Published:Updated:

Doctor Vikatan: வறுத்த வேர்க்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

Groundnut
News
Groundnut ( Photo by Lucas Pezeta from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: வறுத்த வேர்க்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Groundnut
News
Groundnut ( Photo by Lucas Pezeta from Pexels )

எனக்கு தினமும் வேலைவிட்டு வரும்போது வறுத்த வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். வறுத்ததுதானே... ஆரோக்கியமானதுதான் என்று நினைத்துச் சாப்பிடுகிறேன். தினமும் வேர்க்கடலை சாப்பிடலாமா, வேர்க்கடலை சாப்பிட்டால் எடை கூடுமா?

- கிருபாகரன் (விகடன் இணையத்திலிருந்து)

கற்பகம்
கற்பகம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்.

``புரதம் நிறைந்த உணவுகளில் முக்கியமானது வேர்க்கடலை என்பதில் சந்தேகமில்லை. எல்லோராலும் விலை உயர்ந்த நட்ஸை வாங்கிச் சாப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் வேர்க்கடலையைப் பயன்படுத்தலாம். வேர்க்கடலையை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். சிலர் சட்னியாக அரைத்துச் சாப்பிடுவார்கள். சிலர் வேகவைத்துச் சாப்பிடுவார்கள். வறுத்த வேர்க்கடலை பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது. ஆனால், வறுத்த வேர்க்கடலையில் உப்பு சேர்க்கப்படுவதால் தினமும் அதைச் சாப்பிடுவதால் நம் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கும். அந்த உப்பானது ஹைப்பர் டென்ஷன் எனப்படும் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

அவர்கள் மட்டுமன்றி சர்க்கரைநோய் உள்ளவர்களும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும்கூட தவிர்த்து விடுவது சிறந்தது. வாரத்துக்கொரு முறை ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிடலாம். அதை சட்னியாகவோ, பேல்பூரியிலோ, கூட்டிலோ சேர்த்துச் சாப்பிடுவது ஓ.கே. எண்ணெய் சேர்க்காமல் வறுக்கப்படுவதுதானே...

அப்போது அது ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் பலரும் தினமும் மாலை நேர நொறுக்குத்தீனியாக வறுத்த வேர்க்கடலையைச் சாப்பிடுகிறார்கள். அது வயிற்று உப்புசம், மூட்டு வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதுதான் காரணம் என்பதே தெரியாமல் இந்தப் பிரச்னைகளுக்கு தேவையில்லாமல் ஒரு பக்கம் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

வேர்க்கடலை
வேர்க்கடலை

தவிர தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் எடையும் அதிகரிக்கும். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடக்கூடியது என்பதால் அதுவும் வேர்க்கடலை பிரியர்களுக்கு பிரச்னையையே ஏற்படுத்தும். எனவே, வாரம் ஒரு முறை கைப்பிடி அளவு மட்டுமே சாப்பிடுவதில் பிரச்னை இல்லை."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?