Published:Updated:

`இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் கொரோனா’ - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோனா
News
கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Published:Updated:

`இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் கொரோனா’ - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா
News
கொரோனா

உலகளவில் கொரோனா வைரஸ் இன்னும் கொந்தளிப்புடன் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 28 நாள்களில் உலகம் முழுவதும் 23,000 -க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 3 மில்லியன் புதிய பாசிடிவ் கணக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே கோவிட் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதிலேயே அதிக இறப்புகளும் மில்லியன் கணக்கான நோய்வாய்ப்படுபவர்களும் உள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை இயக்குநர் மைக்கேல் ரியான் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தொடர்ந்து பேசிய அவர், ``சுவாசத்தொற்று வைரஸ்கள் எப்போதும் பேண்டெமிக்கில் (Pandemic) இருந்து எண்டெமிக் (Endemic) நிலைக்குச் செல்வதில்லை. மாறாக இவை பருவகால தொற்றுநோய்களாக உருவெடுத்து, குறைந்த நிலையில் செயல்பாட்டிலேயே இருக்கும். நாம் எப்போதும் தொற்றுநோயின் சுவிட்சை ஆஃப் செய்ய முடியாது. கோவிட் என்றும் மறையாது. இது இன்ஃப்ளுயென்ஸாவைப் போலவே மக்களுக்கு குறிப்பிடத்தக்க சுவாசநோயை ஏற்படுத்தும். சில நாடுகளில் கோவிட் தடுப்பூசி போடாமல் அதிக பாதிப்புக்குள்ளான மக்கள் இன்னும் அதிகமாக உள்ளனர்” என மைக்கேல் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு ஒவ்வொரு மூன்றும் மாதங்களுக்கு ஒருமுறையும் கூடுகிறது. அடுத்த கூட்டம் மே மாதத் தொடக்கத்தில் கூடவுள்ளது. அதன் முந்தையக் கூட்டங்களைப் போலவே இந்தக் கூட்டமும் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும்.

மைக்கேல் ரியான்
மைக்கேல் ரியான்

இதேபோல் ஜனவரி 30, 2020 அன்று கொரோனாவை PHEIC -ஆக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. அப்போது சீனாவில் மட்டும் 100-க்கும் குறைவான நோயாளிகள் இருந்தனர். சீனாவை தாண்டி வேறு எங்கும் இறப்புகளும் பதிவாகவில்லை. மார்ச் 2020-ல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம், கொரோனாவை ஒரு தொற்றுநோய் என அறிவித்த பிறகே அனைத்து நாடுகளும் தடுப்புப் பணிகளில் இறங்கின.