Published:Updated:

Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில் ஹீமோகுளோபின் டெஸ்ட் ஏன் எடுக்கக்கூடாது?

Napkins
News
Napkins ( Photo by Karolina Grabowska from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில் ஹீமோகுளோபின் டெஸ்ட் ஏன் எடுக்கக்கூடாது?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Napkins
News
Napkins ( Photo by Karolina Grabowska from Pexels )

நான் வருடம் ஒருமுறை ஹீமோகுளோபின் அளவு சரிபார்ப்பது வழக்கம். இந்த முறை பீரியட்ஸின் இரண்டாவது நாளில் டெஸ்ட் எடுக்கச் சென்றேன். பீரியட்ஸின்போது டெஸ்ட் எடுக்கக்கூடாது என திருப்பி அனுப்பப்பட்டேன். இதற்கு என்ன காரணம்?

- நிரஞ்சனா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அம்ரிதா சிங்
மருத்துவர் அம்ரிதா சிங்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நோய்க்குறியியல் மருத்துவர் அம்ரிதா சிங்.

``பீரியட்ஸ் நாள்களில் உடலால் உருவாக்க முடிவதைவிடவும் அதிக அளவிலான ரத்தச் சிவப்பணுக்களை பெண்கள் இழப்பார்கள். இதன் விளைவாக அவர்களது உடலில் இரும்புச்சத்து எண்ணிக்கை குறையும். ஹீமோகுளோபின் என்பது ஒருவகையான புரதம். அது எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாக்கப்படுவது. ரத்தச் சிவப்பணுக்களின் ஒரு பகுதி அது.

நுரையீரலுக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதில் ஹீமோகுளோபினின் பங்கு மிக முக்கியமானது. பீரியட்ஸ் நாள்களில் பெண்கள் அதிக அளவிலான ரத்தச் சிவப்பணுக்களை இழப்பதால், அது ஹீமோகுளோபின் குறையவும் காரணமாக அமையும்.

Blood Samples (Representational Image)
Blood Samples (Representational Image)
Image by fernando zhiminaicela from Pixabay

அந்த நாள்களில் ரத்தப் பரிசோதனை செய்தால் ஹீமோகுளோபின் அளவு மிகக் குறைவாக இருப்பதாகவே காட்டும். அதனால்தான் அந்த நாள்களில் ஹீமோகுளோபின் சோதனை செய்துபார்க்க வேண்டாம் எனப் பெண்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?