Published:Updated:

நேர நிர்வாகம் டென்ஷனைத் தவிர்க்கும்!

நேர நிர்வாகம் டென்ஷனைத் தவிர்க்கும்!
பிரீமியம் ஸ்டோரி
நேர நிர்வாகம் டென்ஷனைத் தவிர்க்கும்!

மனசே மனசே...

நேர நிர்வாகம் டென்ஷனைத் தவிர்க்கும்!

மனசே மனசே...

Published:Updated:
நேர நிர்வாகம் டென்ஷனைத் தவிர்க்கும்!
பிரீமியம் ஸ்டோரி
நேர நிர்வாகம் டென்ஷனைத் தவிர்க்கும்!

கு.ஞானசம்பந்தன்... மேடைப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நடிகர் எனப் பல முகங்கள்கொண்டவர். நகைச்சுவை கலந்த அழுத்தமான பேச்சு, இவரது பிரத்யேக அடையாளம். மூன்று வயதுக் குழந்தை முதல் முதியோர்வரை எல்லோருக்கும் இருக்கும் மன அழுத்தத்தைக் கையாள்வது குறித்து விரிவாகப் பேசுகிறார் அவர். 

நேர நிர்வாகம் டென்ஷனைத் தவிர்க்கும்!

`டென்ஷனை ஏற்றாதே’ என்று இப்போது  குழந்தைகூட சொல்கிறது. மன அழுத்தம் என்றால் என்னவென்று பார்ப்பதற்கு முன்னர், மனம் என்றால் என்னவென்று பார்ப்போம்.

நம் உடலின் எல்லா அவயங்களிலும் உணர்வுகளாக, எண்ணங்களாக இருக்கிறது மனம். ஓர் எண்ணம், ஓர் உணர்வு, இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செயலாக்கம் பெறச் செய்ய முயலும்போது அது நம் புத்திக்குக் கடத்தப்படுகிறது. நம் புத்தி சொல்வதற்கேற்ப செயல்படுத்தப்படுகிறது. செயல் வெற்றி பெற்றால், மனம் மகிழ்கிறது; தோல்வியடைந்தால், டென்ஷனாகிறது, குழப்பமடைகிறது. அதனால் ஏற்படுவதே மன அழுத்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேர நிர்வாகம் டென்ஷனைத் தவிர்க்கும்!திங்கள்கிழமை காலை 6 மணி ஆனாலே எல்லோர் மனதிலும் ஒரு பயம். ‘திங்கள்கிழமை ஒரு நல்ல நாள்’ என்று மலையாளத்தில் ஒரு படமே வந்தது. ‘கடிகாரத்தில் 6 மணி அடிக்கக் கூடாது’ என்பதற்காகக் கடிகாரத்தின் பெண்டுலத்தில் பள்ளி மாணவன் ஒருவன் தொங்குவதுபோல போஸ்டர் அச்சடித்திருந்தார்கள். காலை 6 மணிக்கு எழுந்தால், வீட்டுப்பாடம் எழுத வேண்டும், படிக்க வேண்டும், பள்ளிக்கூடம் போக வேண்டும் என அந்த மாணவனுக்கு ஏகப்பட்ட டென்ஷன். இதேபோல், இன்னொரு பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் தவறுசெய்துவிடுகிறான். தலைமையாசிரியரைப் பார்த்துவிட்டு வரும்படிச் சொல்கிறார் ஆசிரியர். மாணவன் சென்று பார்க்கிறான். ‘ஐயா தெரியாமல் செய்துவிட்டேன், இனிமேல் செய்ய மாட்டேன்’ என்கிறான் மாணவன்.  ‘அப்படியா... என்னை மாலை 4 மணிக்கு வந்து பார்’ என்கிறார் ஆசிரியர். சொன்னபடி ஆறு மணி நேரம் கழித்து, மாலை 4 மணிக்கு அவரது அறைக்குள் நுழைகிறான். ‘சரி, இனிமே இப்படி நடந்துகொள்ளாதே. நல்லாப் படி’ என்று சொல்லி சாக்லேட்டைக் கையில் கொடுத்து அனுப்பிவிடுகிறார்.

‘இதை நீங்கள் காலையிலயே சொல்லிருக்கலாமே சார்’ என  அருகிலிருந்தவர் கேட்டார். அதற்கு தலைமையாசிரியர், ‘இந்த ஆறு மணி நேரம் என்ன தண்டனை கொடுப்பேனோ என்ற மன உளைச்சல், அவனுக்கு மறக்க முடியாததாக இருக்கும். அந்தத் தவற்றை இனிமேல் செய்யாமல் அது அவனைக் காக்கும்’ என்றார். `என்ன ஆகுமோ’ என்ற பயம்தான் நம்மை அவஸ்தைக்குள்ளாக்குகிறது. ரத்தப் பரிசோதனை முடிவுக்குக் காத்திருக்கும்போது மனதில் ஒரு பயம் வந்து கவ்விக்கொள்ளுமே... அதுபோல!

கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்ததும், பட்டிமன்ற மேடைகளில் பேசுவதற்காக அவசர அவசரமாகக் கிளம்புவேன். போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கிவிடக் கூடாது என்று பயப்படுவேன். சில வேளைகளில் காரிலிருக்கும் ரேடியோவைக்கூட ஆஃப் செய்துவிடுவேன். நேர நிர்வாகம் மிக முக்கியம். அதை முறையாகக் கடைப்பிடித்தாலே வேலை சார்ந்து வரும் டென்ஷன் போய்விடும். கடுமையாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்காதபோது நமக்கு ஒருவிதமான மனச்சோர்வு ஏற்படும். சக மனிதர்களின் போக்கு குறித்த பயம், அங்கீகாரம் கிடைக்காத நிலை, முறையான நேர நிர்வாகமின்மை ஆகியவைதான் நமக்குப் பெரிய அளவில் மனச்சோர்வை ஏற்படுத்தும். இவற்றை நாம் எளிதாகச் சரிசெய்துவிடலாம்.

நம்மால் தீர்க்க இயலாத பிரச்னைகளை நெருங்கிய நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி, அவர்களிடம் ஆலோசனை பெறலாம். மனதுக்குப் பிடித்த சுற்றுலாத்தலங்களுக்குப் போய் வரலாம். இசையும் தாள நயமும்மிக்கப் பாடல்களைக் கேட்கலாம். குழந்தைகளுடன் விளையாடி மகிழலாம். இவற்றைச் செய்தாலே போதும், மனம் மகிழ்ச்சியால் துள்ளும்.’’

எஸ்.கதிரேசன் - படங்கள்: பா.காளிமுத்து