Published:Updated:

Doctor Vikatan: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் கொரோனா தொற்றாமல் தப்பிப்பது எப்படி?

Pregnant Woman (Representational Image)
News
Pregnant Woman (Representational Image) ( Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் கொரோனா தொற்றாமல் தப்பிப்பது எப்படி?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Pregnant Woman (Representational Image)
News
Pregnant Woman (Representational Image) ( Pexels )

நான் 5 மாத கர்ப்பிணி. வேலைக்குச் செல்கிறேன். வொர்க் ஃப்ரம் ஹோம் சாத்தியமில்லாத நிலையில், கொரோனா பரவிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் என் பாதுகாப்பையும் கருவிலுள்ள குழந்தையின் பாதுகாப்பையும் எப்படி உறுதிசெய்வது?

- நித்யா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

``அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் ஒமிக்ரான் சூழலில் கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டிலிருப்பதுதான் சிறந்தது. உங்கள் கேள்வியைப் பார்க்கும்போது வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்ற நிலையிலிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் மற்ற எல்லோருக்கும் சொல்லும் அதே விதிமுறைகள்தான் உங்களுக்கும் பொருந்தும். அதாவது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, தடுப்பூசி... இந்த மூன்றும் உங்களை நிச்சயம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும். கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பாற்றல் நிச்சயம் குறையும். எனவே கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு நோய் தீவிரமடைந்து, ஐசியூவில் அனுமதிக்கும் அளவுக்கு கொண்டு போகலாம்.

இதைத் தவிர்ப்பதற்காகத்தான் மாஸ்க், தனிமனித இடைவெளி மற்றும் தடுப்பூசி ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் இப்போது கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனவே கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் எந்த மாதத்தில் இருந்தாலும் தாராளமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

வேலைக்குச் செல்வதைத் தாண்டி, கடைகளுக்கு ஷாப்பிங் செல்வது, தெரிந்தவர்கள் வீடுகளுக்குச் செல்வது போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். கருவிலுள்ள குழந்தைக்கு கோவிட் வந்துவிடுமோ என்று இப்போது நீங்கள் பயப்படத் தேவையில்லை. பிரசவ நேரத்திலோ, பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் ஊட்டும் காலத்திலோதான் அதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கர்ப்பிணி (Representational Image)
கர்ப்பிணி (Representational Image)

இப்போதைக்கு உங்கள் பாதுகாப்புதான் முக்கியம். தேவையின்றி வெளியே அலைவது, வெளி உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்த்து, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?