Published:Updated:

உயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்?

உயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்?
பிரீமியம் ஸ்டோரி
உயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்?

ஜெயஸ்ரீ கஜராஜ் மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

உயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்?

ஜெயஸ்ரீ கஜராஜ் மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

Published:Updated:
உயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்?
பிரீமியம் ஸ்டோரி
உயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்?

ரு பெண் கருத்தரித்தவுடன் வாந்தி வருவதில் ஆரம்பித்து, உதிரப்போக்கு, நீரிழிவு, ரத்த அழுத்தம் என்று கர்ப்பகாலத்தில் எக்கச்சக்க பிரச்னைகள் வரிசைகட்டி வரும். அவற்றில் ஒன்றுதான் மூன்றாவது ட்ரைமெஸ்டரில் வருகிற ‘ஹெல்ப் சிண்ட்ரோம்’ (HELLP Syndrome). இந்தப் பிரச்னை வருவதற்குக் காரணம் என்ன, யாருக்கெல்லாம் ஏற்படும், தீர்வுகள் என்னென்ன? - மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ் விளக்குகிறார்.

உயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்?

ஹெல்ப் சிண்ட்ரோம் என்றால் என்ன?

கர்ப்பிணிகளுக்கு அரிதிலும் அரிதாக வருகிற பிரச்னை இது. கட்டுப்படுத்த முடியாத ரத்த அழுத்தம்தான் இதற்குக் காரணம். பெயர் ஒன்றாக இருந்தாலும், மூன்று தனித்தனி பிரச்னைகள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் கர்ப்பிணியைத் தாக்குவதுதான் இந்தக் குறைபாடு.

ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது, நுரையீரலுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிற ரத்தச் சிவப்பு அணுக்கள் உடைய ஆரம்பிக்கும்.

சிவப்பு அணுக்கள் உடைய ஆரம்பித்தவுடன் உணவைச் செரித்து, ரத்தத்தைச் சுத்திகரித்து, ஆற்றலைச் சேகரித்துவைக்கிற கல்லீரலில், அதன் என்ஸைம்கள் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் கல்லீரல் வீங்கத் தொடங்கும். இதைத் தொடர்ந்து சிறுநீரில் புரதச்சத்து அதிகமாக வெளியேற ஆரம்பித்துவிடும். அதன் விளைவாக முகம், கைகால் எல்லாம் வீங்க ஆரம்பித்துவிடும். பொதுவாக காயம்பட்டு ரத்தம் வெளியேற ஆரம்பித்தால், ரத்தத்தை உறையவைத்து நம் உயிரைக் காப்பாற்றுவது ரத்தத்தட்டுகள் (ப்ளேட்லெட்ஸ்). ஹெல்ப் சிண்ட்ரோம் பிரச்னை ஏற்பட்டால், இந்த ரத்தத்தட்டுகள் மளமளவெனக் குறைய ஆரம்பித்துவிடும். டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான பலர் மரணத்தைச் சந்திக்க இந்த ரத்தத்தட்டுகள் குறைவதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்?யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது?

இதற்கான பதில் இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. பரிசோதனை அளவில்தான் இருக்கிறது.

அறிகுறிகள்

* ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது தலைவலி, வயிற்றின் வலது பக்கம் வலி, பார்வை மங்குதல், வாந்தி போன்றவை ஏற்படும்.

* ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த முடியாமல், அது ஹெல்ப் சிண்ட்ரோமாக மாறும்போது கல்லீரலுக்குள், உடம்புக்குள் ரத்தக்கசிவு ஏற்பட ஆரம்பித்துவிடும்.

* ரத்த அழுத்தத்துக்கு ஊசிபோட்டால், ஊசி குத்தும் இடத்திலிருந்து ரத்தம் வழியும்.

* இவை ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ரத்த நாளங்களில் எல்லாம் சின்னச் சின்ன ரத்தத் தட்டுகள் போய் அடைத்துக்கொள்ளும்.

* மொத்தத்தில் ரத்த உறைவு முறையே செயலற்றுப்போயிருக்கும்.

உயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்?

பரிசோதனைகள்

ரத்த அழுத்தம், கல்லீரல் செயல்பாடு சோதனை, சிறுநீரகச் செயல்பாடு சோதனை, ரத்த அளவை சோதனை (Complete Blood Count), வயிற்றின் வலது பக்கத்தில் வலி இருந்தால் கல்லீரலுக்குள் ரத்தக்கசிவு இருக்கிறதா என்று பார்க்க அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் ஆகியவற்றைத் தொடர்ந்துசெய்து, தாயின் உடல்நிலையைக் கண்காணித்துக்கொண்டே வருவோம். பிரச்னை கை மீறுகிறது என்றால், கருவுக்கு ஏழு மாதங்கள் முடிந்தவுடனேயே தாமதிக்காமல் டெலிவரி செய்துவிடுவோம். தவறினால், தாயைக் காப்பாற்றுவது கடினமாகிவிடும்.

இரண்டாவது முறை கருத்தரிக்கும்போதும் இந்தப் பிரச்னை ஏற்படுமா?

ரத்த அழுத்தம் வேண்டுமானால் இரண்டாவது தடவை கருத்தரிக்கும்போதும் ஏற்படலாம். ஆனால், ஹெல்ப் சிண்ட்ரோம் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை.

ஹெல்ப் சிண்ட்ரோம் பிரச்னையில் இருந்து தாயை எப்படிக் காப்பாற்றுவது?


குறைமாதக் குழந்தைகளையும் காப்பாற்ற முடிகிற அளவுக்கு பச்சிளம் குழந்தை மருத்துவம் வளர்ந்துவிட்டதால், குழந்தையைப் பிரசவிக்கச் செய்து, தாயின் உயிரைக் காப்பாற்றிவிட முடிகிறது. எனவே கவலை வேண்டாம்.

- ஆ.சாந்தி கணேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism