Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பத்தடை மாத்திரைகளால் உடல் எடை அதிகரிக்குமா?

Tablets (Representational Image)
News
Tablets (Representational Image) ( Photo by Towfiqu barbhuiya on Unsplas )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பத்தடை மாத்திரைகளால் உடல் எடை அதிகரிக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Tablets (Representational Image)
News
Tablets (Representational Image) ( Photo by Towfiqu barbhuiya on Unsplas )

என் வயது 28. ஒரு குழந்தை இருக்கிறது. கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுத்து வருகிறேன். இந்த மாத்திரைகள் எடையை அதிகரிக்குமா?

- சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``கருத்தடை மாத்திரைகள் எடுக்கும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை எடை கூடினாலும், அது 0.3 கிலோ, 0.4 கிலோ என்ற அளவில்தான் கூடும். அதுவும் நீர் கோப்பதன் காரணமாக இருக்கலாம்.

கர்ப்பத்தடை மாத்திரைகளில், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் என இரண்டு ஹார்மோன்கள் இருக்கும்.

முதன்முதலில் கர்ப்பத்தடை மாத்திரை அறிமுகப்படுத்தப் பட்டபோது, அதில் மிக அதிக அளவு ஈஸ்ட்ரோஜென், அதாவது, 150 மைக்ரோகிராம் அளவு இருந்தது. ஆனால், இப்போது புழக்கத்தில் இருக்கும் மாத்திரைகளில் 50 மைக்ரோ கிராமுக்கும் குறைவான அளவு ஈஸ்ட்ரோஜென்தான் இருக்கிறது. பெரும்பாலும் 20, 30 மைக்ரோகிராம் அளவு ஈஸ்ட்ரோஜென் உள்ள மாத்திரைகள்தான் பரிந்துரைக்கப்படுவதால் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை.

ஒரு சிலருக்கு உடலில் நீர்கோக்கும் பிரச்னை இருக்கும் என்பதால் லேசான எடை அதிகரிப்பு தெரியும். அதுவும் மாத்திரைகளை நிறுத்தியதும் எடை குறைந்ததுபோல உணர்வார்கள். இதையும் மீறி எடை கூடினால் அதற்கு ஹார்மோன் பிரச்னை உள்ளிட்ட வேறு பாதிப்புகளோ, தைராய்டு பாதிப்போ, பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகளோ இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.

பிசிஓடி பிரச்னைக்கும் சில நேரங்களில் கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். ஆனால், அவற்றில் ஈஸ்ட்ரோஜென் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். தவிர, நீர் கோக்காமலிருக்கும்படியான ரசாயனங்கள் அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, கர்ப்பத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான்.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Photo by Trey Gibson on Unsplash

ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் மாத்திரையில் அப்படி எடை அதிகரிப்பை உணர்ந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசி வேறு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?