ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் வயதுக்கு வருகிற பருவம், கருத்தரிக்கிற பருவம், பெரி மெனோபாஸ், மெனோபாஸ் என்று நான்கு நிலைகள் உள்ளன. இந்த நான்கு நிலைகளிலும் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட தகவல்கள், அப்போது செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றை இங்கு விளக்கமாகச் சொல்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். இந்த இணைப்புப் புத்தகம், 13 வயதுச் சிறுமியில் இருந்து 50 வயது பெண்வரை பீரியட்ஸ் பற்றிய அவர்களின் அத்தனை சந்தேகங்களையும் போக்கும்.

முதல் நிலை

வயதுக்கு வந்த புதிதில்

மாதவிடாய் காலத்தில் மனரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும், மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்ரியா விளக்கம் அளிக்கிறார்.

‘ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம்’

மாதவிடாய், பெண்களுக்கு உடலில் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை, மன ரீதியாகவும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். உடலிலுள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு நிலை காரணமாக, இந்த மனநிலை மாற்றங்கள் ஏற்படும். அடிக்கடி கோபம் அடைவது, காரணமே இல்லாமல் எரிச்சல் அடைவது, சோகமாக உணர்வது, அழுவது, சில நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வது, சட்டெனச் சோர்வடைவது போன்ற உணர்வுகள் ஏற்படும். இந்த மனநிலை மாற்றங்களைத்தான் ‘ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம்’ (Pre Menstrual Syndrome - PMS) என்கிறோம். குறிப்பாக, இதனால் சில பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். பலரும் இதை இயல்பாகக் கடந்துவிட, சில பெண்கள் மட்டும் இதைப் பற்றிய விழிப்பு உணர்வு இன்மையால் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார்கள்.

சட்டென்று மாறுமா மனநிலை?

அப்படிச் சொல்ல முடியாது. அவரவர் உடலில் இருக்கும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு நிலையைப் பொறுத்துதான், ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம், மனநிலையில் மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தியாவில், 10 % முதல் 15 % பெண்கள்தான், இந்த சிண்ட்ரோமால் பாதிக்கப்படுகின்றனர். இது பரம்பரை நோயோ அல்லது பெண்களுக்குக் கட்டாயம் ஏற்படும் நோயோ கிடையாது. நம் பழக்கவழக்கங்கள், நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் உடல் மாற்றம். சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுவலி, கால்வலி ஏற்படும். திருமணமான பெண்களுக்கு, மாதவிடாய் வருவதற்கு முன், ‘நாம் இன்னும் கர்ப்பமாகவில்லையே’ என்ற கவலை மனதில் இருக்கும். மாதவிடாய் ஏற்படும்போது, அது எரிச்சலாகவோ, அழுகையாகவோ, கோபமாகவோ வெளிப்படும்.

சிகிச்சை என்ன?

ஏற்கெனவே சொன்னதுபோல, இதை இயல்பாகக் கடந்துவிடும் பெண்களுக்குப் பிரச்னையில்லை. இதன் வீரியம் அதிகமாக இருக்கும் பெண்கள் மட்டும், அதற்கான மருத்துவத்தை நாடலாம். இதற்காகச் சில மருந்துகள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் உடலைப் பொறுத்து, மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றை எடுத்துக்கொள்ளலாம். தவிர, இந்த நாள்களில் பொதுவான சில வாழ்வியல் முறைகளையும் பழகிக்கொள்ளலாம். உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பால், முட்டை போன்ற வைட்டமின் நிறைந்த உணவுகள், கீரை வகைகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காபி, டீ ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமனாக இருப்பவர்கள், வாக்கிங் அல்லது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.

ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம் பிரச்னை உள்ள பெண்களுக்கு, மெனோபாஸ் தொடங்குவதற்கு முந்தைய காலத்திலும் பாதிப்புகள் ஏற்படுமா?

மெனோபாஸ் என்பது ஹார்மோன் குறைபாடு. ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம் என்பது ஹார்மோன் சமநிலையின்மை. மறதி, கவனமின்மை, தன்னம்பிக்கையின்மை போன்ற உணர்வுகள் இந்த இரண்டிலுமே ஏற்படும் என்றாலும், இரண்டுமே வெவ்வேறு உடல்நிலை மாற்றங்கள். உடல்வலி, மூட்டுவலி, போன்ற உடல்ரீதியான பாதிப்புகளும் ஏற்படும். ஆனால், மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் பெண்களுக்கு, ‘விரைவில் நமக்கு மாதவிடாய் நின்றுவிடும்’ என்ற எண்ணம், மனதளவில் சற்றே நிம்மதியை ஏற்படுத்தும். ஆனால், கால்சியம் மற்றும் ஹார்மோன் குறைபாட்டால், சில உடல் உபாதைகள் ஏற்படலாம்.

ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கும், அதன் காரணமாக ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம் ஏற்படுமா?

மன அழுத்தத்துக்கும் ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோமுக்கும் சம்பந்தம் இல்லை. மன அழுத்தத்தால் பிஎம்எஸ் ஏற்படாது. என்றாலும், ஏற்கெனவே ஸ்ட்ரெஸ் மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு, பிஎம்எஸ் பாதிப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

இரண்டாம் நிலை

கருத்தரிக்கிற பருவம்

மாதவிடாய் காலத்தில் முக்கியமான காலம், இனப்பெருக்கச் சுழற்சிக் காலம் (Reproductive Age Circle). இதைப் பற்றி விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் கனிமொழி.

* பொதுவாகப் பெண்களுக்கு, 18 வயது முதல் 44 வயது வரை இனப்பெருக்கச் சுழற்சிக் காலம் ஏற்படும்.

* 21 வயது முதல் 35 வயது வரையிலான மாதவிடாய் சுழற்சியின்போது, கருவுறுதலில் உச்சம் (Peak Of Fertility) ஏற்படும். அந்த நேரத்தில் கர்ப்பம் அடைந்தால் எந்தக் குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாகக் குழந்தை பிறக்கும்.

* 28 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படும் மாதவிடாய் சுழற்சி, நார்மல் சைக்கிள் (Normal Cycle).

* 24 நாள் முதல் 35 நாள்களுக்குள் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி, ரெகுலர் சைக்கிள் (Regular Cycle).

* 24 நாள்களுக்குக் குறைவான இடைவெளியில் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி, ஷார்ட் சைக்கிள் (Short Cycle).

* மாதவிடாய் சுழற்சி இடைவெளி 35 நாள்களுக்கு மேல் அதிகரித்தால் அது ‘ஆலிகோமெனோரியா’ (Oligomenorrhea).

* ஷார்ட் சைக்கிளும், ஆலிகோமெனோரியாவும் ஹார்மோன் குறைபாடு அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட ஏதாவது பிரச்னை இருந்தால் ஏற்படும்.

* சீரான இடைவெளியில் ஏற்படும் நார்மல் சைக்கிள் பீரியட்ஸின் சுழற்சியை இரண்டாகப் பிரிக்கலாம்.ஃபாலிக்குலர் பேஸ் (Follicular Phase) மற்றும் லூட்டியல் பேஸ் (Luteal Phase)

* ஃபாலிக்குலர் பேஸ் என்பது, மாதவிடாய்க்குப் பிறகான 14 நாள்கள். கர்ப்பப்பையில் மாதாமாதம் நிறைய கருமுட்டைகள் வளரும். எந்த முட்டைக்கு அதிகளவில் நுண்ணுயிர் ஊக்கப்படுத்தும் ஹார்மோனை (Follicle Stimulating Hormone) வாங்கிக் கொள்கிற தன்மை இருக்கிறதோ, அந்த முட்டைதான் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியை அடையும்.

* ஒரு முட்டை மட்டும் பெரிதாக வளர ஆரம்பித்ததும், மற்ற முட்டைகளுக்கெல்லாம் ஹார்மோன் சப்ளை கிடைக்காமல் அழிந்துபோகும். பெரிதாக வளர்ச்சியடைந்த முட்டை ஈஸ்ட்ராடயால் (Estradiol) என்கிற ஹார்மோனைச் சுரக்கும். அந்த ஹார்மோன் தேவையான அளவுக்குச் சுரந்த பிறகு, எல்ஹெச் (LH) என்கிற ஹார்மோன் அதிகமாகும். மாதவிடாயின் 12, 13-வது நாள் ஈஸ்ட்ரோடயால் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பின்னர், எல்ஹெச் ஹார்மோன் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கும். அது சுரக்க ஆரம்பித்து 18-லிருந்து 36 மணி நேரத்துக்குள்ளாக, கருப்பையில் பெரியதாகி இருக்கிற முட்டை 18 மி.மீட்டரிலிருந்து 20 மி.மீட்டர் வரை வளர்ந்திருக்கும். அப்போது, எல்ஹெச் ஹார்மோன் அதிகரித்து அந்தக் கருமுட்டையானது கருப்பை நுண்ணறையில் இருந்து வெளியேறும். அந்த நேரத்தில் ஒரு பெண் உறவு மேற்கொள்ளும்போது கர்ப்பம் தரிக்க வாய்ப்புண்டு.

* 18 முதல் 36 மணி நேரம் எல்ஹெச் ஹார்மோன் அதிக அளவில் இருக்கும். அதன் பிறகு, அந்த முட்டை எப்போது வேண்டுமானாலும் நுண்ணறையில் இருந்து வெளிவரலாம். அந்த நேரத்திலும் கர்ப்பம் தரிக்க நேரிடும்.

* எல்ஹெச் ஹார்மோன் குறைந்த பின்னர், கர்ப்பம் தரித்திருந்தால், புரொஜெஸ்ட்ரோன் (Progesterone) என்கிற ஹார்மோன் சுரக்கும். பொதுவாக 5 முதல் 6 நாள்களில் கரு, கருப்பையில் உட்காரும். ஒருவேளை கர்ப்பம் தரிக்கவில்லை எனில், 21-வது நாளில் கார்பஸ் லூட்டியம் (Corpus Luteum) சுருங்க ஆரம்பித்து, அடுத்த சைக்கிளுக்குத் தேவையான சுழற்சியை மேற்கொள்ள ஆரம்பித்துவிடும். அதற்கடுத்து, கார்பஸ் லூட்டியம் விரிவதற்கு ஒரு வாரம் ஆகும். அதன் பிறகு, கருவுறாத முட்டை மாதவிடாயாக வெளியேறும்.

* மாதவிடாயின் 21-வது நாளில் கர்ப்பமாகி இருந்தால், 21-லிருந்து 28-வது நாளில் புரொஜெஸ்ட்ரோன் (Progesterone) ஹார்மோன் அதிகரித்து, பிரீயட்ஸ் சுழற்சியின்போது ஏற்படும் கருமுட்டை வளர்ச்சியைத் தடுக்கும். இதை லூட்டியல் பேஸ் என்பார்கள்.

* சுழற்சிக் காலத்தில் 14-வது நாளுக்கும், 15-வது நாளுக்கும் இடையில் நடைபெறும் சுழற்சி ‘ஓவுலேஷன்’ (Ovulation) எனப்படும். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், கரு முட்டை வெளிப்படுவதுதான் ஓவுலேஷன். இந்த ஓவுலேஷன் நடந்தால்தான் ஃபாலிக்குலர் பேஸும், லூட்டியல் பேஸும் இரண்டாகப் பிரிந்து அதனதனுடைய சுழற்சியை மேற்கொள்ளும்.

* ஷார்ட் சைக்கிளாக பீரியட்ஸ் சுழற்சி இருந்தால் அதற்குத் தைராய்டு பிரச்னைகள், மெனோபாஸ் அல்லது கர்ப்பப்பைப் பிரச்னைகள் காரணமாக இருக்கலாம்.

* ஒருவேளை 45 முதல் 50 நாள்கள் வரையிலான இடைவேளையில் பலமுறை பீரியட்ஸ் தள்ளி வருகிறது எனில், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

மூன்றாவது நிலை

பெரி மெனோபாஸ்

மாதவிடாய் முழுமையாக நின்றுவிடுகிற நிலையின் பெயர் மெனோபாஸ். இந்த மெனோபாஸ் நிலையை அடைவதற்கு முந்தைய 4 முதல் 5 வருடங்களைத்தான் ‘பெரி மெனோபாஸ்’ என்போம். இந்த இரண்டு நிலைகளைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்க்கிறார், மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ்.

பெரி மெனோபாஸைக் கண்டறியப் பரிசோதனைகள் இருக்கின்றனவா?

பெரி மெனோபாஸைக் கண்டறியப் பரிசோதனைகள் இல்லை. அதற்குப் பதில், பெரி மெனோபாஸைத் தவிர்த்து, பீரியட்ஸ் விட்டுவிட்டு வருவதற்கு மற்றக் காரணங்களான தைராய்டு, ஹீமோகுளோபின் குறைபாடு, கருப்பையில் நார்க்கட்டிகள், எண்டோமெட்ரியல் பாலிப்ஸ் போன்றவற்றுக்கானப் பரிசோதனைகளைச் செய்து பார்க்கலாம். இந்தப் பரிசோதனைகளின் ரிசல்ட் நார்மல் என்றால், நீங்கள் பெரி மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பெரி மெனோபாஸ் நேரத்தில் உடம்பிலும் மனதிலும் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

* மாதவிடாய் 2 முதல் 4 மாதங்களுக்கு ஒரு முறைதான் ஏற்படும். இந்தக் கணக்கு நபருக்கு நபர் மாறுபடும்.

* பிரீயட்ஸாகும் நாள்கள் கூடும் அல்லது குறையும். அதேபோல, வெளியேறும் ரத்தத்தின் அளவும் அதிகமாகும் அல்லது குறையும்.

* கருமுட்டையின் உற்பத்தியும், ஹார்மோன் சுரப்பும் குறையும்.

* இரவில் ஏ.சி அறையில் படுத்திருந்தாலும்கூட திடீரென உடல் வியர்க்க ஆரம்பிக்கும்.

* காரணமே இல்லாமல் அழுகை, கோபம், வருத்தம் என்று அவதிப்படுவார்கள்.

பெரி மெனோபாஸுக்குச் சிகிச்சைகள் இருக்கின்றனவா?

ஈவினிங் பிரிம் ரோஸ் ஆயில் கேப்சூலை தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒன்று எடுத்துக்கொள்ளலாம். பக்க விளைவுகள் ஏற்படாது. இதைத் தவிர, வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஸ்ட்ரெஸ்ஸைத் தவிர்க்க வேண்டும். வாய்விட்டுச் சிரிக்க மறக்காதீர்கள், டீ, காபியைக் குறையுங்கள். காரமும் மசாலாவும் அதிகமான உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளைத் தவிருங்கள்.

நான்காவது நிலை

மெனோபாஸ்

உலகளவில் பெண்களுக்கான மெனோபாஸ் வயது 50.8. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 46 அல்லது 47 வயதிலேயே மெனோபாஸ் ஏற்பட்டுவிடுவதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி முற்றுப்பெற்றுவிடும் நிலையைத்தான் மெனோபாஸ் என்கிறோம். தொடர்ந்து 12 மாதங்களுக்கு பீரியட்ஸ் வராமல் இருந்தால், அதை மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்டதாக உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஐந்தாறு மாதங்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வருவதை, மெனோபாஸ் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.

மெனோபாஸ் அறிகுறிகள்

உடம்பு திடீரென்று சூடாகிவிடும். சில நேரங்களில் சில்லென்றும் ஆகும். பிறப்புறுப்பு வறண்டுபோகும். இதனால் தாம்பத்ய உறவுகொள்ளும்போது வலி, சில நேரங்களில் லேசான ரத்தப்போக்குகூட ஏற்படலாம். உடல் பருமனாகும். தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். மன அழுத்தம் ஏற்படும்.

தீர்வுகள்

மெனோபாஸ் காலத்தில் பருத்தி உடைகளை அணியலாம். உறவுக்கு முன்னால் பிறப்புறுப்பில் வஜைனல் க்ரீம் தடவிக்கொள்ளலாம். யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படும்போது ஈஸ்ட்ரோஜென் க்ரீமை உபயோகிக்கலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். சரிவிகித உணவு எடுத்துக்கொண்டால் முடி கொட்டுவது கட்டுப்பாட்டில் இருக்கும். மன அழுத்ததுக்கு யோகா செய்வது, இசை கேட்பது மாதிரியான விஷயங்களைப் பின்பற்றலாம். ஈவினிங் பிரிம் ரோஸ் ஆயில் கேப்சூலை மெனோபாஸுக்குப் பிறகும் தினம் ஒன்று என இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடலாம். இந்த மாத்திரையைச் சாப்பிட்ட சில நாள்களுக்குள் வித்தியாசம் தெரியாது என்பதால், மருத்துவர் பரிந்துரைக்கிற காலம்வரை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் ஆபத்தான அறிகுறிகள்

* பெரி மெனோபாஸ் பருவத்தில் தொடர்ந்து 15 நாள்கள், 20 நாள்கள் என்று அதிக ரத்தப்போக்கு இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.

* இரண்டு மாதவிடாய்க்கான இடைவேளை நாள்களில் அவ்வப்போது ரத்தப்போக்கு இருந்தால், அது ஆரோக்கியமான விஷயம் கிடையாது.

* தாம்பத்ய உறவுக்குப் பிறகு ரத்தக்கசிவு இருந்தால், அது உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

* கருப்பையில் பாலிப்ஸ் என்கிற சிறு சிறு கட்டிகள் அல்லது கேன்சர் இருந்தால்தான், இப்படிப்பட்ட திடீர் ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால், மேலே சொன்ன மூன்று அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.

மாதவிடாய் நாள்கள் குறித்துப் பெண்களுக்கு ஏற்படும் சில அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர் ஆனந்தப்பிரியா.

உடற்பயிற்சி செய்யலாமா?

மாதவிடாய் நாள்களின்போதுக் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அந்நாள்களில் ஹார்மோன்களின் சுரப்பினால் உடலில் ஏற்படும் சில மாறுபாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும்.

மேலும், அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, சில குறிப்பிட்ட நிலைகளில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம். குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாள்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அப்படி அவசியம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் பயிற்சிகள் போன்றவற்றைச் செய்யலாம்.

யோகாசனம் செய்யலாமா?

வழக்கமாக யோகாசனம் செய்யும் பழக்கம் உள்ள பெண்கள், மாதவிடாய் நாள்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய வகை ஆசனங்களைச் செய்யலாம். கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் மாறுபடும் என்பதால் தலைகீழாக நிற்கும் யோகாசனங்களைத் தவிர்க்கவும். ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாள்களில், உடலுக்குச் சிரமம் தர வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் கருத்து. அதைத்தாண்டி அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய வகைப் பயிற்சிகளைச் செய்துகொள்ளலாம்.

தாம்பத்யம் வைத்துக்கொள்வது சரியா?

மாதவிடாய் நாள்களில் கர்ப்பப்பையின் உட்சுவர் சிறிது பலவீனமாக இருக்கும்; அடிவயிற்றில் லேசான வலி இருந்துகொண்டே இருக்கும்; உதிரப்போக்கால் உடல் சோர்வடைந்திருக்கும். இந்நேரத்தில் பெரும்பாலான பெண்கள் தாம்பத்யத்தை விரும்புவதில்லை. மேலும், உதிரப்போக்கு இருக்கும் இந்நாள்களில் உறவுகொள்ளும்போது, தொற்றுநோய்க்கு வாய்ப்புகள் அதிகமாகும். சில பெண்களுக்கு, இது அடுத்தடுத்த மாதவிடாய் சுழற்சியில் ரத்தபோக்கு, வலி, எரிச்சல், கர்ப்பப்பையில் கட்டி போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, அந்த நாள்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள்

* பொதுவாக மாதவிடாய் நாள்களில் வழக்கத்தைவிட உடல் சற்று சூடாக இருக்கும். எனவே காலை, மாலை என இரண்டு வேளைகள் குளிக்கலாம்.

* மாதவிடாய் காலத் தாம்பத்யத்துக்குப் பிறகு பிறப்புறுப்பை வெந்நீரால் சுத்தம் செய்வது அவசியம்.

* நாப்கின் பயன்படுத்துகிறீர்கள் எனில் நான்கு மணிநேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றுவது அவசியம்.

* மென்ச்சுரல் கப் பயன்படுத்துபவர்கள் அதை வெந்நீரில் அலசிக் காயவைத்துப் பின்னர் பயன்படுத்த வேண்டும்.

* ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் பிறப்புறுப்பைச் சுத்தமாகக் கழுவுவது அவசியம்.

மாதவிடாயின்போது பெண்களுக்கு ஏற்படும் துர்நாற்றம் இயல்பானதா?

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் தொற்றினால் சில நேரங்களில் துர்நாற்றம் ஏற்படலாம். அல்லது, நாப்கினில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்களுடன் மாதவிடாய் உதிரம் வினைபுரிந்து ஏற்படும் ரசாயன மாற்றம், ஒருவித ஒவ்வாத மணத்தை உண்டாக்கலாம். அது பற்றிப் பயப்பட வேண்டாம்.

மாதவிடாய் நாள்களில் படுத்தும் வயிற்றுவலி, இடுப்பு வலி மற்றும் இன்னபிற இம்சைகளுக்கு இயற்கையான முறையில் தீர்வுகள் சொல்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.

சூதகவலி

வயிற்றைச் சுருட்டிக்கொண்டுப் படுத்திருப்பதோ அல்லது கைகளை வயிற்றில் அழுத்திக்கொண்டுப் படுத்திருப்பதோ அல்லது இயல்பான நிலையில் இல்லாமல் இருப்பதோ மாதவிடாய் நாள்களில் நிறைய பேருக்கு ஏற்படும். இந்த நிலையை ஆங்கிலத்தில் ‘டிஸ்மெனோரியா’ (Dysmenorrhea) என்றும், தமிழில் ‘சூதகவலி’ என்றும் குறிப்பிடுவார்கள்.

காரணங்கள்

இரும்புச்சத்து குறைவாக இருப்பதாலோ, நீர்க்கட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலோ, கருப்பையினுள்ளே இருக்கும் படலத்தின் ரத்த அழுத்தம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலோ இப்படியான வலிகள் ஏற்படக்கூடும்.

தீர்வுகள்

* உணவில் தோலோடு கறுப்பு உளுந்தை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அரிசி ஒரு பங்கும், உளுந்து இரு பங்கும் சேர்த்து மூன்று மடங்கு நீரில் குழைவாக வேகவிட்டு உளுந்தங்கஞ்சியாகப் பருகலாம்.

* ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். இது கர்ப்பப்பையிலிருக்கும் அழுக்குகளை நீக்கும்.

* பெரும்பங்கு உளுந்தமாவும், குறைந்த அளவு அரிசி மாவும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், பனங்கருப்பட்டிப் பாகைக் காய்ச்சி அதனுடன் உளுந்த மாவு, அரிசி மாவு கலவையைச் சேர்க்க வேண்டும். இம்மூன்றையும் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி உளுந்தங்களியாக்கிச் சாப்பிடலாம்.

* மாதவிடாய் தொடங்குவதற்கு ஐந்து, ஆறு நாள்களுக்கு முன்னரே உளுந்தங்கஞ்சியையோ அல்லது உளுந்தங்களியையோ உண்ணத் தொடங்கிவிட வேண்டும்.

* முதன்முறையாகப் பூப்பெய்தியுள்ள குழந்தைகளுக்குக் கட்டாயமாக உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி கொடுக்க வேண்டும். ஏனெனில், கருப்பையில் இருக்கும் சுவர்களை வலுப்படுத்துவதற்கு உளுந்து உதவியாக இருக்கும்.

* சிலருக்கு ரத்தப்போக்கு சரிவர இல்லாமல் இருக்கும். ஆனால், அதிகளவு வயிற்றுவலி ஏற்படும். அவர்களுக்கு எள் ஏற்றது. பொதுவாக, இரும்புச்சத்தை அதிகரிப்பதற்கு எள் சாப்பிடலாம்.

வயிற்றுவலிக்கு உடனடித் தீர்வு

வெந்தயத்தைப் பவுடராக்கியோ அல்லது சிறிதளவு மென்று சாப்பிட்டாலோ உடனடியாக வயிற்றுவலியில் இருந்து விடுபட முடியும். பெருஞ்சீரகத்தைச் சிறிதளவு தண்ணீருடன் காய்ச்ச வேண்டும். இந்தச் சோம்புக் கஷாயம் வயிற்றுவலிக்கு உடனடித் தீர்வாக இருக்கும்.

அதீத ரத்தப்போக்கிற்கு

வாழைப்பூ பொரியல் அல்லது வாழைப்பூ சாறு எடுத்துக் கொண்டால் அதீத ரத்தப்போக்கைக் குறைக்கலாம்.

குளுக்கோஸ் மெட்டபாலிசம்

சர்க்கரை நோயைக் குணப்படுத்தக்கூடிய ரசாயனங்கள் வெந்தயத்தில் உள்ளன. அதேபோன்று வெந்தயத்தில் நார்ச்சத்தும் இருக்கிறது. பிசிஓடிக்கும் சர்க்கரை மெட்டபாலிசத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. ரத்தத்தில் இன்சுலினின் அளவு அதிகரிக்கும்போது தான் நீர்க்கட்டி உருவாகிறது. இதனால், பிசிஓடி உள்ளவர்கள் அதிக அளவில் வெந்தயத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

உடம்பில் எந்தெந்த செல்களுக்கு ஆற்றல் தேவைப்படுகிறதோ அந்தந்த செல்களுக்கு ரத்தச் சர்க்கரையைக் கடத்துவதற்குப் பயன்படும் மெட்டபாலிசத்தையே ‘குளுக்கோஸ் மெட்டபாலிசம்’ என்கிறோம்.

- ஆ.சாந்திகணேஷ்,
- எம்.ஆர்.ஷோபனா,
- வெ.வித்யா காயத்ரி,
- சு.சூர்யா கோமதி

உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.