Published:Updated:

Doctor Vikatan: டிப்ரெஷனுக்காக எடுத்துக்கொள்ளும் மனநல மாத்திரைகளை நிறுத்தினால் பிரச்னை வருமா?

Depression (Representational Image)
News
Depression (Representational Image) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: டிப்ரெஷனுக்காக எடுத்துக்கொள்ளும் மனநல மாத்திரைகளை நிறுத்தினால் பிரச்னை வருமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Depression (Representational Image)
News
Depression (Representational Image) ( Pixabay )

டிப்ரெஷன் மற்றும் தூக்கமின்மைக்காக 5 வருடங்களுக்கு முன்பு மனநல மருத்துவரை சந்தித்து மருந்துகள் எடுக்க ஆரம்பித்தேன். இப்போது அவற்றை நிறுத்திவிட நினைக்கிறேன். மனநல மருந்துகளை அப்படியெல்லாம் திடீரென நிறுத்தக் கூடாது என்கிறார்கள். இதற்கு நான் அடிமையாகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?

- மதன் (விகடன் இணையத்திலிருந்து)

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

``டிப்ரெஷன், தூக்கமின்மை போன்ற மனநல பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிட வேண்டாம், `Take this medication regularly to get most benefit from it' என்ற அறிவிப்புடன் விற்கிறார்கள். கூடவே `Keep taking this medication even if you feel well' என்றும் சொல்கிறார்கள். இதனால் ஒரு பிரச்னைக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை வருடங்கள் கடந்தும் தொடர்வது பலருக்கும் பழக்கமாகவே மாறிவிடுகிறது.

ஒரு பிரச்னைக்காக, குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்கள். அந்த மருந்துகளைத் தயாரிக்கும் சில நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் மேற்குறிப்பிட்டபடி தகவல்களை வெளியிடுவதால், மக்கள் ஒருகட்டத்தில் குழம்பிப் போகிறார்கள்.

உங்களுக்கு உடல்நலமில்லாதபோதும் மனநலம் சரியில்லாதபோதும் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடலும் மனமும் குணமான பிறகு, மருந்துகளை நிறுத்திவிடுங்கள். இதுதான் சரியானது. ஆனால், `நீங்கள் ஒரு பிரச்னையிலிருந்து குணமான பிறகும், அதற்கான மருந்துகளை நிறுத்திவிடாதீர்கள், அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்' என்று பயமுறுத்துவதுதான் இன்று அதிகம் நடக்கிறது. பெரும்பாலான மனநல மருந்துகளுக்கு இப்படிச் சொல்லப்படுவதைப் பார்க்கலாம்.

உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளில் எதற்கு நீங்கள் அடிமையாவதாக நினைக்கிறீர்களோ அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிடுங்கள். அதாவது 15 நாள்களுக்கொரு முறை அதன் டோஸை பாதியாகக் குறைத்துக்கொண்டே வர வேண்டும். அடுத்த 15 நாள்களில் முழுமையாக நிறுத்திவிடலாம். இப்படி மருந்துகளை நிறுத்துவதால் எந்தப் பின்விளைவும் ஏற்படாது. இப்படியே ஒவ்வொரு மாத்திரையையும் படிப்படியாகக் குறைத்து, பிறகு நிறுத்திவிடுங்கள்.

Depression
Depression

அதே நேரத்தில் மனதுக்குத் தெம்பும் உடலுக்கு ஆற்றலையும் தரக்கூடிய சாதாரண வைட்டமின் மற்றும் மினரல் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கேட்டுப் பயன்படுத்தினாலே போதுமானது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?