Published:Updated:

`புகைப்பதால் ஆண்டுதோறும் 8 மில்லியன் இறப்புகள்’ - WHO அறிக்கை வெளியீடு

சிகரெட்
News
சிகரெட்

புகைபிடிப்பதால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

Published:Updated:

`புகைப்பதால் ஆண்டுதோறும் 8 மில்லியன் இறப்புகள்’ - WHO அறிக்கை வெளியீடு

புகைபிடிப்பதால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

சிகரெட்
News
சிகரெட்

உலகம் முழுவதும் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் சவால்களை அதிகரிக்கச் செய்வதாக உள்ளன.

உலக சுகாதார மையம் (WHO) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, புகைபிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் இறப்புகள் நிகழ்வதாகவும், புகைபிடிப்பவருக்கு அருகில் அந்தப் புகையை சுவாசிக்க நேர்தல் மற்றும் புகையிலை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகையை சுவாசிப்பதால் மட்டும் 1.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்
சிகரெட்

WHO-வின் இரண்டு முன்னாள் அதிகாரிகளான பேராசிரியர் ராபர்ட் பீகிள்ஹோல் மற்றும் பேராசிரியர் ரூத் போனிடா ஆகியோர் இணைந்து, உலக மருத்துவ இதழான லான்செட்டில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

அதில், வயது வந்தோருக்கான புகையிலை பயன்பாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 30% குறைக்கும் WHO-வின் இலக்கை அடைய, 30% நாடுகள் மட்டுமே ஆர்வம் தெரிவிப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உலகம் முழுவதும் புகைப்பவர்களின் எண்ணிக்கை எதிர்ப்பார்த்ததைவிட மிகவும் குறைந்து வருவதாகவும், 100 மில்லியனுக்கும் அதிகமான வயதுவந்த புகைபிடிப்பவர்களை கொண்ட இந்தியாவில் ஒரு முக்கிய சுகாதார பிரச்னை நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 4-ல் ஒருவர் புகையிலை உட்கொள்வதால் உலகின் இரண்டாவது அதிக புகையிலை பயன்படுத்தும் மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் உள்ளது இந்தியா.

சிகரெட்
சிகரெட்
Pixabay

புகைபிடித்தலுக்கு சிறந்த மாற்று வழிகளை அணுகுவதில் இந்தியாவும் நுணுக்கமான, முற்போக்கான மற்றும் ஆதார அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இந்த மாற்றம் புகைபிடிக்கும் பல மில்லியன் நபர்களுக்குப் பயனளிக்கும்.