Published:Updated:

மலையேறும்போது அதிகரிக்கும் மூச்சுத்திணறல், மாரடைப்பு, மரணம்... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இமயமலை
News
இமயமலை

சதுரகிரி போன்ற உயரம் குறைவான மலைப் பகுதிக்குச் செல்கிறவர்களுக்குக்கூட மூச்சுத்திணறல் ஏன் ஏற்படுகிறது என்றால் நம் வாழ்வியல் முறை முற்றிலும் மாறிப்போனதுதான் காரணம்.

மலையேறும்போது அதிகரிக்கும் மூச்சுத்திணறல், மாரடைப்பு, மரணம்... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சதுரகிரி போன்ற உயரம் குறைவான மலைப் பகுதிக்குச் செல்கிறவர்களுக்குக்கூட மூச்சுத்திணறல் ஏன் ஏற்படுகிறது என்றால் நம் வாழ்வியல் முறை முற்றிலும் மாறிப்போனதுதான் காரணம்.

Published:Updated:
இமயமலை
News
இமயமலை

சமீபத்தில் சதுரகிரிக்கு மலையேற்றம் சென்ற ஒருவர் வழியிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறார். மலையேற்றம் மற்றும் அருவியில் குளிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வதைப் பார்க்கிறோம். இது போன்ற விபரீதங்கள் ஏற்படுவது ஏன் என்றும், ஏற்படாதபடி தடுப்பது எப்படி என்பது குறித்தும் சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தரிடம் கேட்டோம்... 

சாய் சுரேந்தர்
சாய் சுரேந்தர்

``மலையேற்றத்தைப் பொறுத்தவரை நாம் உயரமாகப் போகப் போக ஆக்ஸிஜன் அளவு குறைந்து காற்றின் அழுத்தம் கூடும். இதன் காரணமாக சமவெளிப்பரப்பை விடவும் நடப்பதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டி வரும். நுரையீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் உயரமான இடங்களுக்குச் செல்கையில் மூச்சு விட மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். இதுதான் மலையேறுவதில் உள்ள அடிப்படை சவால். 

இமயமலை போன்ற 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் செல்கிறவர்களுக்கு போதுமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான உடற்தகுதி இருந்தால் மட்டுமே செல்ல அறிவுறுத்தப்படும். சதுரகிரி போன்ற உயரம் குறைவான மலைப்பகுதிக்குச் செல்கிறவர்களுக்குக்கூட மூச்சுத்திணறல் ஏன் ஏற்படுகிறது என்றால் நம் வாழ்வியல் முறை முற்றிலும் மாறிப்போனதுதான் காரணம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கிறோம். போதிய உடற்பயிற்சி இல்லை. சரியான உறக்கம் இல்லை. இது போன்ற காரணங்களால் 80 வயதுக்குப் பிறகு சந்திக்கிற உடல் நலப் பிரச்னைகளுக்கு 40 - 45 வயதிலேயே ஆட்படுகிறோம். இதற்காக, உடற்பயிற்சி செய்கிறவர்கள் 100 வயது வரை வாழ்வார்கள், செய்யாதவர்களுக்கு ஆயுள் குறைவு என்றில்லை.    

அடிப்படையில் நமது இதயம் மற்றும் நுரையீரலின் தாங்கும் திறனைப் பொறுத்துதான் இது போன்ற மரணங்கள் நிகழ்கின்றன. இதயத்துக்கு அதிகப்படியான அழுத்ததைக் கொடுக்கும்போது மாரடைப்பு ஏற்படும். டிரெட்மில்லில்  15 நிமிடங்கள் ஓடினால்தான் அதற்குரித்தான பலன் கிடைக்கும். அதுவே, நம் அதீத ஆர்வத்தால் 45 நிமிடங்கள் ஓடினோம் என்றால் அது இதயத்துக்கு கொடுக்கும் அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்திவிடும். இது போன்று இறக்கிறவர்களுக்கு மது, புகைப்பழக்கம் இருந்தாக வேண்டும் என்றில்லை. எந்தப் பழக்கங்களும் இல்லாதவர்களுக்குக்கூட இது போன்று மரணம் சம்பவிக்கும். திரைப்பட நடிகர் ராஜ்குமார் நடைப்பயிற்சி சென்று திரும்புகையில்தான் இறந்திருக்கிறார். ஆகவே, மலையேற்றம் செல்கிறவர்கள் தங்களது இதயத்தின் தாங்கும் திறனைத் தெரிந்துகொண்டு அதிக அழுத்தத்தைக் கொடுக்காமல் செல்ல வேண்டும். 

ட்ரெக்கிங்
ட்ரெக்கிங்

மலையேற்றம் செல்கிற அனைவருமே மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு தரும் சி.பி.ஆர் முதலுதவியை எப்படிச் செய்ய வேண்டும் எனக் கற்றுக்கொள்வது அவசியம். இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து இடப்புற மார்பில் இதயத்துக்கு மேல் பகுதியில் அழுத்த வேண்டும். பிறகு வாய் வழியாக சுவாசம் கொடுக்க வேண்டும். யாருக்கேனும் மாரடைப்பு ஏற்படுமாயின் சி.பி.ஆர் முதலுதவி மூலம் சிறிது நேரத்துக்கு மரணம் ஏற்படாமல் காக்க முடியும்" என்ற டாக்டர், மலையேற்றம் செல்லும் குழுக்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள Mountain safety kid குறித்துக் கூறினார். 

``குழுவாக மலையேற்றம் செல்கிறவர்கள் Mountain safety kid எடுத்துக்கொள்ளலாம். இதனுள் ஆஸ்துமா தொந்தரவுள்ளவர்களுக்கான இன்ஹேலர், விஷக்கடிக்கான மருந்துகள், மாரடைப்புக்கான முதலுதவி செய்யும் கருவி ஆகியவை அடங்கியிருக்கும். மலையேற்றத்துக்கு முன்பு உடலைத் தகுதிப்படுத்திக்கொள்வது நல்லது. புகை, மது போன்ற பழக்கங்களைத் தவிர்த்துவிட்டு போதுமான உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

மூச்சை இழுத்துப் பிடித்தல் மற்றும் பலூன் ஊதுதல் ஆகியவற்றைக் கொண்டு நம் நுரையீரல் மற்றும் இதயத்தின் தாங்கும் திறனைக் கண்டறியும் ஸ்பைரோமெட்ரி பரிசோதனை மேற்கொள்வது இன்னும் சிறந்தது. மலையேற்றத்துக்கான உடற்தகுதியற்றவர்கள் அதைத் தவிர்த்துவிடலாம். 45 வயதைக் கடந்து விட்டாலும் ஆண்டுதோறும் இதயப் பரிசோதனை மேற்கொள்வது நலம். இதயத்தின் தாங்கும் திறனைத் தெரிந்து கொண்டு அதற்கு அழுத்தம் தராமல் இருப்பது முக்கியம். 

மலையேறும்போது அதிகரிக்கும் மூச்சுத்திணறல், மாரடைப்பு, மரணம்... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அருவியில் குளிக்கையில் பயங்கரகுளிர்ச்சியான நீர் உடலில் படும்போது அதன் அதிர்வலைகள் மூளையைத் தாக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக மாரடைப்புக்கு ஆளாகும் நிலை வருகிறது. தட்பவெப்ப நிலையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தடாலடியாக எடுத்த உடனே மூச்சடைக்கும் விதமாகக் குளிக்காமல் நிதானமாகக் குளிக்க வேண்டும்" என்கிறார் சாய் சுரேந்தர்.