ரஜினி ரசிகர்களை பாஜக வளைத்தது எப்படி-ட்ரான்ஸ்ஃபர் பின்னணி-மொபைல் ஆப் கடன் மிரட்டல்|விகடன் ஹைலைட்ஸ்

ரஜினி ரசிகர்களை பாஜக வளைத்தது எப்படி-ட்ரான்ஸ்ஃபர் பின்னணி-மொபைல் ஆப் கடன் மிரட்டல்|விகடன் ஹைலைட்ஸ்
பா.ஜ.க-வில் சேரும் ரஜினி ரசிகர்கள்...வளைக்கப்பட்டது எப்படி?
கொரோனா பரவல், உடல் நிலை என பலவற்றை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். அத்துடன் மக்கள் மன்றமாக இருந்த தனது ரசிகர்கள் அமைப்பை மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றினார்.
ரஜினியின் இந்த முடிவு அவரின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது, மன உளைச்சலுக்கும் ஆளானார்கள். இருப்பினும் வழக்கம் போல் ரஜினி சொன்னதை ஏற்றுக்கொண்டு, அதன் பிறகு அரசியலில் தலையிடாமல் அவரது ரசிகர்கள் அமைதியாகவே இருந்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணையவிருக்கின்றனர்.
இதன் பின்னணி என்ன..? ரஜினி ரசிகர்களை அண்ணாமலை டீம் வளைத்தது எப்படி..? தனது ரசிகர்கள் பா.ஜ.க-வில் இணையும் முடிவுக்கு ரஜினி பச்சைக்கொடி காட்டினாரா என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்...
ராதாகிருஷ்ணனின் அதிரடி ட்ரான்ஸ்ஃபர்... பின்னணியில் அரசியல் காரணங்களா?
அனைவராலும் அறியப்பட்ட சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு மாற்றாக சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியான டாக்டர் செந்தில்குமார் சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதில் புதிய உள்துறை செயலாளராக, தமிழ்நாடு கேடர் வெளி மாநில அதிகாரியான ஆந்திராவைச் சேர்ந்த பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
"அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு" - மோடி திடீர் நடவடிக்கை!
அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி அனைத்து துறை அமைச்சக அதிகாரிகளை அறிவுறுத்தி இருப்பதாக பிரதமர் அலுவலகத்தின் ட்வீட் செய்துள்ளது.

"தினமும் ரூ.40,000 டார்கெட் ... " - மொபைல் ஆப் கடன் மிரட்டலின் பின்னணி
மும்பையில் மொபைல் ஆப் மூலம் கடன் பெற்று பணத்தை சரியாக திரும்ப செலுத்தாதவர்களுக்கு மொபைல் போனில் தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள் வந்தன. போனில் மிரட்டியவர்கள் கடன் பெற்றவர்களின் மொபைல் போன் தொடர்பில் இருப்பவர்களின் நம்பர்களை திருடி, அவர்களுக்கும் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தனர். அதோடு கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசபடமாக சித்தரித்து அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த மாதம் மும்பையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

"காலில் விழச் சொன்னால் விழ வேண்டியது தானே.." - சர்ச்சையில் போலீஸ் உதவி ஆணையர்
நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியில் ஊர் விலக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவருமே ஊர் கமிட்டி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஏற்று சிலர் ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். பேச்சிராஜா தொடர்ந்து மறுப்புத் தெரிவித்ததுடன் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தார்.

வீட்டுக் கடன்: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...
நம்மில் பலருக்கு மொத்தமாக ரொக்கப் பணம் வைத்துக்கொண்டு வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது இயலாத காரியமாக இருக்கிறது. அப்படியானவர்களுக்கு கைகொடுப்பது வீட்டுக் கடன் என்றால் மிகை இல்லை.