`ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி' - சுருக்கமாக `ஆர்.ஓ.பி'. பிறந்த பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் பார்வைக் கோளாறு. பிறந்ததும் இந்த உலகின் அழகை ரசிக்க வேண்டிய குழந்தைக்கு, அது சூன்யமாகிப் போகும் துயரத்தைக் கொடுப்பதுதான் ஆர்.ஓ.பி.

இந்தப் பிரச்னையின் பின்னணி, தீர்வுகள், தவிர்க்கும் முறைகள் என எல்லாவற்றையும் விளக்குகிறார் விழித்திரை சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

ஆர்.ஓ.பி என்றால் என்ன?

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு - அதாவது, 1250 கிராமுக்கும் குறைவான எடையுடன் அல்லது 35 வாரங்கள் முடிவடைவதற் குள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஒருவகையான பார்வைக் கோளாறுதான் `ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி'. இப்படிப் பிறக்கும் குழந்தை களுக்கு இரண்டு கண்களிலும் பார்வை பாதிக்கப்படலாம். பார்வையிழப்பு நிரந்தரமாகி, வாழ்நாள் முழுவதும் இருண்ட உலகத்தை நிரந்தரமாக்கலாம்.

ஏன் ஏற்படுகிறது?

கர்ப்பத்தின்போது, உள்ளே வளரும் கருவின் விழித்திரையின் மையப்பகுதியில் அசாதாரண ரத்தக் குழாய்கள் உருவாகும். அவை கிளைவிட்டு, விழித்திரையின் வெளிப்பகுதி வரை நீளும். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக இருக்கவேண்டிய ரத்தக் குழாய் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, அசாதாரண ரத்தக்குழாய்கள் வளர்வதால் அவர்களின் கண்களுக்குள் ரத்தக்கசிவு ஏற்படலாம். இந்தப் பிரச்னை, குழந்தை பிறந்ததும் வெளிப்படையாக எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. விழித்திரை சிறப்பு மருத்துவரால் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும். எனவேதான், குறைப்பிரசவக் குழந்தைகளுக்கும் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும், பிறந்த உடனேயே கண் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

அலட்சியப்படுத்தாதீர்கள்!

விழித்திரை விலகுதல், கிட்டப்பார்வை, மாறுகண், சோம்பேறிக்கண், கண் அழுத்த நோய் போன்ற பல பிரச்னைகளுக்கும் காரண மாகலாம் என்பதால், ஆர்.ஓ.பி பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. அலட்சியப் படுத்தினால் குழந்தை நிரந்தரமான பார்வை யிழப்பைக்கூட சந்திக்க நேரலாம். ஆபத் தில்லாத நிலையிலிருந்து, விழித்திரை விலகும் ஆபத்தான நிலைவரை இந்தப் பிரச்னையில் ஐந்து நிலைகள் உள்ளன. பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைகளும் வேறுபடும்.

என்ன தீர்வு?

ஆரம்ப காலத்தில் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து செய்யப்படும் `க்ரையோ தெரபி' சிகிச்சை மட்டுமே இதற்கான தீர்வாக இருந்தது. இன்று மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் மயக்க மருந்தின் தேவையின்றி, லேசர் முறையில் 30 நிமிடங்களில் செய்துமுடிக்கும் அட்வான்ஸ்டு சிகிச்சைகள் வந்துவிட்டன.

தவிர்க்க முடியுமா?

* குறைப்பிரசவங்களைத் தடுப்பதுதான் முதல் தீர்வு.

* குறைப்பிரசவத்துக்குக் காரணமான தொற்று களைத் தவிர்ப்பதன்மூலம் இது ஓரளவுக்கு சாத்தியமாகும்.

* கர்ப்பிணிகள் நோய் எதிர்ப்புத்திறன் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உணவு, உறைவிடம், கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என எல்லாவற்றிலும் கவனம் அவசியம்.