Published:Updated:

பிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது ?#DoubtofCommonMan

மாதவிடாய் பிரச்னை
News
மாதவிடாய் பிரச்னை

''ஜெல் வேண்டாம் என்பவர்கள் சுத்தமான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.''

Published:Updated:

பிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது ?#DoubtofCommonMan

''ஜெல் வேண்டாம் என்பவர்கள் சுத்தமான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.''

மாதவிடாய் பிரச்னை
News
மாதவிடாய் பிரச்னை

ஒரு சிறுமி பெண்ணாக மாறுகிற 12 அல்லது 13 வயதில், அவளுடைய உடம்பில் ஹார்மோன்களால் எக்கச்சக்க மாற்றங்கள் உண்டாகும். அவை அத்தனையுமே அந்தச் சிறுமியை அடுத்தகட்ட பரிணாமத்தை நோக்கி நகர்த்துகிற பாசிட்டிவ் விஷயங்கள்தான். ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு செடி பூ பூக்க ஆரம்பிப்பது போன்றதுதான் இந்த மாற்றங்கள் எல்லாமே...

பூப்பெய்தும்போது பெண்கள் உடலளவில் எப்படிச் சில சங்கடங்களை சந்திக்கிறார்களோ, அதேபோல 40-களிலும் சில சங்கடங்களை சந்திக்கத்தான் செய்கிறார்கள்.

இதேபோன்றதுதான் பெண்களுடைய 40-களும். அந்த நேரத்தில் பெண்களின் உடலில் இருக்கிற ஹார்மோன்கள் அவர்களை பெரி மெனோபாஸ், மெனோபாஸ் என மெல்ல மெல்ல அடுத்தகட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு போகும். இந்தப் பருவத்தை, பெண்கள் நிறைய பொறுப்புகளுடன் மரம்போல தழைக்கிற பருவம் என்று வைத்துக்கொள்ளலாம். பூப்பெய்தும்போது பெண்கள் உடலளவில் எப்படி சில சங்கடங்களை சந்திக்கிறார்களோ, அதேபோல 40-களிலும் சில சங்கடங்களைச் சந்திக்கத்தான் செய்கிறார்கள்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பெயர் வெளியிட விரும்பாத ஒரு வாசகி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். "எனக்கு 40 வயது. மாதவிடாய் நேரங்களில் அரிப்பும் புண்களும் வருகின்றன. தாம்பத்திய உறவின்போது வறட்சியாக இருக்கிறது. என்ன செய்வது?" என்பதுதான் அவருடைய கேள்வி. இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்ரியாவிடம் சொன்னோம்.

வறட்சிக்கு வாய்ப்பில்லை !

"வாசகிக்கு 40 வயதுதான் ஆகிறது என்பதால், இந்த நேரத்தில் பிறப்புறுப்பில் வறட்சி வருவதற்கு வாய்ப்பு இல்லை. தவிர, அவருக்கு மாதவிடாய் வந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார். மாதவிடாய் நிகழ்ந்துகொண்டிருக்கையில் பொதுவாக பிறப்புறுப்பில் வறட்சி, அரிப்பு ஏற்படாது.

வறட்சித் தொடர்ந்தால் என்ன செய்வது ? சிலருக்கு உடலின் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக, வறட்சி வரலாம். அதனால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில், இதற்கென இருக்கிற ஜெல்லை பயன்படுத்தினால் உறவின்போது வறட்சி, அதனால் வருகிற எரிச்சல் இருக்காது. ஜெல் வேண்டாம் என்பவர்கள் சுத்தமான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.

புண்கள் ஏன் வருகிறது ? மாதவிடாய் நிகழ்ந்துகொண்டிருக்கிற வயதில், வறட்சி, அரிப்புடன்கூட புண்களும் வருகிறது என்றால், பிறப்புறுப்பில் ஏதாவது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. அது பரவுவதற்குள், உடனே ஒரு மகப்பேறு மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது.

எப்போதும் சுத்தமாக இருங்கள்! நம் சருமத்தில் எங்கெல்லாம் சூரிய ஒளிபடவில்லையோ, அங்கெல்லாம் ஈரம், வியர்வை ஆகியவை தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால், அந்தப் பகுதிகளில் கிருமித்தொற்று வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பிறப்புறுப்பில் இப்படி நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், பிரைவேட் பார்ட்ஸை தினமும் இருமுறை மட்டும் சோப்பு, வஜைனல் வாஷ் என்று பயன்படுத்தி சுத்தமாக வைத்திருங்கள். சிறுநீர் கழிக்கிற நேரங்களில் வெறும் நீரால் சுத்தப்படுத்தினாலே போதும். முக்கியமான விஷயம், அடிக்கடி சோப்பு, வாஷ் என்று பயன்படுத்தி சுத்தம் செய்தால், பிரைவேட் பார்ட்ஸ் வறண்டுவிடும் கவனம்.

கிருமித்தொற்றுக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது... பிறப்புறுப்பில் அரிப்பு இருக்கிறது என்றால், வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தை ஐந்தாறு முறை வாஷ் செய்துபாருங்கள். சரியாகவில்லையென்றால், உடனே மருத்துவரைப் பார்த்து விடுங்கள். பிறப்புறுப்பின் சுத்தம்தான் உங்களை கருப்பை வாய்ப்புற்றுநோயில் இருந்து காப்பாற்றும்.

கணவரையும் கவனியுங்கள்!

சில பெண்களுக்கு பிறப்புறுப்பில் கிருமித் தொற்று என்பது, அவர்களுடைய கணவர்களுடைய சுத்தமின்மைக் காரணமாகக்கூட வந்திருக்கலாம். மனைவிக்கு மட்டும் சிகிச்சை அளித்து பிரச்னையை சரி செய்துவிடுவதால் ஒரு பயனும் ஏற்படாது. மறுபடியும் அந்த மனைவிக்கு இந்தப் பிரச்னை வரவே செய்யும்.

அதனால், பெண்கள் தங்களுடைய பிரைவேட் பார்ட்டில் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றால், கணவருக்கும் அந்தப் பிரச்னை இருக்கிறதா என்று கேளுங்கள். இருந்தால், இரண்டு பேரும் சிகிச்சை எடுத்துகொள்வதுதான், இந்தப் பிரச்னை திரும்பத் திரும்ப வராமல் இருப்பதற்கான மிகச் சரியான தீர்வு. ஒரு வேளை கணவருக்கு இந்தப் பிரச்னை இல்லையென்றால், மனைவி சிகிச்சையெடுத்து சரியான பிறகு, வழக்கமான தாம்பத்திய செயல்களில் ஈடுபடலாம்."