Published:Updated:

Doctor Vikatan: லெமன்கிராஸை எப்படிப் பயன்படுத்துவது?

Lemongrass (Representational Image)
News
Lemongrass (Representational Image) ( Photo by Mareefe from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: லெமன்கிராஸை எப்படிப் பயன்படுத்துவது?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Lemongrass (Representational Image)
News
Lemongrass (Representational Image) ( Photo by Mareefe from Pexels )

லெமன்கிராஸ் என்பது என்ன? அது மருத்துவ குணம் வாய்ந்ததா? எப்படிப் பயன்படுத்துவது?

- மேகா (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``லெமன்கிராஸ் என்பது, சிட்ரஸ் வாசனை கொண்டதால் அப்படி அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இது அதிகம் விளைகிறது. ஆனால் இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. `தப்பட்' என்ற இந்திப்படத்தில், நாயகி டாப்ஸி தினமும் லெமன்கிராஸை வெட்டிப்போட்டு டீ போடும் காட்சி படம் முழுவதும் வரும்.

லெமன்கிராஸ்

மலேரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டது. தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு தரும். வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்கள், அந்தச் சூழலின் ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்த, வேபரைஸர் மெஷினில் லெமன்கிராஸ் எசென்ஷியல் ஆயில் பயன்படுத்தலாம். இது ஆன்டிபாக்டீரியல் தன்மை கொண்டது. ஜலதோஷம் வராமல் தடுக்கக்கூடியது.

கர்ப்பகாலம் மற்றும் சாதாரண நாள்களில் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் தன்மை லெமன்கிராஸ் டீ மற்றும் அதன் வாசனைக்கு உண்டு.

லெமன்கிராஸை சாதாரணமாக வீட்டிலேயே வளர்க்கலாம். அதன் இலையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 50 மில்லி அளவுக்கு குடித்தால் தொண்டைக் கரகரப்பும் வாந்தி உணர்வும் சரியாகும். இதன் இலைகளைச் சேர்த்து டீ தயாரித்துக் குடித்தால் வலி நிவாரணியாகவும் உதவும்.

Lemongrass (Representational Image)
Lemongrass (Representational Image)
Pixabay

கால்வீக்கமும் காய்ச்சலும் தணியும். ரத்த அழுத்தம் குறையும். ஃபைப்ரோமயால்ஜியா எனப்படும் பெண்களின் வலி பிரச்னைக்கும் உதவும். இந்தச் செடியை வீட்டுக்குள் வைத்து வளர்த்தால் அதன் வாசனை வீடு முழுவதும் பரவி, நல்லுணர்வை ஏற்படுத்தும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!