பெண் கருவுறுதலும், பால் சுரத்தலும் இயற்கையின் கொடை. பதினான்கில் பூப்படைதலே பொருத்தமான

வயது. அடுத்த ஏழாண்டுகள் வரை கரு முட்டையைத் திரட்டித் திரட்டிக் கலைத்து ஒத்திகை பார்க்கும் கருப்பை, பெண்ணின் 21-வது வயதில் முழுமையான பக்குவத்துக்கு வருகிறது. பெண்ணுக்கு ஏழின் மடங்கிலும், ஆணுக்கு எட்டின் மடங்கிலும் பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆணாதிக்க உலகம் `எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிச்சுக்கோ’ என்று பொதுக் குரலில் பாடுகிறது.

ஒரு மாமரம், ஆயிரம் காய்களைக் காய்க்க ஆயிரம், ஈராயிரம் மலர்களை மட்டுமே மலர்த்துவதில்லை. லட்சக்கணக்கான மலர்களை மொட்டவிழ்த்து மகரந்தச் சேர்க்கைக்காகக் காத்திருக்கிறது. மகரந்தச்சேர்க்கை கூடிய அத்தனை பூக்களும் காய்களாவதில்லை. காயான அத்தனையும் முதிர்ந்து கனிவதுமில்லை. இயற்கை தன்னுள் ஓர் ஒத்திகை நிகழ்த்தி அதில் தேர்ந்தவற்றையே இன விருத்திக்காக அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. அதாவது சுவை மிகுந்த கனியாக்கித் தருகிறது. பழம் தன்னில் இருந்து நம்மை ஈர்க்கும் மதுரமான வாசத்தை உருவாக்கிக் கனியை உண்ணச் செய்து தன் விதையை வேறோர் இடத்துக்குக் கடத்தி இனத்தை விருத்தி செய்து கொள்கிறது. தன் கொட்டையைச் சுமந்து செல்ல அது நமக்கு அளிக்கும் கூலிதான் மாங்கனி.

காத்திருக்கும் கரு முட்டைகள் கருவணு கிடைக்கப் பெறாததால் குறிப்பிட்ட கால இடைவெளியில் (28 நாள்களில்) வெளியேறி விடுகின்றன. வீணான கருமுட்டையுடன் உடல்கழிவுகளும் நீங்கிப் பெண், புத்துடல் பெறுகிறாள். அதனால் தான் வளர்ந்த பெண்ணும், உடல் உபாதைகள் எதுவும் இல்லாத தாயும் அக்கா தங்கைப் போலத் தோற்றமளிக்கிறார்கள். கருமுட்டை உருவாதல் முற்றுப்பெறும்வரை எதிர்பாலினத்தைக் கவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இன்றைய வாழ்க்கைமுறையில் பெண்ணுடலில் மாதாந்திரக் கழிவு நீக்கம் ஒரே சீராக நடைபெறுவதில்லை. பூப்பெய்திய ஓரிரு ஆண்டுகளிலேயே தொடங்கும் இச்சிக்கல் திருமணத்துக்கு முந்தைய 25, 26 வயதுகளில் உச்ச நிலைக்குச் சென்று கருப்பைக் கட்டியாகவும் திரள்கிறது. பல பெண்களுக்கு பல மாதக் கணக்கில்கூட உதிரப்போக்கு ஏற்படுவதில்லை. பலருக்குக் குழந்தைப்பேறு குறித்த மனப்பதற்றத்தை உண்டாக்கி விடுகிறது. ஊருக்கு ஊர் `சடசட’வென்று வளர்ந்து நிற்கும் கருவாக்க மருத்துவமனைகளே இதற்குச் சாட்சி.

நவீன வாழ்க்கைமுறை நாளுக்குநாள் மனிதனை இயற்கையில் இருந்து அந்நியப்படுத்திக் கொண்டே வருகிறது. அதனால் மனித உடலில் இயற்கைக்கு முரணான பல சிக்கல்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மென்னுணர்வு மிகுந்த பெண்ணுடல் பூப்பெய்துவதில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் நீடிக்கிற தனித்துவமான உடல்நலத் தொல்லைகளின் பட்டியல் நீளமானது. உதிரப்போக்கு, ஹார்மோன் சுரப்பியில் ஏற்ற இறக்கங்கள், உடல் பருத்தல், கருவுறுதல், குழந்தை பெறுதல், பால் சுரப்பு, குழந்தை பெறுதலின் போதான நெருக்கடியால் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை (மயக்கத்தில் ஆழ்த்த, முதுகுத் தண்டில் செலுத்தப்படும் மருந்தின் வழியாக), அதற்குப் பின்னான தொல்லைகள், கர்ப்பப்பைக் கட்டி, மார்பகத்தில் (புற்றுக்) கட்டி, கருப்பைச் சிக்கலின் நீட்சியாக மூட்டு வலி போன்ற இவை அனைத்தும் நவீன வாழ்க்கை முறையால் தோன்றக்கூடியவை. பதின் பருவத்தில் தன்னைப் பள்ளிக்கும், தேர்வுக்கும் தயார்படுத்துதலில் தொடங்கி மேற்படிப்பில் அடுத்தடுத்த புராஜெக்ட், பொதுவெளியில் தன்னுடலை மேயும் கண்கள், பாலியல் சீண்டல் என நம் பெண்கள் மீது இறங்கும் மன - புற அழுத்தங்கள் ஏராளம். கிராமத்தில் இருந்து பறித்து நட்டு வைக்கப்பட்ட நகரத்தில் வீட்டுக் கதவுகள் அறைந்து சாத்தப்பட்டுக் கிடக்கின்றன. இந்நிலையில் அக்கம் பக்கத்து உறவுகளுடன் பெண், தன் மன அழுத்தங்களை, தனித்துவமான மர்மங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஏது இடம்? ஏது உறவு?

இயல்பிலேயே பெண்ணுடலானது, ஆணுடலைப் போலச் சதையாலும், தசை நார்களாலும் இறுகக் கட்டப்பட்டதல்ல. மாறாகச் சற்றே மிகுதியான கொழுப்புடன் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கிறது. பஞ்சபூதத் தத்துவ அடிப்படையில், ஆண் நெருப்பாகிய சூரியனின் ஆற்றலைக் கொண்டவன், உக்கிரமானவன். பெண்ணானவள் பூமியின் ஆற்றல் வடிவம். நீரைப் போன்று நெகிழ்வுத் தன்மை உடையவள். அவளது கருப்பையும்கூட நீரால் பராமரிக்கப்படுவதுதான். ஆணுடலில் ஏழிலிருந்து 10 சதவிகிதமாக இருக்கும் கொழுப்பு, பெண்ணுடலில் பருவத்துக்குப் பருவம் வேறுபட்டு 20-ல் இருந்து 30 சதவிகிதம்வரை இருக்கிறது. பெண்ணுடலில் இருக்கும் கொழுப்பு அவளுக்கு மென்மையான உடலைத் தருவதுடன் கவர்ந்து ஈர்க்கும் வண்ணம் சருமத்துக்கு மினுமினுப்பையும் தருகிறது. அத்துடன் அவள் உண்பதற்குச் சாத்தியமில்லாத காலத்தில் உடல், தனக்குத் தேவையான ஆற்றலுக்காகக் கொழுப்பைக் கரைத்து எடுத்துக் கொள்கிறது.

கொழுப்பு என்றதும் இன்றைய நவீனச் சிந்தனை மரபுப்படி அதை `கொலஸ்ட்ரால்’ என்றும் `ரத்த அழுத்தம்’ என்றும், `மாரடைப்பு’ என்றுமே கருதுகிறோம். அதேபோல் `உடல் பருமன்’ ஏற்படுத்தும் பீதியின் காரணமாக நல்ல செரிமானத்திறன் உள்ள வயதில் பெண்கள் தேங்காய்ச் சட்னியைக் கூடத் தவிர்க்கிறார்கள். சிலர் உடல் பருமனைத் தவிர்ப்பதாக நினைத்துக்கொண்டு அநியாயத்துக்கு ஒல்லிப் பிச்சானாக வறண்டு காணப்படுகிறார்கள். கொழுப்பை ஆற்றலின் சேமிப்பு வடிவம் என்றே புரிந்து கொள்ள வேண்டும். 40 வயதுக்குப் பிறகு நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு பற்றி யோசித்தால் போதும்.

பெண், பூப்பெய்தியதும் முதல் உணவாக இழந்த உதிரத்தை ஈடுசெய்யக் கோழி முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை வடித்துவிட்டு நல்லெண்ணையை ஊற்றிக் கலக்கி `அப்படியே’ குடிக்க வைப்பார்கள். போதிய உடல் உழைப்பும், வலுவும் இல்லாத இன்றைய பெண்ணின் செரிமானத் திறனுக்கு இந்த முரட்டுச் சத்துணவு பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. `பச்சைக் கவிச்சி’ வாசத்தை ஏற்க முடியாமல் அப்படியே வாந்தி எடுத்து விடக்கூடும். ஆனால் அதேநேரத்தில் சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோருக்குக் கவனம் வேண்டும். பூப்பெய்தும் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்துகிறார்களா என்ற கேள்வி அந்தரத்தில் தொங்குகிறது.

உதிரத்தைப் பெருக்கக்கூடிய எள் உருண்டையை இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் ஒரு சிலர் மட்டுமே அறிந்தும், சுவைத்தும் இருப்பார்கள். ஒரு பங்கு எள், இரண்டு பங்கு நிலக்கடலை, ஒரு பங்கு பனைவெல்லம், சிறிதளவு சுக்கு, ஏலக்காய் போட்டு இடித்தால் இந்தக் கலவை தானாகவே எண்ணெய்ப் பதத்துடன் நெகிழ்ந்து கொடுக்கும். இந்த எள் உருண்டையை வாரத்தில் இரண்டோ மூன்றோ உண்டால் உடலுக்கு அத்தனை ஆற்றலும், வலுவும் கிடைக்கும்.

நீண்ட நாள்களுக்குப் பின்னர் நெருக்கமான நண்பரைக் குடும்பத்துடன் மதிய உணவுக்காக வீட்டுக்கு அழைத்திருந்தேன். இந்த அழைப்புக்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னர்தான் அவரின் மகள் பூப்படைந்திருந்தாள். எனவே வெகு சிரத்தையுடன் எள் உருண்டையைத் தயாரித்து, கோலிக்குண்டு அளவு உருட்டி விருந்து இலையில் வைத்துவிட்டு, அதன் பலன் அருமை, பெருமைகள் குறித்துப் பேருரை ஆற்றினேன். அன்றைய விருந்தில் அமர்ந்திருந்த ஆறு பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் மறுபடியும் ஆளுக்கு ஒன்றிரண்டு வாங்கிச் சுவைத்தார்கள். யாரை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதோ அவள் மட்டும் – பாண்டிச்சேரி வட்டார வழக்கில் சொன்னால் – `ரவோண்டு’ சுவைத்துப் பார்த்துவிட்டு முகம் சுளித்துக் கொண்டு `ப்ளீஸ் வேணாம் அங்கிள்’ என்று மறுத்து விட்டாள். எள்ளின் கறுப்பு நிறமும், அதன் கசப்புச் சுவையும் அவளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விட்டது. எள்ளுருண்டையின் சிறப்பம்சமே அதன் ஆழத்தில் இருக்கும் கசப்புச் சுவைதான். கசப்புதான் உதிரத்தின் சிவப்பணுக்களைப் பெருக்கக்கூடியது.

ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று என்ற அளவில் மாவுடன் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் எந்த இனிப்புப் பலகாரமும் சுளீரென்று நாவின் சுவை மொட்டுகளைத் தாக்கி உச்சந்தலை வரை உரைக்கக்கூடியதாக இருக்கிறது. செயற்கை நிறமி கலந்த இனிப்புகளைப் பார்த்தும், சுவைத்தும் பழகிய நாவுக்கு இயற்கைத் தன்மை கெடாத, உடலுக்கு ஆற்றலை வழங்கும் எள் உருண்டை ஒவ்வாமல் போனதில் வியப்பேதும் இல்லை. வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்படும் இனிப்புகள் அனைத்தும் நாவின் சுவை மொட்டுகளைச் சிதைத்து மீண்டும் மீண்டும் தன்னை மட்டுமே உண்ணும்படி நம்மை அடிமைப்படுத்துவதுடன் பற்களையும், ஈறுகளையும், மண்ணீரலையும் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கின்றன.

செரிமானத்தில் முக்கியப் பங்காற்றும் ஈறும், மண்ணீரலும் பாதிப்புக்குள்ளானால் நமது ஒட்டுமொத்த செரிமான ஆற்றலும் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...

படங்கள்: ஆஸ்கர் காளிமுத்து,

மாடல்: ரெங்கநாயகி

பெண், பூப்பெய்தியதும் முதல் உணவாக இழந்த உதிரத்தை ஈடுசெய்யக் கோழி முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை வடித்துவிட்டு நல்லெண்ணையை ஊற்றிக் கலக்கி `அப்படியே’ குடிக்க வைப்பார்கள். போதிய உடல் உழைப்பும், வலுவும் இல்லாத இன்றைய பெண்ணின் செரிமானத் திறனுக்கு இந்த முரட்டுச் சத்துணவு பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. `பச்சைக் கவிச்சி’ வாசத்தை ஏற்க முடியாமல் அப்படியே வாந்தி எடுத்து விடக்கூடும். ஆனால் அதேநேரத்தில் சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோருக்குக் கவனம் வேண்டும்.