மக்களுக்கு வெளியே தெரிவதில்லை. இந்தச் சம்பவத்தின்போது, அந்த மருத்துவமனையில் நான் இருந்ததால் எனக்குத் தெரிந்தது. அந்த மருத்துவமனை நிர்வாகம் இன்றுவரை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அழைத்துப் பேசவில்லை. நேற்று முன்தினம் கூட, மரணமடைந்த அந்த நபரின் மகன் மருத்துவமனைக்குச் சென்று பேச முயன்றுள்ளார். நிர்வாகம் அவரை சந்திக்க மறுத்துள்ளது. அதுதான் வருத்தமளிக்கிறது.

அவருக்கு இதயநோய் இருப்பது தெரிந்திருந்த போதும் பத்து நாள்களுக்கு முன்பே அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்திருந்ததை அறிந்திருந்தாலும், 5 மணிநேரம் எந்தச் சிகிச்சையும் கொடுக்கப்படவில்லை. அவருக்கு சுயநினைவின்றிப் போகவே, குடும்பத்தினர் மருத்துவ நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னரே, அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. அந்த 4 முதல் 5 மணிநேர அலட்சியம்தான் இதற்கு காரணம்" என்று கூறினார்.

சுமந்த் சி ராமன்
சுமந்த் சி ராமன்

இதையடுத்து, செயின்ட் இசபெல்ஸ் மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்டு, அவருக்கு சிகிச்சை அளித்த இதயநோய் மருத்துவர் சம்சுதீனிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``நாங்கள் சிகிச்சை எல்லாம் சரியாகத்தான் கொடுத்திருக் கிறோம். அவருக்கு வயது 77. மட்டுமல்லாமல், நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயத்தின் பம்பிங் செயல்பாடுகள் குறைந்திருந்தன. இப்படி மிகவும் ஆபத்தான கட்டத்தில் தான் சிகிச்சை அளிக்கத் தொடங்கினோம். அதுமட்டுமல்லாமல் சிறுநீர்ப்பையில் கல் உருவாகி தொற்று ஏற்பட்டிருந்தது. இதுவே மரணத்துக்கு காரணம்.

சுமந்த் அவர்கள் 4 - 5 மணிநேரத்துக்குப் பிறகுதான் சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிறார். அது தவறு. எங்கள் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நானும் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தேன். சுமந்த் அவர்களின் இந்த ட்வீட் எனக்கு வருத்தமளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபரின் மகனிடம் நான் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவரும் சிகிச்சை விஷயத்தில் எந்தக் குறையும் இல்லை என்று தெரிவித்தார்" என்றார்.

இது தொடர்பாக உயிரிழந்த நபரின் மகனிடம் பேச முயன்றோம். அவர் இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் பேச விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

தனியார் மருத்துவமனை குறித்த சுமந்த் சி ராமனின் பதிவு மருத்துவ வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.