Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோம்க்கு... எர்கோனோமிக் சேர், வொர்க்கிங் டேபிள், புளூ கட் லென்ஸ், சப்போர்ட் பில்லோ!

வொர்க் ஃப்ரம் ஹோம்
News
வொர்க் ஃப்ரம் ஹோம்

பெரியவர்கள் லேப்டாப், கணினி என்று பணியில் இணைந்திருக்க, இப்போது மாணவர்களும் ஆன்லைன் வகுப்பில் இணைய ஆரம்பித்திருக்கிறார்கள்.

Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோம்க்கு... எர்கோனோமிக் சேர், வொர்க்கிங் டேபிள், புளூ கட் லென்ஸ், சப்போர்ட் பில்லோ!

பெரியவர்கள் லேப்டாப், கணினி என்று பணியில் இணைந்திருக்க, இப்போது மாணவர்களும் ஆன்லைன் வகுப்பில் இணைய ஆரம்பித்திருக்கிறார்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம்
News
வொர்க் ஃப்ரம் ஹோம்

கொரோனா லாக்டௌனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் காலத்தில், லேப்டாப், கம்ப்யூட்டர் என்று நாள் முழுக்க கட்டுண்டு கிடக்கின்றனர். ஆனால் சேர், டேபிள் என்று அதை சரியான பொசிஷனில் வைத்துப் பயன்படுத்தாமல், கட்டிலில், தரையில் என்று மணிக்கணக்கில் லேப்டாப்புடன் மனம்போகும் பொசிஷன்களில் அமர்ந்துவிடுகிறார்கள். இதனால் பலருக்கும் கழுத்துவலி, முதுகுவலி ஏற்படுகிறது.

வொர்க் ஃப்ரம் ஹோமில், முறையற்று அமரும் இந்தப் பழக்கம் ஏற்படுத்தும் உடல் உபாதைகளால், வொர்க் ஸ்டேஷனுக்குத் தேவைப்படும் நாற்காலி மற்றும் சேர் வாங்க முன்வருகிறார்கள் மக்கள். ஆனால், அதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பற்றி அவர்கள் அறிவதில்லை. அதுகுறித்து வழிகாட்டுகிறார், பிஸியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் ராகவன். அவர் கூறியதிலிருந்து...

வொர்க் ஃப்ரம் ஹோம் செட்-அப்
வொர்க் ஃப்ரம் ஹோம் செட்-அப்

* ''வீட்டில் இருந்து வேலைபார்ப்பவர்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய, முதுகுப் பகுதியில் வளைவுடன்கூடிய எர்கோனோமிக் சேர் (Ergonomic chair) வாங்க நினைக்கின்றனர். இவை, அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் நாற்காலிகள். காரணம், வெவ்வேறு உயரம் கொண்டவர்கள் அதற்கேற்ப இதை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என்பது. இதையே நாம் வீட்டுப் பயன்பாட்டுக்காக வாங்கும்போது, நம் உயரத்துக்கு ஏற்ற வடிவமைப்பில் வாங்கிக்கொள்ளலாம். வீட்டுக்கு என்று சேர் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம், சேர் ஹை ரீச்சாக (சாய்ந்துகொள்ளும் வசதி உடையதாக) இருக்க வேண்டும். அப்போதுதான் முதுகு சாயும்போது வசதியாக இருக்கும். மேலும், நீண்ட நேரம் வேலைபார்க்கும்போது வலி ஏற்படுத்தாமல் இருக்கும்.

* அடுத்ததாக, வீட்டில் சிஸ்டம் வொர்க்கிங் டேபிள் இல்லாதவர்கள் தாமதிக்காமல் வாங்கிக்கொள்ளவும். டெஸ்க்டாப்பை மட்டுமல்ல, லேப்டாப்பையும் டேபிளில் வைத்து வேலைபார்ப்பதுதான் நல்லது. அப்போதுதான் முதுகுவலி உள்ளிட்ட உடல் உபாதைகளைத் தவிர்க்க முடியும்.

* எக்ஸ்டர்னல் லேப்டாப்பை, சிஸ்டம் டேபிளில் கீபோர்டு வைக்கும் இடத்தில் வைத்துப் பயன்படுத்தவும்.

* வேலைபார்க்கும்போது கால்கலைத் தொங்கப்போடாமல், ஒரு சின்ன ஸ்டூல் மேல் வைத்துக்கொண்டால் காலில் வலி ஏற்படாது.

* பேக் படி பில்லோ (back buddy pillow) வாங்கிக்கொண்டு அதை சேரில் வைத்துக்கொண்டால், முதுகுத் தண்டிற்கு சப்போர்ட்டாக இருக்கும். மேலும், நெக் பேட் (neck pad) மாதிரியானவற்றைப் பயன்படுத்துவது கழுத்திற்கு அதிக சிரமம் ஏற்படுத்தாமல் இருக்கும்'' என்றார் ஶ்ரீநாத் ராகவன்.

பல கார்ப்பரேட் நிறுவனங்கள், வொர்க் ஃப்ரம் ஹோமிலிருக்கும் தங்கள் ஊழியர்களுக்குத் தேவையான, முதுகுத்தண்டுக்கு நல்ல சப்போர்ட் கொடுக்கக்கூடிய நாற்காலிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

முதுகுவலி...
முதுகுவலி...

ஃப்ரெஷ்வொர்க்ஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு வீட்டிலே வொர்க் ஸ்டேஷன் ஏற்படுத்திக்கொள்ள 250 டாலர் வழங்குகின்றன. கோத்ரேஜ் இன்டீரியோ உள்ளிட்ட நிறுவனங்கள், ஹோம் ஆபீஸ் அமைப்பதற்கான ஃபர்னிச்சர் விற்பனையில் கவனம்செலுத்த ஆரம்பித்துள்ளன.

வொர்க் ஃப்ரம் ஹோம் கலாசாரம், வீட்டுக் கணினியில் வசதியாக வேலைபார்ப்பதற்குக் கைகொடுக்கும் உபகரணங்கள் விற்பனையை முடுக்கியுள்ளது. அதில் முக்கியமானது, பாதுகாப்புக் கண்ணாடிகள் விற்பனை. பெரியவர்கள் லேப்டாப், கணினி என்று பணியில் இணைந்திருக்க, இப்போது மாணவர்களும் ஆன்லைன் வகுப்பில் இணைய ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி அதிக நேரம் டிஜிட்டல் ஒளிர்திரைகளைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண்களுக்கு நேரக்கூடிய பாதிப்பைத் தவிர்க்க, புளூ கட் லென்ஸை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள். இது, ஒளிர்திரைகளின் ஒளி ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து கண்களுக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடியது.

பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் ராகவன்
பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் ராகவன்

டைட்டன், ஸ்பெக்ஸ்மேக்கர்ஸ் நிறுவனங்கள் லாக்டௌனுக்குப் பின் தங்களின் புளூ கட் லென்ஸ் விற்பனை 25%-30% அதிகமாகி இருப்பதாகக் கூறியுள்ளன. மேலும், மக்களின் செல்போன் பயன்பாட்டு நேரமும் அதிகமாகியுள்ளதால், பவர் இல்லாத பாதுகாப்புக் கண்ணடிகளின் விற்பனை 60% ஆக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார் ஸ்பெக்ஸ்மேக்கர்ஸின் தலைமை நிறுவனர், பிரதிக் ஷா. டைட்டன் நிறுவனமும், தங்களிடம் முன்பு 40%-க்கும் குறைவாக இருந்த புளூ லென்ஸ் விற்பனை, இப்போது 55%-க்கும் மேல் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்களில்தான் இந்தப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அதிகம் வாங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, வொர்க்கிங் போஸ்ச்சரில் கழுத்து மற்றும் முதுகுக்கு உதவிசெய்யக்கூடிய சப்போர்ட் பில்லோ விற்பனையும் அதிகரித்துள்ளது. கணினியில் வேலைபார்ப்பவர்கள், வெளிச்சம் குறைந்த இடம் மற்றும் திரை க்ளேர் ஆகும் திசையைத் தவிர்த்து, வெளிச்சமான இடத்தைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்துகிறார்கள் கண் மருத்துவர்கள். நீண்ட நேர ஒளிஉமிழ்வால் கண்களில் எரிச்சல், சோர்வு உண்டாகும்போது ஐபேடு கொண்டு கண்களை மூடி சில நிமிடங்கள் ஓய்வு கொடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

வீட்டிலிருந்தே வேலைபார்ப்பவர்கள், உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள உடல் பிரச்னைகளைத் தவிர்த்து பாதுகாப்பாக வேலைசெய்ய, 'கம்ஃபர்ட் வொர்க்கிங்'க்கு கைகொடுக்கும் உபகரணங்களைத் தாமதிக்காமல் வாங்குவது நல்லது.