Published:Updated:

Doctor Vikatan: அசைவம் சாப்பிட்டால் உடலில் அரிப்பு, தடிப்பு; காரணம் என்ன?

Hands
News
Hands ( Photo by Luis Quintero on Unsplash )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: அசைவம் சாப்பிட்டால் உடலில் அரிப்பு, தடிப்பு; காரணம் என்ன?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Hands
News
Hands ( Photo by Luis Quintero on Unsplash )

17 வருடங்களாக அசைவ உணவு சாப்பிடும்போதெல்லாம் எனக்கு சருமத்தில் அரிப்பு ஏற்படும். பிறகு, அது தடிப்புத்தடிப்பாக மாறிவிடும். இப்போதெல்லாம் அசைவம் சாப்பிடவில்லை என்றாலும் இந்தப் பிரச்னை வருகிறது. எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்துவிட்டேன். மாத்திரை எடுக்கவில்லை என்றால் உடனே இந்தப் பிரச்னை வந்துவிடும். இது என்ன பிரச்னை? இதற்கு என்ன தீர்வு?

- தீபா ராஜ் (விகடன் இணையத்திலிருந்து)

செல்வி ராஜேந்திரன்
செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளைவைத்துப் பார்க்கும்போது இது `அர்டிகேரியா' (urticaria) என்ற பிரச்னையாக இருக்கலாம் என்று தெரிகிறது. 17 வருடங்களாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, இது தீவிர நிலை அர்டிகேரியாவாக (Chronic urticaria ) இருக்கும். இது பெரும்பாலும் உணவு அலர்ஜியால் வரும். பொதுவாக, கடல் உணவுகள் சாப்பிடுவதால் வரும். அதிலுள்ள பாதரசம் காரணமாக இருக்கலாம்.

வெளியிடங்களில் அசைவ உணவுகள் மற்றும் சைவ உணவுகள் சாப்பிடும்போது அவற்றில் சிவப்பு நிறம் சேர்ப்பார்கள். அதனாலும் சருமத்தில் தடிப்புகள் உருவாகலாம். வயிற்றில் அசிடிட்டி பிரச்னை இருந்தாலோ, பூச்சிகள் இருந்தாலோகூட இப்படி வரலாம். எனவே, டீவேர்மிங் (Deworming) எனப்படும் பூச்சிநீக்க சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

Spicy Food (Representational Image)
Spicy Food (Representational Image)
Pixabay

செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட க்ரீம், கேக், குளிர்பானங்கள், ஜாம், ஊறுகாய் என எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டியது அவசியம். சரும மருத்துவரை நேரில் அணுகுங்கள். உங்களுக்கு ரத்தப்பரிசோதனை தேவைப்படும். ஈஸ்னோபில் எண்ணிக்கை (eosinophil count) அதிகமாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். சரியாக அணுகினால் இதற்கு நல்ல சிகிச்சைகள் உள்ளன. கவலை வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?