Published:Updated:

Doctor Vikatan: பல வருடங்களாக எடுத்துக்கொள்ளும் வலிப்பு மருந்துகளால் கிட்னி பாதிக்கப்படுமா?

Tablets (Representational Image)
News
Tablets (Representational Image) ( Image by Michal Jarmoluk from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: பல வருடங்களாக எடுத்துக்கொள்ளும் வலிப்பு மருந்துகளால் கிட்னி பாதிக்கப்படுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Tablets (Representational Image)
News
Tablets (Representational Image) ( Image by Michal Jarmoluk from Pixabay )

நான் 7 வயது முதல் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு இப்போது 33 வயதாகிறது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஆனாலும், எனக்குள் பல வருடங்களாக ஒரு கேள்வி இருக்கிறது. இத்தனை வருடங்களாக வலிப்புக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் எனக்கு பிற்காலத்தில் சிறுநீரக பிரச்னை ஏற்படுமா?

- ரியாஸ் கான் (விகடன் இணையத்திலிருந்து)

லட்சுமி நாராயணன் கண்ணன்
லட்சுமி நாராயணன் கண்ணன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் மற்றும் வலிப்புநோய் மருத்துவர் லட்சுமி நாராயணன் கண்ணன்.

``வலிப்புநோய்க்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. வலிப்பு மருந்துகள் எடுப்பதாலேயே சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்ற தவறான கருத்து இருக்கிறது. ஆனால், அது குறித்து பயப்படத் தேவையே இல்லை.

வலிப்பு மருந்துகளால் எந்த உறுப்புக்கும் பாதிப்பு வராது. குறிப்பாக, எந்த மருந்தும் சிறுநீரகத்தைத் தாக்கும் அபாயம் கொண்டதும் அல்ல. அதனால் பயமின்றி நீங்கள் சிகிச்சையைத் தொடரலாம்.

அரிதாக மரபியல் பிரச்னைகள் உள்ள சிலருக்கு ஒருசில மருந்துகளால் பாதிப்புகள் வரலாம். அத்தகைய மருந்துகளை சோடியம் வால்ப்ரேட் (Sodium valproate) என்று சொல்வோம். குறிப்பிட்ட இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு மரபியல் பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் கல்லீரல் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், அது அரிதானது. எல்லோருக்கும் ஏற்படுவதில்லை.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Pixabay

மற்றபடி பல வருடங்களாக வலிப்பு மருந்துகள் உட்கொள்வதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுமோ என்று பயப்படத் தேவையின்றி மருந்துகளை உட்கொள்ளவும்.

மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனையோடு சிகிச்சைகளைப் பின்பற்றுவதுதான் சரி. அவர்கள் உங்கள் உடல்நலன் பற்றி விசாரிப்பார்கள். தேவைப்பட்டால் ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?