Published:Updated:

குடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது?- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan

alcohol addiction
News
alcohol addiction

மது அருந்துபவரின் உடலில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்வதற்கான உடனடி சிகிச்சைகள் அலோபதி மருத்துவத்தில் இருக்கின்றன.

Published:Updated:

குடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது?- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan

மது அருந்துபவரின் உடலில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்வதற்கான உடனடி சிகிச்சைகள் அலோபதி மருத்துவத்தில் இருக்கின்றன.

alcohol addiction
News
alcohol addiction

இந்தியாவில் மதுவுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசும், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துக் கூறினாலும் மது அருந்துவோரை மீட்பது பெரும் சவாலாகவே இருக்கிறது.

alcohol addiction
alcohol addiction
“குடிநோயிலிருந்து ஒருவர் விடுபட எந்த மருத்துவம் சிறந்தது. அலோபதியா... ஹோமியோபதியா... சித்தாவா?” என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர் ஹாசன் என்பவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
குடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது?- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan

இந்தக் கேள்வியை குடிநோயாளிகளுக்குப் போதை மீட்பு சிகிச்சை அளித்து வரும் மனநல மருத்துவர் எஸ்.மோகன வெங்கடாசலபதி முன் வைத்தோம்.

“குடிநோய் என்பது மூளை சார்ந்த ஒரு நோய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குடிநோயிலிருந்து மீள்வது மிகப்பெரிய விஷயம். அதிலிருந்து மீள முயலும்போது ஏற்படும் பக்க விளைவுகளை `ஆல்கஹால் வித்ட்ராயல் சின்ட்ரோம்’ (ALcohol Withdrawal Syndrome) என்கிறோம். ஒருவர் குடியிலிருந்து மீண்டுவரும் காலகட்டம் மிகவும் சவாலானது.

alcohol addiction
alcohol addiction

மது அருந்துபவரின் உடலில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்வதற்கான உடனடி சிகிச்சைகள் அலோபதி மருத்துவத்தில் இருக்கின்றன. உதாரணமாக, நேற்று வரை குடித்துக்கொண்டிருந்தவர் திடீரென பழக்கத்தை நிறுத்தினால் கை நடுக்கம், கடும் வியர்வை, வாந்தி, மனதில் ஒருவிதமான குழப்பநிலை போன்றவை ஏற்படும். சிலருக்கு வலிப்புகூட ஏற்படலாம்.

இதுபோன்ற சூழலிலிருந்து அவரை மீட்க அலோபதி மருந்துகள் உதவும். குறிப்பாக, வலிப்பு ஏற்படும்போது ஒருவருக்கு உடனடியாக ஊசி, மாத்திரைகள் தர வேண்டியிருக்கும்.

மனநல மருத்துவர் எஸ்.மோகன வெங்கடாசலபதி
மனநல மருத்துவர் எஸ்.மோகன வெங்கடாசலபதி

உடனடி விளைவுகளைச் சமாளிக்க அலோபதி மருத்துவமே சிறந்தது. பிற மருத்துவ முறைகளில் இதற்கான சிகிச்சைகள் இருந்தாலும்கூட அவை உடனடி தீர்வுகளைத் தருவதில்லை.

ஒருவருக்குத் தலைவலி வந்தால் அவர் உடனே `பாராசிட்டமால்’ மாத்திரை எடுத்துக்கொள்கிறார். பாராசிட்டமால் என்பது அலோபதி மருந்துதான். எனவே, ஒருவர் குடிநோயிலிருந்து விடுபட அலோபதி மருத்துவத்தை நாடுவதே சிறந்தது” என்கிறார் மோகன்.

குடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது?- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.