ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

சரும வறட்சி, உதடுகள் வெடிப்பு, தோல் உரிதல், பொடுகு... குளிர்கால பிரச்னைகளும், வீட்டு சிகிச்சைகளும்!

குளிர்கால பிரச்னைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
குளிர்கால பிரச்னைகள்

வாழைப்பழத்துடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து குழைத்து, முகத்தில் பேக் போல தடவி, பத்து நிமி டங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

குளிர்கால சரும பிரச்னைகளுக்கு வீட்டிலேயே இருக்கும் பொருள்களை வைத்து தீர்வுகாணும் வழிகளைச் சொல் கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக் கலை ஆலோசகர் வினோத் பாமா.

வினோத் பாமா
வினோத் பாமா

* பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன், பீட்ரூட் ஜூஸ் - ஒரு டேபிள் ஸ்பூன், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன் மூன்றையும் ஒன் றாகக் கலந்து உதடுகளில் தடவவும். ஐந்து நிமிடங் களுக்குப் பிறகு லேசாக மசாஜ் செய்து துடைத்து எடுக்கவும். தினமும் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால், உதடுகள் மென்மையாக மாறும்.

* தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், விளக் கெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கற்றாழை ஜெல் - ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, மூன்றையும் நன்றாகக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் மைல்டான ஷாம்பூ பயன்படுத்தி கூந்தலை அலசினால் குளிர்காலத்தில் வறட்சியால் ஏற்படும் முடி உதிர்வு கட்டுப்படும்.

சரும வறட்சி, உதடுகள் வெடிப்பு, தோல் உரிதல், பொடுகு... குளிர்கால பிரச்னைகளும், வீட்டு சிகிச்சைகளும்!

* கற்றாழை ஜெல் - ஒரு டேபிள்ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, வைட்டமின் ஈ மாத்திரை - ஒன்று (கேப்சூலைப் பிரித்து, அதில் உள்ள எண்ணெயை மட்டும் பயன்படுத்த வேண்டும்) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி, கைகளால் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் சருமம் பளபளக்கும்.

* அரிசி ஊறவைத்த தண்ணீர் - 3 டேபிள்ஸ்பூன், கற்றாழை ஜெல் - 3 டேபிள்ஸ்பூன், வைட்டமின் ஈ கேப்சூல் - ஒன்று (கேப்சூலைப் பிரித்து, அதில் உள்ள எண்ணெயை மட்டும் பயன்படுத்த வேண்டும்), மஞ்சள் தூள் - சிறிதளவு, கிளிசரின் - ஒரு டேபிள்ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சருமத்தில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ, சருமம் மின்னும்.

* வாழைப்பழத்துடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து குழைத்து, முகத்தில் பேக் போல தடவி, பத்து நிமி டங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், குளிர்காலத்தில் சரும வறட்சி, தோல் உரிதல் போன்ற பிரச்னைகள் காணாமல் போகும்.