Published:Updated:

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமளவுக்கு காய்ச்சல் பாதிப்பில்லை - மா.சுப்பிரமணியன்

காய்ச்சல்
News
காய்ச்சல்

பள்ளிகளை மூடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பதே உண்மை. ஏற்கெனவே கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த சாதாரண காய்ச்சலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமளவுக்கு காய்ச்சல் பாதிப்பில்லை - மா.சுப்பிரமணியன்

பள்ளிகளை மூடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பதே உண்மை. ஏற்கெனவே கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த சாதாரண காய்ச்சலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.

Published:Updated:
காய்ச்சல்
News
காய்ச்சல்

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு இன்ஃப்ளுயென்ஸா மற்றும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாகப் பரவவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சமீப நாள்களில் டெங்கு மற்றும் இன்ஃப்ளுயென்ஸா காய்ச்சல் பரவி வருகிற நிலையில் புதுச்சேரி மாநில அரசு, 5 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் அதற்கான அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்... 

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் மொத்தம் 1,166 பேர் ஃப்ளு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இன்றைக்கு மட்டும் 371 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் டெங்கு பாதிப்பு 121 ஆக அதிகரித்திருக்கிறது. இச்சூழலில் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது என்பது போன்ற செய்திகள் வெளியாகி மக்களை அச்சத்துக்கு ஆளாக்கியிருக்கின்றன. இது காய்ச்சல் காலம் என்பதால், இதுபோன்று காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்படுவது மிகவும் இயல்பானது. சாதாரண நாள்களிலேயே ஒரு சதவிகிதம் பேர் காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். மழைக்காலத்தில் அந்த எண்ணிக்கை 1.5 ஆக உயர்ந்திருப்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. காய்ச்சல் காலத்தை எதிர்கொள்வதற்கான அத்தனை தயாரிப்புகளையும் மருத்துவத்துறை மேற்கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான வார்டுகள், போதிய படுக்கை வசதிகள் உள்ளன. இது வைரஸ் காய்ச்சல் என்பதால் அதிகபட்சமாக 3 நாள்களில் குணமாகிவிடும் என்பதால் இதற்காக பதற்றம் கொள்ளத் தேவையில்லை. 

இது இயல்பானதுதான் என்றாலும், பொதுமக்களின் நலன் கருதி நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படவிருக்கிறது. காய்ச்சலின் அறிகுறிகளான சளி, இருமல் மற்றும் தலைவலி இருப்பவர்கள் இம்முகாமில் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். காய்ச்சல் இருப்பவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக 476 நடமாடும் மருத்துவக்குழுக்கள் இயங்குகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாளை காய்ச்சல் முகாம் முடிந்த பிறகு, தமிழகத்தின் எந்தப் பகுதியாக இருந்தாலும் அங்கே காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஐக் கடந்திருந்தால் அங்கு சிறப்பு முகாம் அமைக்கப்படும்" என்றவர், பள்ளிகளை மூடும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டதற்கு... 

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

``பள்ளிகளை மூடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பதே உண்மை. ஏற்கெனவே கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த சாதாரண காய்ச்சலுக்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். புதுச்சேரி அரசு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பதில் எங்களுக்கு எந்த எதிர்க்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் அதற்கான தேவை உருவாகும் நிலையில் குழந்தைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், இன்றைக்கு அப்படியான சூழல் இல்லை. காய்ச்சலின் அறிகுறிகளான சளி, இருமலோடு மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் அவர்களின் பெற்றோரை அழைத்து, கூட்டிச் செல்ல சொல்லுங்கள் என பள்ளி ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

ஃப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலவசமாகச் செலுத்தும் திட்டம் அரசுக்கு இருக்கிறதா என மருத்துவத்துறை சிறப்பு செயலாளர் செந்தில்குமாரிடம் கேட்டோம்... 

முகக்கவசம்
முகக்கவசம்

"ஃப்ளு காய்ச்சலுக்கென்று தடுப்பூசி இருக்கிறது. தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோடிக்கணக்க்கான மக்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்த வேண்டிய தேவை இல்லை. கொரோனா போன்றே இதுவும் ஒரு வைரஸ் காய்ச்சல்தான். கொரோனாவுக்காக நாம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றியதைப் போல இப்போதும் நாம் பின்பற்றினால் இக்காய்ச்சல் பாதிப்பு பெருகாது" என்றார் செந்தில்குமார். 

அச்சம் கொள்ளாமல் முகக்கவசம் அணிந்து முடிந்த வரையிலும் பாதுகாப்பாக இருப்பதே நலம்!