Published:Updated:

Doctor Vikatan: CT ஸ்கேனில் தெரிந்த ரத்தக்கட்டி, MRI பரிசோதனையில் காணாமல் போகுமா?

CT Scan
News
CT Scan ( Photo by MART PRODUCTION from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: CT ஸ்கேனில் தெரிந்த ரத்தக்கட்டி, MRI பரிசோதனையில் காணாமல் போகுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

CT Scan
News
CT Scan ( Photo by MART PRODUCTION from Pexels )

என் வயது 55. கடந்த மாதம் எனக்கு திடீரென தலைச்சுற்றலும் வாந்தியும் வந்தது. அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள். பிபி அளவு 160/90 என இருந்தது. சிடி ஸ்கேன் செய்ததில் மூளையில் ரத்தக்கட்டி இருப்பதாகத் தெரிந்தது. ஆனால், எனக்கு வேறு எந்த அறிகுறியும் இல்லை. 3 மணி நேரம் கழித்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தார்கள். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று வந்தது. `உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை' என்று சொல்லி அனுப்பினார்கள் மருத்துவர்கள். மூன்றே மணி நேரத்தில் ரத்தக்கட்டி காணாமல் போகுமா? எனக்கு வேறு ஏதேனும் பிரச்னை இருக்க வாய்ப்பிருக்கிறதா?

- சேகர் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

``உங்களுக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன், கபாலக்குழி எனப்படும் `க்ரேனியல் கேவிட்டி' பகுதியில் ஏதேனும் ப்ளீடிங் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கானதாகவே இருக்கும். அது ரத்தக்கட்டைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படுவதில்லை. சாதாரண அஜீரணத்தில் தொடங்கி, ரத்த அழுத்த மாறுபாடு வரை தலைச்சுற்றலும் வாந்தியும் ஏற்பட ஏராளமான காரணங்கள் இருக்கக்கூடும். உங்கள் விஷயத்தில் சி.டி ஸ்கேன் செய்த அடுத்த 3 மணி நேரத்தில் எம்.ஆர்.ஐ-யும் எடுக்கப்பட்டிருக்கிறது. எம்.ஆர்.ஐ என்பது உங்களுடைய பிரச்னைகளைத் துல்லியமாகக் காட்டும்.

அதில் ஒன்றுமில்லை என வந்துவிட்ட பிறகு நீங்கள் பயப்படத் தேவையில்லை. 3 மணி நேரத்தில் ரத்தக்கட்டு காணாமல் போகுமா என்று கேட்டிருக்கிறீர்கள். அது ரத்தக்கட்டாகவே இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் பதில்.

Brain - Representational Image
Brain - Representational Image
Image by Gerd Altmann from Pixabay

எனவே, இதை நினைத்து நீங்கள் அநாவசியமாகக் குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு ரொம்பவும் பயமாக இருந்தால் நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏதும் இருக்கிறதா என்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி இது பயப்படக்கூடிய விஷயமே இல்லை."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?