Published:Updated:

உடல் முழுவதும் எலும்புகள் முளைக்கும் விசித்திர நோய்..! மீள முடியாமல் துடிக்கும் பெண்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்துள்ள கேத்திரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகா. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு டூவீலர் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவப் பரிசோதனை செய்தபோது தெரிய வந்த நோய்தான் எலும்பு வளர்ச்சி நோய். இந்த எலும்பு வளர்ச்சி நோயைக் குணப்படுத்த முடியாமல் உடல் அளவில் தாங்க முடியாத கொடுமையை அனுபவித்து வரும் கனகாவை, அவர் பார்த்த மருத்துவ உலகம் இதற்குத் தீர்வே இல்லை என்று கைவிட்டுள்ளது. 

உடல் முழுவதும் எலும்புகள் முளைக்கும் விசித்திர நோய்..! மீள முடியாமல் துடிக்கும் பெண்

இதுகுறித்து கனகாவிடம் பேசினோம், 'எல்லோரையும் போல ஓடி ஆடி விளையாடித் துள்ளி குதித்து இளமைப் பருவத்தை கடந்து திருமணம் செய்து கொண்டவள்தான் நானும். ஆனால் விதி என் வாழ்க்கையில் இப்படியொரு விளையாட்டை ஆரம்பிக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு டூவீலர் மோதி விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனைக்குச் சென்றேன். அப்போது என்னை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். என் உடம்பில் எலும்பு இணைப்பு பகுதிகள் எங்கு எங்கெல்லாம் இருக்கின்றதோ. அங்கு எல்லாம் எலும்புகள் முளைக்க ஆரம்பிக்கின்றது என்று என்னைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சொன்ன தகவல். 

அப்போது நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கொஞ்ச நாளில் என்னால் உட்கார்ந்தால் எழ முடியாது. எழுந்தால் நடக்க முடியாது யாராவது கூப்பிட்டால் கூட உடனே திரும்பி கூடப் பார்க்க முடியாது. கைவிரல், கால் விரல், கால் மூட்டு, இடுப்பு, முதுகெழும்பு கழுத்து என எல்ல இடங்களிலும் காளான் மொட்டு போல எலும்புகள் வளர ஆரம்பித்துவிட்டது. தற்போது கால் மூட்டில் மட்டும் 200 எலும்புகள் வளர்ந்துள்ளது. கை விரல்கள் எல்லாம் கோணல் மானலாக வளைந்துவிட்டது. இதனால் தாங்க முடியாத வலியை நாள்தோறும் அனுபவித்து வருகிறேன். 

இப்போது என் மகன் வெற்றிவேல்தான் என்னைக் கவனித்து மருத்துவம் பார்த்து வருகின்றான். எங்கள் சக்திக்கு உட்பட்டு எத்தனையோ மருத்துவமனையை ஏறி இறங்கிப் பார்த்துவிட்டோம் எல்லா மருத்துவர்களும் என்னை கைவிட்டு விட்டனர். நாட்டு மருந்திலாவது சரியாகுமா? என்று சாப்பிட்டு பார்த்தேன்> அதிலும் எனக்குத் தீர்வு கிடைக்கவில்லை' என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் கனகா.