Published:Updated:

`இனி அனைவருமே செயின் ஸ்மோக்கர்ஸ்தான்!' - எச்சரிக்கும் டெல்லி மருத்துவர்

காற்று மாசுபாடு -
News
காற்று மாசுபாடு -

"டெல்லியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றும் பிறக்கும் ஒவ்வோர் உயிரும், ஒவ்வொரு நாளும் 25 சிகரெட்டை புகைக்கிறது."

Published:Updated:

`இனி அனைவருமே செயின் ஸ்மோக்கர்ஸ்தான்!' - எச்சரிக்கும் டெல்லி மருத்துவர்

"டெல்லியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றும் பிறக்கும் ஒவ்வோர் உயிரும், ஒவ்வொரு நாளும் 25 சிகரெட்டை புகைக்கிறது."

காற்று மாசுபாடு -
News
காற்று மாசுபாடு -

டெல்லியைச் சேர்ந்த `நுரையீரல் விழிப்புணர்வு அறக்கட்டளை'யைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் குமார், காற்று மாசுபாட்டால் நுரையீரலுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து சில தினங்களுக்கு முன் பேட்டியொன்று அளித்திருந்தார்.

காற்று மாசுபாடு - குழந்தைகள்
காற்று மாசுபாடு - குழந்தைகள்

அதில், '1988-ம் ஆண்டுக்குப் பிறகு, ஆரோக்கியமான நுரையீரலைக் கொண்ட ஒருவரைக்கூட நான் பார்க்கவில்லை' எனக் கூறியுள்ளார். மூத்த நுரையீரல் மருத்துவரான இவரே இப்படிக் குறிப்பிட்டுள்ளது, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பேசும்போது, ''நீண்ட நாள் மருத்துவ சேவையாற்றிவரும் ஒருவர், இத்தனை வருடங்களில் ஆரோக்கியமான நுரையீரலுடன் ஒருவரைக்கூட பார்க்கவில்லை' என்பதன் மூலமாக, இந்தியர்கள் மத்தியில் நுரையீரல் பாதிப்பு எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

குழந்தைகள் பாதிப்புகள்
குழந்தைகள் பாதிப்புகள்

பெரியவர்கள் மட்டுமன்றி இன்றைய குழந்தைகளும்கூட ஆஸ்துமா, காசநோய், நிமோனியா போன்ற நுரையீரல் நோய்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில், நுரையீரல் பாதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்ததன் பின்னணியில், காற்று மாசுபாட்டுக்கு முக்கியப் பங்குள்ளது" என்று கூறியுள்ளார், மருத்துவர் அரவிந்த் குமார்.

"டெல்லியைப் பொறுத்தவரை, இன்றளவில் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) 600 அல்லது அதற்கு அதிகமாக உள்ளது. 25 - க்கும் மேற்பட்ட சிகரெட்டுகளைப் புகைப்பவருக்கு, அதனால் நுரையீரல் எவ்வளவு பாதிக்கப்படுமோ அந்த அளவுக்கான பாதிப்புகள்தான் இந்தக் காற்றை சுவாசிப்பவருக்கும் ஏற்படும். சோகம் என்னவெனில், இந்த அளவு மாசான காற்றைத்தான் இங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுவாசிக்க வேண்டியுள்ளது.

சிகரெட்
சிகரெட்

இவ்வளவு மாசான காற்றை 25 ஆண்டுகள் ஒருவர் சுவாசிக்கிறார் என்றால், அவரை `செயின் ஸ்மோக்கர்' வகையறாவின் கீழ்தான் நுரையீரல் மருத்துவர்களாகிய நாங்கள் கொண்டுவருவோம். இன்றைய நிலவரப்படி, டெல்லியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றும் பிறக்கும் ஒவ்வோர் உயிரும், ஒவ்வொரு நாளும் 25 சிகரெட்டை புகைக்கிறது. அந்த வகையில், நம்முடைய அடுத்த தலைமுறை மொத்தமும் செயின் ஸ்மோக்கர்ஸ்தான்!" எனக் கூறி எச்சரித்துள்ளார்.