Published:Updated:

`` ``மெனோபாஸ் மன அழுத்தம் என்னைத் தற்கொலைவரை கொண்டு சென்றது!'' - நடிகை நளினி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`` ``மெனோபாஸ் மன அழுத்தம் என்னைத் தற்கொலைவரை கொண்டு சென்றது!'' - நடிகை நளினி
`` ``மெனோபாஸ் மன அழுத்தம் என்னைத் தற்கொலைவரை கொண்டு சென்றது!'' - நடிகை நளினி

``ஒரு செகண்ட் மனசு தடுமாறி தற்கொலை கடிதம் எழுதி வைச்சுட்டு, என்ன செஞ்சுக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். கரெக்டா பிள்ளைகள் அந்த நேரத்துக்கு வந்துட்டாங்க''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ல்லாப் பெண்களும் வாழ்க்கையில் சந்தித்தே ஆக வேண்டிய ஓர் ஆரோக்கிய பிரச்னை, மெனோபாஸ். பெண்ணின் உடலையும் மனதையும் ஆட்டுவிக்கிற அவஸ்தை அது. தன்னுடைய மெனோபாஸ் வருடங்களின்போது, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதியது வரை சென்று, பிறகு அதிலிருந்து மீண்டு வந்தவர் நடிகை நளினி. அந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொண்டார். 


``நான் `கிருஷ்ணதாசி' சீரியல் வழியா, நடிக்கிறதுக்கு ரீ என்ட்ரி ஆனேன் இல்லையா, அப்பவே மெனோபாஸ் பிரச்னையோடுதான் வந்தேன். அப்ப எனக்கு 40 வயசு இருக்கும். `மேடம் இன்னைக்கு நைட் ஷுட் இருக்கு'ன்னு  உதவி இயக்குநர்கள் வந்து சொன்னா, `நைட்ல எல்லாம் நடிக்க மாட்டேன்'னு சொல்லிட்டு தனியா போய் உட்கார்ந்துட்டு அழுவேன். `அதான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டியே, அப்புறம் ஏன் அழுதே?'ன்னு கேட்டீங்கன்னா, எனக்குப் பதில் தெரியாது. ஷூட்டிங் ஸ்பாட்ல இப்படின்னா, வீட்லேயும் எப்ப அழுவேன், எப்ப சிரிப்பேன், எப்ப பிள்ளைகள் மேலே எரிஞ்சு விழுவேன்னு எனக்கே தெரியாது. பிள்ளைகள் ஹோம்வொர்க் செய்யலைன்னாகூட பெருசா கத்த ஆரம்பிச்சிடுவேன். இவ்வளவு ஏன், `அம்மா இன்னிக்கு என்ன சமையல்'னு பிள்ளைகள் யதார்த்தமா கேட்டால்கூட, `நான் என்ன உங்களுக்குச் சமையல்காரியா, எப்பப்பாரு இன்னிக்கு என்ன சமையல்னு கேட்கறீங்க'ன்னு சண்டை போட்டிருக்கேன்'' என்றவர், அந்த நாள்களில் தான் பட்ட உடல் உபாதைகளைப் பற்றிச் சொன்னார். 

``திடீர்னு இதயம் படபடன்னு அடிச்சுக்க ஆரம்பிச்சிடும். ஏசி ரூம்லதான் தூங்கிட்டிருப்பேன். ஆனா, நடு ராத்திரியில உடம்பு வேர்த்துக்கொட்ட ஆரம்பிச்சிடும். எழுந்திரிச்சு ஃபேனையும் போட்டுட்டு படுப்பேன். அப்படியும் வியர்வை அடங்கவே அடங்காது. சில நேரங்கள்ல உடம்போட சில பகுதிகள்ல மட்டும் நெருப்பு வைச்ச மாதிரி எரியும்; சில நேரங்கள்ல உடம்பு சிலுசிலுன்னு ஆயிடும். உடம்பு எப்ப, எப்படி இருக்கும்னே தெரியாததால எப்பவும் பதற்றமாவே இருப்பேன்.

மெனோபாஸ் நேரத்து அதிக ரத்தப்போக்கு, உடம்பெல்லாம் தாங்க முடியாத வலி, சோர்வுன்னு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். என்னோட இந்தப் பிரச்னைக்காக அலோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகானு எல்லா சிகிச்சைகளையும் எடுத்திருக்கேன். எனக்கு இருந்த அதிகமான ரத்தப்போக்கை பார்த்துட்டு டாக்டர்களே `கருப்பையை எடுத்துடுங்களேன்'னு சொல்லியிருக்காங்க. பயத்துல அந்த ஆபரேஷனுக்கு நான் ஒத்துக்கவே இல்லை. ஒரு நாள் சாயங்கால நேரம். உடம்புல அங்கங்க சூடு பரவுது; இதயம் தடதடன்னு அடிச்சிக்க ஆரம்பிச்சுது. வீட்ல பிள்ளைகளும் இல்லை. ஒரு செகண்ட் மனசு தடுமாறி தற்கொலை கடிதம் எழுதி வைச்சுட்டு, என்ன செஞ்சுக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.  கரெக்டா பிள்ளைகள் அந்த நேரத்துக்கு வந்துட்டாங்க. நான் அழுதுக்கிட்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்துட்டு, என் கையில் இருந்த லெட்டரை வாங்கி பிரிச்சுப் படிச்சுட்டாங்க. பாவம், பிள்ளைங்க பயந்து போயிடுச்சுங்க. 

`அம்மா, நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்கிறோம். எங்களை விட்டுட்டுப் போயிடாதேம்மா'ன்னு என்னைக் கட்டிக்கிட்டு என் பிள்ளைங்க அழுத நொடி, எப்பவும் மறக்காது. எவ்ளோ பெரிய தப்பு பண்ண இருந்தோம்னு அப்பதான் எனக்குப் புரிஞ்சுது. அன்னியோட, தற்கொலை மாதிரியான பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் இனிமே செய்யக் கூடாதுனு முடிவெடுத்தேன். மெனோபாஸா, நானானு இனிமே ஒரு கை பார்த்துடலாம்னு மனசை தைரியப்படுத்திக்கிட்டு அந்த லெட்டரைக் கிழிச்சுப் போட்டுட்டேன்'' என்று சிரிக்கிற நளினியை, அதன்பிறகு பிள்ளைகள் அம்மாவாக மாறித் தாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  `அம்மா மெனோபாஸோட ஆரம்பகட்டத்துல இருக்காங்க. அதனாலதான், இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்க'ன்னு என் பிள்ளைகள் உணர்ந்தாங்க. இத்தனைக்கும் அப்ப அவங்களுக்கு 16 வயசுதான். மெடிக்கல் சம்பந்தமான புத்தகங்களை படிச்சுட்டு வந்து, `இதுக்குப் பேரு மெனோபாஸ். இப்ப நீ மனசை சந்தோஷமா வைச்சிக்கணும். காமெடி படம் பாரும்மா'ன்னு சொல்லுவாங்க. `உங்களுக்காகச் சமைக்கிறதுக்கு நான் என்ன வேலைக்காரியா'ன்னு நான் சண்டை போட்டா, `மம்மி, நீ சமைச்சா சூப்பரா இருக்கும். நீ ஒரு தயிர்சாதம் கொடுத்தாகூட தேவாமிர்தமா இருக்குமே'ன்னு என் கோபத்தை அப்படியே கூலாக்கிடுவாங்க. `அளவா சம்பாதிச்சா போதும்மா. எங்களுக்காக நிறைய சம்பாதிக்கணும்னு ஹார்டு வொர்க் செய்யாதேம்மா'ன்னு சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் பொண்ணுங்களால கணவர், குழந்தைங்க, வேலை, மாமியார் வீடுன்னு எல்லோரையும், எல்லாப் பிரச்னைகளையும் சமாளிச்சுட முடியும். ஆனா, இந்த மெனோபாஸ்... ப்பா கடவுளே...'' என்றவரிடம், `இப்போ எப்படி இருக்கீங்க?' என்றோம். கலகலவெனச் சிரித்தார்.

``இப்ப நான் ஹைதராபாத்ல ஷூட்டிங்ல இருக்கேன். அரை மணி நேரம் முன்னாடிதான் உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பிச்சது. என்னடான்னு பார்த்தா, ரத்தப்போக்கு ஏற்பட ஆரம்பிச்சிருக்கு. கடந்த ஆறு மாசமா பீரியட்ஸ் ஆகாததால இனி பீரியட்ஸ் வராது, பிரச்னை தீர்ந்துடுச்சுன்னு நிம்மதியா இருந்தேன். இப்போ கையில பேடுகூட இல்லையே, என்ன பண்றதுனு யோசிச்சுட்டு உட்கார்ந்திருந்த நேரத்துலதான் உங்க போன் கால் வந்தது. ஆனா, முன்னாடி மாதிரி இனி பயப்படமாட்டேன்'' என்று தெம்பாகச் சிரிக்கிறார் நளினி. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு