Published:Updated:

'கர்ப்பம் தரிக்க..!' - தம்பதிகளுக்கான வாழ்வியல் பரிந்துரைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 05

தாய்மை
News
தாய்மை

குழந்தையின்மை பிரச்னை தானாகவே சரியாக என்ன செய்ய வேண்டும்?

Published:Updated:

'கர்ப்பம் தரிக்க..!' - தம்பதிகளுக்கான வாழ்வியல் பரிந்துரைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 05

குழந்தையின்மை பிரச்னை தானாகவே சரியாக என்ன செய்ய வேண்டும்?

தாய்மை
News
தாய்மை

'வரும் முன் காப்போம் (Prevention is better than cure)' என்பதைப்போல, 'கரு உருவாகும் முன் தயாராவோம் (Plan before pregnancy)' என்பது இன்றைய காலகட்டத்தின் புதுமொழியாக அனைவரையும் சென்று சேரவேண்டும். சூழலியல், வாழ்வியல், உணவியல், உளவியல் மாற்றங்களின் விளைவு என்று பின்னாளில் குழந்தைகளின் குறைகளை நொந்துகொள்வதைவிட, முன்னரே குறைகள் இல்லா குழந்தைகளைப் பெற்றெடுக்க தம்பதி தயாராக வேண்டும். அப்போது எல்லா பெற்றோர்களுமே ஓர் அற்புதமான குழந்தைக்கும், அதன் மூலம் அடுத்த தலைமுறைக்கும் வித்திட முடியும்.

தாய்மை
தாய்மை

நம் கதாபாத்திரம் ஶ்ரீராமும் மேனகாவும் சில பயிற்சிகளுக்குப் பின்னர், தங்களின் ஒட்டுமொத்த வாழ்வியல் முறையையும் மாற்றி, இதுநாள் வரை தாங்கள் என்னவெல்லாம் செய்து வந்தார்களோ அவற்றையெல்லாம் மாற்றி அமைத்திருந்தனர். இந்த மூன்று மாத காலத்தில், அந்த அதிசயம் நடந்தது.

ஆம்... அந்த மஞ்சள் நோட்டீஸை இனி அவர்கள் கட்டில்மேல் ஒட்டத்தேவையில்லாமல் கிழித்து எறியப்பட்டது. அது சாத்தியமானது எப்படி என்பதை, இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
குழந்தையின்மை
குழந்தையின்மை

காலையில் 8 மணியளவில் கண்விழித்துக் கடிகாரத்தைப் பார்க்கும் ஶ்ரீராமும் மேனகாவும் 5.30 மணிக்கு அலாரம் வைக்கும் நபராக மாறியிருந்தார்கள்.

11 மணிவரை எதுவும் சாப்பிடாமல், ஆபீஸில் ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு ஓடி உழைத்த பழக்கம் மாறி, காலையில் வெறும் வயிற்றில், இருவருக்கும் பரிந்துரைக்கப்பட்ட fertility smoothie மற்றும் எளிய முறையில் தயாராகும் சிற்றுண்டியை வீட்டிலேயே சாப்பிட ஆரம்பித்தார்கள்.

காய்கறியும் கீரையும் சில வருடங்களாக இப்படி ஃப்ரெஷ்ஷாக வாங்கிச் சாப்பிட்டதாக இருவருக்கும் ஞாபகமே இல்லை. அந்தளவுக்கு அவை வண்ண வண்ணமாகத் தட்டுகளில் இடம்பெற ஆரம்பித்தன.

திருமணம் ஆன புதிதில், மனம் முழுக்க மகிழ்வுடன் இருவரும் சிறுபிள்ளைகளாய் ஓடிப்பிடித்து விளையாடிய நாள்களைத் திரும்பக் கொண்டுவந்திருந்தார்கள்.

மூச்சுப்பயிற்சியும் பிரத்யேகமான யோகப்பயிற்சியும் செய்வதற்கு இருவரும் நேரம் கண்டுபிடித்திருந்தனர்.

இரண்டு மாதங்களில், வேறு வாழ்க்கை வாழத்தொடங்கியிருந்தனர் இருவரும்.

எந்த ஒரு நிகழ்வு குறித்தும் நம் பதற்றம் அதிகமாக அதிகமாக, நம்மை நோக்கி வரும் ஒரு வேண்டுதல் விலகிச் செல்ல நேரும்.

ஶ்ரீராமும் மேனகாவும் சென்ற பயிற்சியில் முக்கியமான வழிமுறை, எமோஷனல் பேலன்ஸ்மென்ட் எனப்படும் மனதைக் கட்டுப்படுத்தி பதற்றம் இல்லாமல் ஆசுவாசப்படுத்துவது. அந்தத் திட்டத்தில் முதலாவதாக வலியுறுத்தப்பட்ட செயல் என்றால், வீட்டில் சில பல மாற்றங்களை அவ்வப்போது செய்ய வைப்பது. காரணம் அதே வீடு, அதே சமையல் அறை, ஒரே மாதிரியான பாத்திரங்கள், ஒரே வகை ருசி கொண்ட உணவு, அதே பேருந்து, அதே வழித்தடம் என இப்படி காலை முதல் மாலை வரை ஒரே வாழ்வியல் சூழலில் ஓடிக்கொண்டிருப்பது, உடலையும் மனதையும் அலுப்படைய வைக்கும். எனவே, தினமும் ஒரு சிறு முயற்சியாய் புதுமையை உணரும் வண்ணம் ஏதாவது பிடித்த ஒரு பணியை மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்பெல்லாம் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்தால்கூட, டீவியை ஓடவிட்டுவிட்டுச் சோம்பலாக விரக்தியோடு உட்கார்ந்திருக்கும் மேனகா, அவ்வளவு உற்சாகமாக வீட்டுக்குள் எண்ணற்ற மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தாள். அதன் பலனாக வீட்டுக்குள் எங்கு திரும்பினாலும் குழந்தையின் வாசம் உணரக்கூடிய வகையில், வீடு முற்றிலும் மாறியிருந்தது. எப்போதும் நேர்மறையான அதிர்வுகளுக்கும் உணர்வுகளுக்கும் அதை ஒத்த நிகழ்வுகளை ஈர்க்கும் சக்தி உண்டு என்பதை எத்தனையோ ஆய்வுகளின் மூலம் உணர்ந்திருக்கிறோம். இங்கு அது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்தது.

இப்படிக்கு... தாய்மை
இப்படிக்கு... தாய்மை

மேனகாவை கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் ஓவ்யூலேஷன் டேட் மனதிற்குள் தோன்றித் தோன்றி பயமுறுத்திய வண்ணமே இருக்கும். அந்த நாள்களைத் தவறவிட்டுவிடுவோமோ என்று எத்தனை எத்தனை அபத்தங்களைச் செய்திருப்பாள்? இந்த இரண்டு, மூன்று மாதங்களாக அதுபற்றி அவளுக்கு ஞாபகத்திலேயே இல்லை. அதை ஞாபகத்தில் வைக்க வேண்டாம் என்று, பயிற்சியில் அவளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எப்படிப்பட்ட குழந்தை வேண்டும் என்பது முதல், எப்போது குழந்தை தங்களை நோக்கி ஈர்ப்பு விதிமூலம் வந்தடையும் என்பதுவரை ஆழமாக நம்பிக்கை வைத்துவிட்டு, ஆனால், அது எப்படி நிகழும் என்று பதற்றமடையாமல் இயல்பு நிலையில் இருக்கவேண்டும் என்பதும், பயிற்சியில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளை. எந்த ஒரு நிகழ்வு குறித்தும் நம் பதற்றம் அதிகமாக அதிகமாக, நம்மை நோக்கி வரும் ஒரு வேண்டுதல் விலகிச் செல்ல நேரும்.

இப்படியாக ஶ்ரீராமும் மேனகாவும் உற்சாகமாக, தங்களை மறந்து தங்கள் பழைய குழப்பங்களை விட்டு விலகிநின்ற நேரம், மேனகாவின் கல்லூரித் தோழி, தன் திருமணப் பத்திரிகையை மேனகாவுக்கு வைக்க எடுத்து வந்திருந்தாள். அவளை உட்காரவைத்து, குழந்தைப்பேறு தொடர்பாகத் தன்னை மிகவும் ஈர்த்த ஒரு சிறு விளக்கத்தைச் சொல்லி, திருமணமான கையோடு ஆரோக்கியமான கர்ப்பத்துக்குத் தயாராகச் சொல்லி தன் தோழியை வலியுறுத்தினாள் மேனகா.

இப்படிக்கு... தாய்மை
இப்படிக்கு... தாய்மை

''அதாவது, நான்கு தம்பதிகள் ஓர் இடத்தில் இருக்கிறார்கள், அவர்களுக்கு நடுவில் ஒரு பாத்திரம் இருக்கிறது. அதைக் குழந்தை என்று உருவகப்படுத்திக்கொள்ளலாம். இப்போது, முதலாவதாக அமர்ந்திருக்கும் தம்பதி, திருமணமான கையோடு, இருவரும் நல்ல உடல் மற்றும் மனநலனோடு இருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்படி அவர்கள் தங்களைத் தயார்படுத்தும் பட்சத்தில், குழந்தை என்னும் அந்தப் பாத்திரத்தில், சராசரியாக இருவரும் ஒரே ஒரு பக்கெட் அளவுக்குத் தண்ணீர் ஊற்றினால் போதும், அது நிரம்பிவிடும். அந்த அளவுக்கு அப்போது அது இலகுவான, புத்திசாலித்தனமான, சுலபமான வேலையாக இருக்கும்.

இதுவே இரண்டாவது அமர்ந்திருக்கும் தம்பதி, கர்ப்பம் தரிப்பதற்கு முன் உடல், மனநலம் பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை. எனினும், கர்ப்பகாலத்தில் பல்வேறு சிறப்பான வழிமுறைகள் மூலம் அந்தப் பெண் ஆரோக்கியமானவளாய் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். முதல் தம்பதியோடு ஒப்பிடும்போது, இரண்டாவது தம்பதி, குழந்தை எனும் பாத்திரத்தில் 10 மடங்கு நீரை ஊற்ற வேண்டியிருக்கும். அதுவும் மனைவியானவள் எட்டு பக்கெட் ஊற்ற, கணவன் வெறும் இரண்டு பக்கெட் ஊற்ற மட்டுமே வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

இப்படிக்கு... தாய்மை
இப்படிக்கு... தாய்மை

மூன்றாவது தம்பதி, குழந்தை பிறக்கும்வரை எதையும் திறம்படச் செய்ய நினைக்கவில்லை. பல்வேறு தொந்தரவுகளும் உடல் உபாதைகளும், கவலையுமாய் குழந்தைப்பேற்றைக் கடக்க வேண்டிய நிலை. இப்போது, அந்தப் பாத்திரம் நிரம்ப 100 பக்கெட்கள் அவர்கள் தண்ணீர் ஊற்றவேண்டியிருக்கும். அப்போதும் தாயானவளே பெரும்பான்மையான பொறுப்புக்கு ஆளாவாள்.

கடைசியாக அந்த நான்காவது தம்பதி, எந்தக் காலகட்டத்திலும் நல்லதொரு வாழ்வியல் சூழலுக்குத் தங்களை ஆட்படுத்தாதவர்கள். அப்படியாக கர்ப்பகாலமும் குழந்தையின் முதல் சில வருடங்களும் நகரும் பட்சத்தில், அவர்கள் ஆயிரம் பக்கெட்டுகள் தண்ணீர் ஊற்றினாலும் பாத்திரம் நிரம்பாது. இதுவே நிதர்சனம்.''

இப்படிக்கு... தாய்மை
இப்படிக்கு... தாய்மை

இந்தக் கற்பனை உவமையை மிக அழகாகத் தன் தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் மேனகா. தான் இந்த சில வருடங்களாகக் கருத்தரிக்காமல் இருந்ததுகூட ஏதோ ஒரு நன்மைக்கே என்று சொல்லி பெரும்மூச்சு விட்டாள்.

சில வாரங்களாக உற்சாகத்தில் துள்ளிக்குதித்த வந்த மேனகாவுக்கு, இந்த மாதத்தில் ஒரு நான்கு நாள்களுக்கும் மேலாக மாதவிடாய் தள்ளிப்போனது. வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்த்தவளுக்குப் பேரானந்தம் காத்திருந்தது.

ஶ்ரீராமுக்கும் மேனகாவுக்கும் தலைகால் புரியாத சந்தோஷம். ஆனாலும், அதை அமைதியாக அனுபவித்து ரசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேசை மீது எப்போதோ வைத்த ஸ்டிக் நோட்டிஸும் பேனாவும் படபடவென அடித்துக்கொண்டன. வேகமாக அதை எடுத்துக் கிழித்துப் போட்டுவிட்டு, அழகான கர்ப்ப நாள்களை எண்ணி மிதக்கலானார்கள்.