Published:Updated:

“சின்ன முயற்சியா ஆரம்பிச்சு இப்போ 2,000 தாய்மார்கள் இருக்காங்க!’’ - தாய்ப்பால் தானத்தில் நெகிழ்த்தும் பெண்கள்

“சின்ன முயற்சியா ஆரம்பிச்சு இப்போ 2,000 தாய்மார்கள் இருக்காங்க!’’ - தாய்ப்பால் தானத்தில் நெகிழ்த்தும் பெண்கள்
News
“சின்ன முயற்சியா ஆரம்பிச்சு இப்போ 2,000 தாய்மார்கள் இருக்காங்க!’’ - தாய்ப்பால் தானத்தில் நெகிழ்த்தும் பெண்கள்

“சின்ன முயற்சியா ஆரம்பிச்சு இப்போ 2,000 தாய்மார்கள் இருக்காங்க!’’ - தாய்ப்பால் தானத்தில் நெகிழ்த்தும் பெண்கள்

தாய்ப்பால் குறித்துச் சொல்வதற்கு ஒரு தாயைவிட சிறந்த நிபுணர் யார் இருக்க முடியும்? அப்படி சில தாய்கள் சேர்ந்து ஆரம்பித்த ஒரு குழு, இன்று 2,000 தாய்மார்களுடன் ஓர் இயக்கம்போல வளர்ந்து அசத்திவருகிறது. அதுதான், கோவைப் பெற்றோர்கள் குழு (Coimbatore Parenting Network). தாய்ப்பால்குறித்த பல்வேறு சந்தேகங்கள், ஆலோசனைகளை அளிக்கும் அற்புதமான சேவையை செய்துவருகிறது இந்த அமைப்பு. 

தனியார் கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் ஐஷ்வர்யா, “இந்தச் சமூகத்துக்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் 2014-ம் வருடம், மூணு பேருடன் இதை ஆரம்பித்தோம். முதலில் தாய்ப்பால் கொடுப்பதுகுறித்து விழிப்பு உணர்வு செய்துவந்தோம். எங்களது குழுவில் உள்ள ஒருவரது வீட்டில் மாதம்தோறும் சந்திப்போம். சமூக வலைதளங்களில் கிடைத்த ஆதரவின் மூலம், பல தாய்மார்கள் இணைந்தார்கள். நம் மக்களுக்கு தாய்ப்பால்குறித்து நிறைய மூடநம்பிக்கை இருக்கு. எனக்கு குழந்தைப் பிறந்தப்ப 'உங்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும் அளவு குறைவா இருக்கு'னு சொல்லிட்டாங்க. டின் பவுடர்தான் கொடுத்துட்டிருந்தேன். இந்த அமைப்பை ஆரம்பிச்சு பலரின் அறிமுகமும் ஆலோசனையும் கிடைச்ச பிறகுதான் நிறைய விஷயங்களைத்தெரிஞ்சுக்கிட்டு ஃபாலோ பண்ணினேன். ஒரு வாரத்திலேயே எனக்கு தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகமாச்சு'' என்கிறார். 

இந்தக் குழுவைச் சேர்ந்த சரண்யா “ஒருமுறை என் உறவுப் பெண் ஒருவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் சிசேரியனில் குழந்தைப் பிறந்துச்சு. அவங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியலை. அது தெரிஞ்சதும், அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் தேவைனு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டு சேகரிச்சோம். அதை மருத்துவமனைக்கு கொடுத்தப்ப, அந்தக் குழந்தைக்கு கொடுத்ததுபோக மீதம் இருந்துச்சு. அதை ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா என்று மருத்துவமனையில் கேட்டார்கள். அப்போதான், கோவை அரசு மருத்துவமனையில், தாய்ப்பால் வங்கி என்று ஒன்று இருப்பதே தெரியவந்துச்சு. அப்போது முதல் மாத மாதம் பல் தாய்மார்களை இணைச்சு தாய்ப்பால் தானம் செஞ்சுட்டிருக்கோம்” என்கிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“ஒரு குழந்தை தானாகப் பால் குடிக்கிறதை நிறுத்தும் வரை, அதாவது ஐந்து வயசு வரை தாய்ப்பால் கொடுக்கலாம். என் குழந்தைக்கு மூணு வயசு ஆகுது. இன்று வரை பால் கொடுத்துட்டிருக்கேன். அதிக காலம் தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அப்படியே ஒரு நோய் வந்தாலும் சீக்கிரம் குணமாகிவிடும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல, அந்தத் தாய்க்கும் மிகவும் நல்லது. உடம்பில் உள்ள கலோரிஸ் குறைஞ்சு, ஃபிட்டா, அழகா இருப்பீங்க. இதையெல்லாம் வருங்கால தாய்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் செயல்படறோம்'' என்கிறார் ஐஷ்வர்யா. 

தனியார் மருத்துவமனை ஒன்றில், பாலுட்டல் ஆலோசகராக (Lactation educator counselor) பணிபுரியும் ஸ்வாதியும் இந்தக் குழுவில் இருக்கிறார். ''ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு நிபுணர் எங்கள் குழுவின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுவார். அப்போது, பாலூட்டுதல் குறித்த பல்வேறு சந்தேகங்கள், பிரச்னைகளுக்குத் தெளிவான விளக்கங்களை அளிப்பார். குழந்தை வளர்ப்பு குறித்தும் பல்வேறு ஆலோசனை அளிக்கப்படும். பேபி வியரிங் கரியர்ஸ் (தாய் உடையுடன், குழந்தை இணைந்திருக்கும் பேக் போன்ற ஒன்று) தாயுடனேயே இருப்பதால், நல்ல பிணைப்பு கிடைக்கும். தாய்ப்பால் உற்பத்தியும் அதிகரிக்கும். ஒரு நாளைக்கு எட்டு தடவை கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக 20 தடவை கொடுக்கலாம்” என்றார்.