லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வியர்வை... விடுபட சில வழிகள்!

வியர்வை
பிரீமியம் ஸ்டோரி
News
வியர்வை

சிலருக்கு உள்ளங்கைகளிலும் பாதங்களிலும் அதிகம் வியர்க்கும்.

வெயில் வரும் பின்னே... வியர்வை வரும் முன்னே என்று வெயில் முழுமையாகத் தன் உக்கிரத்தைக் காட்டத் தொடங்கும் முன்பே வியர்வை பிரச்னை ஆரம்பித்துவிட்டது. வியர்வையோடு நின்றால் பரவாயில்லை, அது கூடவே அழைத்துவரும் வாடையில்தான் பிரச்னையே. வியர்வை வாடையைக்கட்டுப்படுத்தும் வழிகளைச் சொல்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

வியர்வையில் சிலவகைப் புரதங்கள் இருக்கும். அவற்றுடன் பாக்டீரியா சேர்ந்து வினைபுரியும்போது அந்தப் புரதங்கள் அமிலங்களாக மாறுகின்றன. அவைதான் வியர்வை நாற்றத்துக்குக் காரணம்.

வியர்வை... விடுபட சில வழிகள்!

பூப்பெய்தும் பருவம், பருமன், அதிக காரமான. மசாலா சேர்த்த உணவுப்பழக்கம், நீரிழிவு போன்ற சில உடல்நலக் குறைபாடுகள் போன்றவை வியர்வையைத் தூண்டும் காரணிகள்.

வியர்வைக்கென பிரத்யேக மணமோ, நிறமோ கிடையாது. பாக்டீரியா மற்றும் அதன் தாக்கத்தால் வெளியேறும் அமிலங்களின் காரணமாகவே வியர்வைக்கென பிரத்யேக வாடை உருவாகிறது.

எக்ரைன், அப்போக்ரைன் என இரண்டு வகையான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. எக்ரைன் சுரப்பிகள் உடல் முழுவதும் இருக்கும். குறிப்பாக உள்ளங்கைகள் மற்றும் பாதங்களில் அதிகமிருக்கும்.

எப்போக்ரைன் சுரப்பிகள் அக்குள், அந்தரங்க உறுப்புகள், காதுகளின் பின்புறம் போன்ற பகுதிகளில் அதிகமிருக்கும். மன அழுத்தம், பதற்றம், பூப்பெய்தும் காலம் போன்றவை அப்போக்ரைன் சுரப்பிகளைத் தூண்டுபவை.

அக்குள் பகுதிகளில் வியர்வைச் சுரப்பிகள் அதிக மிருப்பதால் அங்கு வியர்வை வாடை அதிகமிருக்கிறது. ட்ரைக்ளோசன் உள்ள ஆன்டி பாக்டீரியல் சோப் உபயோகித்துக் குளிப்பது இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகும். அக்குள் பகுதியில் ரோமங்கள் நீக்கப்பட வேண்டும்.

வியர்வை
வியர்வை

ஆன்டி பெர்ஸ்பிரன்ட் மற்றும் டியோடரன்ட் உபயோகிக்கலாம். டியோடரன்ட் என்பது வாடையை நீக்கும். ஆன்டி பெர்ஸ்பிரன்ட் என்பது அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தும்.

சிலருக்கு உள்ளங்கைகளிலும் பாதங்களிலும் அதிகம் வியர்க்கும். இந்தப் பிரச்னைக்கு ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்று பெயர். தொடர்ச்சியாக ஷூ அணிவது, ஒரே சாக்ஸைத் தொடர்ந்து அணிவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். லெதர் காலணிகளைத் தவிர்த்து, கால்களில் காற்றோட்டம் உள்ள மாதிரியான காலணிகளை அணிய வேண்டும். தினமும் இருமுறை கால்களை நன்கு கழுவ வேண்டும். பாதங்களில் உள்ள இறந்த செல்களை பியூமிஸ் ஸ்டோனால் தேய்த்து அகற்ற வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் தினம் இருவேளை கள் குளிக்க வேண்டும். காற்றோட்டத்தை அனுமதிக்கும்படியான காட்டன் உடைகளை அணிய வேண்டும். அலுமினியம் குளோரைடு உள்ள ஆன்டி பெர்ஸ் பிரன்ட் உபயோகிக்கலாம்.

காரமான, மசாலா நிறைந்த உணவு களைத் தவிர்க்க வேண்டும். பூண்டு, சிவப்புநிற இறைச்சி போன்றவை வியர்வை வாடையை அதிகப்படுத்தலாம்.

இவற்றையெல்லாம் தாண்டி அதீத வியர்வை உள்ளவர்களுக்கு போட்டாக்ஸ் சிகிச்சை பலனளிக்கும். வியர்வையைக் கட்டுப்படுத்தச் சொல்லி மூளைக்கு சிக்னல் கொடுக்கும் இந்தச் சிகிச்சை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குப் பலனைத் தக்கவைக்கும். இதைச் செய்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை அவசியம். தைராய்டு, மெனோபாஸ். கல்லீரல், கிட்னி கோளாறுகள், நீரிழிவு போன்றவற்றின் காரண மாக வியர்க்கிறதா என்பதை மருத்துவரால்தான் கணிக்க முடியும்.

இரவில் அதிகமாக வியர்த்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.